தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞரும் மார்க்சிய சிந்தனையாளருமான
திரு கோவை ஞானி (வயது 85) அவர்கள் காலமானார்.
கோவையில் 1935-ம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றவர்.
கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகாலம் பணியாற்றியவர்.
மார்க்சிய நெறியில் தமிழ் இலக்கியம் குறித்து 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டவர்.28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள்,
5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார்.
அவரது தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் விளக்கு விருது (1998), கனடா தமிழிலக்கியத் தோட்ட 'இயல்' விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய 'பரிதிமாற் கலைஞர்' விருது (2013) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
பன்முகத் தன்மை வாய்ந்த கோவை ஞானி இறுதி மூச்சுவரை தமிழ் ஆய்வுலகில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்தவர். முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் இன்று முற்பகல் கோவையில் திரு ஞானி அவர்கள் காலமானார்.
நன்றி: சைதை மா.அன்பரசன் மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக