2 ஆக., 2020

நூல்மயம் : வைகை நதி நாகரிகம்எழுத்தாளர் : சு.வெங்கடேசன்


வைகை நதி நாகரிகம்
எழுத்தாளர் : 
சு வெங்கடேசன்

          கீழடி என்னும் ஒற்றைப் புள்ளியிலிருந்து உலகத்தை இனைத்திருக்கிறார் எழுத்தாளர்....

                             இலக்கியங்கள் மட்டும் தமிழன் தொல் குடிகளுக்கு ஆதாரமில்லை என நம்மை இந்த உலகமே ஏளனம் செய்து கொண்டிருந்தபோது வராது வந்த மாமணியாய் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வுத்துறைக்கு கிடைத்தார்...... வைகை நதிக்கரையில் தான் நம் நாகரிகம் தோன்றி இருக்கவேண்டும் என்று  முழ நம்பிக்கையுடன் 350 கிராமங்களில் கள ஆய்வு செய்து....  நம் சங்க இலக்கியங்கள் பொய் உரைக்க வில்லை என  அகழாய்வு வாயிலாக நிரூபித்துவிட்டார்
 
வைகைக்கும்....
மதுரைக்கும்.... எப்போதுமே சங்க இலக்கியங்களில் ஒரு தனி சிறப்பு உண்டு  என்பதை நான் சொல்லத் தேவையில்லை... விந்திய மலைக்கு அப்பால் இருந்த வால்மீகியும், வாத்ஸாயனரும், கௌடில்யரும்.. வியந்து பாடுகின்றனர். தேவாரம் பாடிய மூவரும்.... ஆழ்வார்களும்.... இந்த நகரை உச்சியில் ஏற்றி  கொண்டாடுகிறார்கள்.

 முதலாம் ராஜராஜ சோழன்  கல்வெட்டுகள்..... ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள்....
 இதற்கெல்லாம் மேலாக கோதை என்னும் பெண் பெயர் பொறித்த தங்க கட்டி கிடைத்துள்ளன....
 தங்கத்தில்  பெயர் பொறித்ததில் என்ன பெருமை, வியப்பு  என்கிறீர்களா?
 இந்தியா அகழாய்வில் கிடைத்த முதல் பெயர் பொறித்த தங்கம்...  என வியப்படைய செய்கிறார் நூல் ஆசிரியர்..  

 மதுரையில் வாழும் அனைவருக்கும் கடச்சநேந்தல் ஒரு சிற்றூர் என்பது தெரியும்.... ஆனால் அவ்வூர் பல ஆயிர வருடங்கள்  சரித்திரம் தாங்கி  நிற்கிறது என்பது பலருக்குத்  தெரியாது...  
சமணத் துறவி கவுந்தியடிகள்.... கண்ணகியையும் கோவலனையும் மதுரை அழைத்து வந்து குடி அமர்த்தியது இந்த கடச்சநேந்தலில் தான்... இந்த ஊரில் இருந்து தான் கோவலன் தன் மனைவியின் ஒற்றைச் சிலம்பு எடுத்துக்கொண்டு மதுரை புறப்பட்டான்  என்பதும்...  அதற்குப்பின்னால் இந்த ஊர் "கடை சிலம்பு ஏந்தல்" என்ற பெயர் பெற்றது.... காலப்போக்கில் கடச்சநேந்தல் என ஆனது என்கிறார் எழுத்தாளர்...

 கிரேக்கர்கள் ரோமானியர்கள் யவனர்கள் என பாண்டியனின் அவை நிறைந்து இருந்தது என பல சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன இதைத்தான் கீழடி என்ற ஒரு சோற்றுப்பதம் நமக்கு உறுதியளிக்கிறது.....வைகை நதி நாகரிகம் வெறும் கீழடியில் மட்டுமல்ல 286 கிலோமீட்டர் விரியும் நதியில் 350 கிராமங்கள் கள ஆய்வு நடத்தி மிக வளமான வரலாற்று ஆதாரங்கள் வெளி காட்டுகிறார் எழுத்தாளர்....

 பரந்து விரிந்த இந்த கீழடி  ஒரு சதவீதம் மட்டுமே அகழாய்வு நிறைவடைந்துள்ளது..

 இந்த ஒரு  சதவிகித அகழாய்விலேயே  இவ்வளவு   வியப்பு தருகிறது என்றால் முழுவதும் அகழாய்வு செய்தால்.....  கற்பனையை உங்களிடமே விட்டு விடுகிறேன்...

 இப்போதும் வைகை நதி மேற்கும் கிழக்குமாக பாய அதில் செழித்து வளர்ந்த நாகரிக குடிகள் வடக்கு மேற்குமாக படர்ந்து கிடக்கிறது...  ஒவ்வொரு கிராமங்களுக்கும் பல ஆயிரம் சரித்திரத்தை தாங்கி தாங்கி அடுத்து வரும் சந்ததியருக்கு கல்வெட்டுக்களாக, பாடல்களாக, நினைவு பெயர் தாங்கிய ஊர்களாக,  மண்ணில் புதையுண்டு ஓடுகளாக தன் சுயத்தை காட்டிகொண்டே இருக்கிறது....

 வருத்தம்மளிப்பது என்னவென்றால் இந்த அகழாய்வில் பெறப்பட்ட விலைமதிப்பில்லா பொருள்கள்...  காட்சிப்படுத்த ஒரு ஆராய்ச்சி அருங்காட்சியகம் தமிழ்நாட்டில்  ஏதுமில்லை... தமிழகத்தில் கிடைத்த பல கல்வெட்டுகள் போல இந்த  பொக்கிஷமும் மைசூர் அரசு கட்டிடங்களில் இருட்டு அறையில் புதையுண்டு கிடைக்கப் போகிறது...... 

அகழாய்வு நடத்த நிதி ஒதுக்கவில்லை... 
இந்த தொன்மையை அறிய மத்திய,மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை .... 
இதில் பின்னப்பட்ட அரசியல் சூழ்ச்சி ஏராளம் ஏராளம்....

அயோத்தியில்  ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 151 கோடி ஒதுக்கிய மத்திய அரசு கீழடியில் கிடைத்த பொருட்களுக்கு  கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்ப ஒரு சில லட்சங்களை ஒதுக்கி புறக்கணித்து விட்டது....

இறுதியாக  எழுத்தாளர் இப்படி புத்தகத்தை நிறைவு செய்கிறார் 
"சுமார் நூறு ஆண்டுகளாக சர்வதேச சமூகம் உற்றுநோக்கும் சிந்துவெளி ஆய்வையே தலைகீழாக மாற்றும் முயற்சிகள் 
நடக்கும் போது. வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள கீழடி ஆய்வுகளை விழுங்கி ஏப்பம் விட இவர்களால் முடியும்... தமிழ் சமூகம் விழிப்புஉணர்வற்று இருந்தால்"

 மிக முக்கியமான புத்தகமாக இதைப் நான் பார்க்கிறேன்..... எனக்கு தெரிந்து கீழடிககாக குரல்கொடுத்து  போராடுபவர்களிள் சு.வெங்கடேசன் முதன்மை பெறுகிறார். அவர் பேசும் அரசியல் மேடையாக இருந்தாலும்..... இலக்கிய மேடையாக இருந்தாலும்..... கீழடி தொடாமல் இருந்ததில்லை 

நாமும் நம் கீழடியை படித்து 

இதில் இருக்கும் சூழ்ச்சியை தெரிந்து கொள்வோம் ......
சூழ்ச்சியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொல்வோம்....


நன்றி : திரு.சு.வெங்கடேசன் மற்றும் திரு இப்ராஹிம் ஃபாரூக், முகநூல்.

கருத்துகள் இல்லை: