22 ஜூலை, 2020

சாதனையாளர்கள் : டாக்டர் இட்லி இனியவன்


சாதனையாளர் : டாக்டர் இட்லி இனியவன் 

கஷ்டப்படாமல் Business செய்ய முடியாது

DR IDLY INIYAVAN

Hard Work | Josh Talks Tamil
681,656 views•Nov 20, 2018

ஜோஷ் TALKS   


413K subscribers

வறுமையை வென்று சாதனை சிகரத்தைத் தொட விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியமானவை. பல இன்னல்களைக் கடந்து சாதிக்கத் துணிந்த ஒருவர் கொண்டு வந்த சிறிய மாற்றம் உலகளவில் தமிழனின் பெருமையைக் கொண்டு சென்றுள்ளது.

கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தின் நிறுவனரான இட்லி இனியவன் தான் கடந்து வந்த சவால்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பகிர்கின்றார். ஒரு வேளை உணவுக்காகப் பள்ளிக்கு செல்லும் நிலையிலிருந்து, வெவ்வேறு பணிகளை செய்து வந்தார். செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டுடன் செய்யத் தொடங்கிய இனியவன் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். பின் இட்லி கொண்டு செல்லப் பயன்பட்ட ஆட்டோ தொழிலிருந்து இட்லி தொழிலில் முழு நேரமாக ஈடுபடத் தொடங்கினார். இன்று அத்தொழிலில் கொண்ட ஆர்வத்தின் பயனாக, இனியவன் அவர்களின் பிறந்த நாளை உலக இட்லி தினமாக கொண்டாடுகிறோம்.

இக்காணொளியில் இனியவன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைத்து தொழில் செய்பவர்களும் தங்களால் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால்  விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும்  ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக  தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து,  300கும் மேற்பட்ட  கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான  இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது.  ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த,  ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

Grateful thanks to DR IDLY INIYAVAN, ஜோஷ் TALKS and YouTube.

கருத்துகள் இல்லை: