*கேள்வி பதில்*
*மற்ற மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீர் அருந்தலாமா?
சிறுநீர் அருந்தும்போது மது, மாமிசம், புகையிலை, சிகிரெட் பயன்படுத்தலாமா?*
புத்தகங்களில் சிறுநீர் அருந்தும்போது, மருந்துகள் எடுப்பதும், மது, மாமிசம், சிகிரெட், புகையிலை பயன்படுத்தக்கூடாது என்றே குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் சிறுநீர் சிகிச்சை செய்பவர்கள் பெருங்குழப்பங்களும், தீங்கு விளையுமோ என்ற பயமும், சந்தேகங்களும் ஏற்படுகின்றன.
இக்குழப்பம், பயம், இவற்றிலிருந்து தெளிவுபெற சிறுநீரைப்பற்றியும், சிறுநீர் அனைத்து நோய்களையும் எவ்வாறு குணப்படுத்தும் ஆற்றலை என்பதை ஓரளவு தெரிந்து கொண்டால், பயம், குழப்பம் மற்றும் எல்லா சந்தேகங்களும் நீங்கிவிடும்.
நாம் வாய்வழியாக எடுத்துக்கொண்ட திடதிரவங்கள் அனைத்தும், முதலில் ஜீரணமண்டலத்திற்கு சென்று, அதிலிருந்து ஒருபகுதி இரத்த ஓட்டத்திற்குள் செல்லும். அதிலிருந்து ஒருபகுதி சிறுநீரகங்களால் ஜவ்வூடுபரவுதல் (RO) முறையில் சிறுநீராக பிரித்து சிறுநீர்பைக்கு சென்றபின் பிறப்புறுப்பு வழியாக சிறுநீராக வெளிப்படுகிறது.
இந்தசிறுநீரில் நாம் வாய்வழியாக எடுத்துக்கொண்டவற்றின் மூலக்கூறுகளும், இத்துடன் என்ஸைம்களும், ஹார்மோன்களும் குறைந்தளவு அல்லது நுண்மயமான அளவில் வெளிப்படும்.
சிறுநீரிலிருக்கும் அனைத்து மூலக்கூறுகளும் முன்னர் இரத்தத்திலிருந்தவையே. இப்போது மருந்து அருந்திய நோயாளி அவரின் சிறுநீரின் ஒருபகுதியை அருந்தினால் நேரடியாக ஜீரணமண்டத்திற்கு அதிலிருந்து ஒருபகுதி இரத்த ஓட்டத்திற்குள் செல்லும்.
இதனால் அவரின் இரத்தத்திலிருந்து சிறுநீராக பிரிக்கும்போது இருந்த அளவு, தன்மையிலிருந்து (Quantity, Quality) எந்தவகையிலும் கூடுவதற்கு வாய்பேயில்லை, குறைவதற்கான வாயப்புகளே அதிகம்.
அதனால் சிறுநீர் அருந்தும்போது மருந்துகள், மது, மாமிசம், புகையிலை எடுத்தாலும் அதனால் தீங்கு நேர்வதற்கான வாய்ப்புக்களே இல்லை என்பதே உண்மை.
தீங்குவிளைவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும். எவ்வாறு குணமாக்கும் ஆற்றலை பெற்றது என்ற நியாயமான கேள்வியும் எழும்.
கருவமைப்பு, ஆகாரம், வெளிப்புறத்தாக்கம், சுற்றுச்சூழல், நோய்த்தொற்று நுண்ணுயிரிகள், விஷத்தன்மை, பழக்கம், வழக்கம், ஒழுக்கம் மற்றும் வேறுசில காரணிகளால் மனிதனுக்கு நோய்ப்பிணித்துன்பங்கள் ஏற்படுகின்றன.
நோயின் எந்தக்காரணிகளாக இருப்பினும் நம்முடலையும், நம்முயிராற்றலையும் பாதிக்காமல் நோய் தோன்றுவதற்கு வாய்ப்பேயில்லை. இக்காரணிகள் இரத்த ஓட்டத்தின்மூலம் உடல்செல்கள் ஒவ்வொன்றிலும் தொடர்பை பெற்று நோய்க்காரணிகளின் நுண்மப்பகுதியும் இரத்தத்தில் கலக்கும்.
இயற்கையில் நோய்நீக்கும் அடிப்படையில் அமைந்த ஒரே மருத்துவம் "ஹோமியோபதி". அதனடிப்படை தத்துவம் "எந்தவொரு பொருளோ, எந்தவொரு ஒளைஷதமோ, எந்தவொரு ஆற்றலோ ஆரோக்கியமானவரிடத்தில் ஒருப்பிட்ட நோய்க்குறிகள ஏற்படுத்தினால், அப்பொருளை,அவ்வஷதத்தை, அவ்வாற்றலை குறைந்த அல்லது நுண்ணியளவில் உண்டால் அவைகள் உண்டாக்கிய அனைத்து நோய்களுக்கும் குணமாக்கிவிடும்".
இந்த இரத்தம் சிறுநீரங்களின் வழி சிறுநீராக பிரிக்கும்போது நோய்க்கான அனைத்து காரணிகளின் நுண்பகுதி சிறுநீரில் வெளிப்படும். இப்போது ஹோமியோபதியின் அடிப்படை தத்துவத்தில் சிறுநீர் அமைந்திருப்பதால் அனைத்து நோய்களுக்கும் மிகச்சிறந்த உரிய, உகந்த, ஒத்த, உங்கள் உடல், மனம், உயிர் இவற்றிற்கு ஏற்றமருந்தாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக