17 ஜூலை, 2020

கருத்து மேடை : கடவுளுக்கு நன்றி !


அமிதாப் பச்சன் , ஐஸ்வர்யா ராய்க்கு லாம் கொரனாவாம். அவர்களாம் எவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்வாங்க. இந்த மாதிரி நேரத்துல சுத்தத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருப்பாங்க. மைதானம் மாதிரி தனி ரூம், எங்க போக வேண்டுமேன்றாலும்  விலையுர்ந்த தனி கார், உதவி செய்ய வேலைக்காரர்கள். தனக்கு கொரனா வந்துவிட கூடாதுனு என்று எவ்வளவு பாதுகாப்பா இருந்து இருப்பாங்க. இதுக்கே எவ்வளவு செலவு பண்ணிருப்பாங்க. ஆனால் அதையும் தாண்டி கொரணா வந்தது ஆச்சரியமாதான் இருக்கு.

ஆனால் நாம பஸ்ல தான் வேலைக்கு போனோம். சின்ன விட்ல நெருக்கமா தான் வாழ்றோம். நமக்கு தேவையானத நாம தான் போய் வாங்கனும். நோய் எதிர்ப்பு சக்திக்குனு எதுவும் தனியா செலவு பண்ணல. பெரிய அளவில் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கல. எல்லா பங்ஷன் வீட்டுக்கும் போறோம். நல்ல மாஸ்க் கூட  வாங்காம 10 ரூபாய் மாஸ்க் போட்டுகிட்டுதான் சுத்றோம்.   

இதிலிருந்து என்ன தோன்றுகிறது என்றால் நம் கடவுளே இதுவரை நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாத்து வருகிறார். கோடிகள் இருப்பவர்களுக்கு கிடைக்காத ஆசிர்வாதம் நமக்கு கிடைத்துள்ளது.

கடவுளுக்கு நன்றி தெரிவித்து, அவர் மீது நம்பிக்கை வைத்து 
ஜாக்கிரதையாக நடந்து கொள்வோம்... 🙏🙏🙏


Grateful thanks to Ms.Malligeswari Mallivr, படித்ததில் ரசித்தது, முகநூல்.

கருத்துகள் இல்லை: