20 செப்., 2020

வரலாற்று ஆவணங்கள் : ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு


நமக்கு வரலாற்றுப் பிரக்ஞை இல்லை; நாம் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்துவதில்லை. அதனாலேயே தீய சக்திகள் வரலாற்றை அவர்களுக்கு வேண்டிய வகையில் திரித்து,  பொய்யும் புனைசுருட்டும் வரலாறாக நமக்குச் சொல்லப்படுகிறது. 

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு ஒரு முக்கிய வரலாற்று ஆவணம்.  பிரபஞ்சன் அவர்களின் இரு புதினங்கள் - வானம் வசப்படும் மற்றும் மானுடம் வெல்லும் - இந்த நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட சிறந்த வரலாற்றுப் புதினங்கள். 

தற்போது இந்த நாட்குறிப்புகளை முறைப்படி  தொகுத்து,  நூல்களாக வெளியிடுவது வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட  வேண்டிய நன்முயற்சியாகும்.

கருத்துகள் இல்லை: