*வினைப்பயன் முன் இருப்பு*
சிறுதவறு பெருந்துன்பம் விளைத்தல் கண்டு,
சிலர்வினையின் பயன்கொள்கை தவறென் பார்கள்.
நிறுவையிலே எடைக்கல் ஓர் தட்டில் வைத்து,
நேர்எதிரில் பொருள்வைத்து நிறுக்கும் போது,
இறுதியிலே வைக்கும்பொருள் சிறிதென் றாலும்,
இதற்குமுன்னம் வைத்ததெல்லாம் சேர்த்தழுத்தும்.
பெறும்உண்மை சான்றாகும்: முன் இருப்பாம்
பெருந்தீய பதிவுசிறு தவறால் ஓங்கும்.
வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக