18 ஜூலை, 2020

கவிதை நேரம்!

நெல்லையப்பனின் கவிதை நண்பரின்  பேசும்படத்திற்கு!

மனிதன்
புத்திசாலி அல்லவா?

காடுகளை முற்றுமாய்
அழித்தொழித்து
கான்கிரீட் காடுகளை
வளர்த்தெடுத்து,

புத்தருக்கு எங்கே
ஞானம் பிறந்தது?

கட்டபொம்மனை எதில்
தூக்கிலிட்டார்கள்?

CO2 குடித்து O2
வெளிவிடும் உயிரி எது?

அடுத்தடுத்த தலைமுறை
கேள்வி கேட்கும் போது

உயிருள்ள ஒருமரமாவது
சுட்டிக்காட்ட வேண்டாமா?

மனிதன் 
புத்திசாலி அல்லவா!


கருத்துகள் இல்லை: