23 ஜூலை, 2020

கனலி இணைய இதழ் : தி.ஜானகிராமன் சிறப்பிதழ்


கனலி பத்தாவது இணைய இதழிற்கு பிறகு தி.ஜானகிராமன் சிறப்பிதழ் வேலை ஆரம்பித்திருக்கிறோம். முதலில் இதை எப்படியெல்லாம் செய்வது என்கிற சின்ன சின்ன குழப்பங்கள் மற்றும் தடைகள் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த குழப்பங்கள் ஒரு துளி கூட இல்லை. கிட்டத்தட்ட ஒரு மிகச்சிறந்த தொகுப்பிற்கான வரிசை ஏறக்குறைய அமைந்துவிட்டது. ஆனால் இன்னும் விடப்போவதில்லை ஒவ்வொரு விதத்திலும் எங்களால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஒரு சிறப்பிதழை கொண்டு வரப்போகிறோம். நிச்சயம் அது தி.ஜானகிராமன் என்கிற மாபெரும் தமிழிலக்கிய ஆளுமைக்கு பெருமை சேர்க்கும் ஒரு இதழாக இருக்கும்.

ஒரு மாஸ்டருக்கு இதைவிட வேறு எப்படி நாம் நன்றிக்கடன் செலுத்துவது. ❤️

நன்றி: கனலி கலை இலக்கிய தளம், முகநூல்.

கருத்துகள் இல்லை: