பதினாலு வயதில் தனக்கு நடந்த குழந்தை திருமணத்திற்கு பிறகு வீட்டிலேயே முடங்கி விடாமல், IPS தேர்வெழுதி வெற்றி பெற்ற தன்னம்பிக்கை நாயகி அம்பிகா💐
திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் ஏட்டையாவுக்கும், பதினான்கு வயதேயான அம்பிகாவுக்கும் சட்டவிரோத குழந்தை திருமணம் நடந்தது. தனது பதினெட்டாவது வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் அம்பிகா.
கணவர் காவல்துறையில் பணியாற்றியதால், அம்பிகாவுக்கும் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது
இதற்கு போதிய கல்வித் தகுதி தேவை என்பதால், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அம்பிகாவை, பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவரது கணவர்.
அம்பிகாவை குழந்தை திருமணம் செய்திருந்தாலும், அவரை படிக்க வைத்து ஆளாக்கிய ஏட்டையாவை பாராட்டலாம்.
அதன் பின்னர், இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவதற்கான பயிற்சியை சென்னையில் தங்கி மேற்கொண்டார்
மூன்று முறை ஐ.பி.எஸ். தேர்வில்
தோல்வியை தழுவிய அம்பிகா,
தனது முப்பத்தைந்தாவது வயதில், 2008ஆம் ஆண்டில் நான்காவது முறையாக எழுதிய தேர்வில் வெற்றி பெற்று IPS ஆனார்
தான் நினைத்ததுபோலவே காவல் துறையில் சேர்ந்த அம்பிகா, படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது, மும்பை பெருநகர காவல் துறையில் டெப்ட்டி கமிஷனராக மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் அம்பிகா IPS.
பெற்றோர்கள் தன்னை குழந்தை திருமணம் செய்துவைத்த பின்னர், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு கணவன் பிள்ளைகள் என வீட்டிலேயே முடங்கி விடாமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற லட்சியத்தை அடைய,
தன்னம்பிக்கையுடன் போராடி அதில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறார் அம்பிகா.
வாழ்க்கை இவ்வளவுதான் என முடங்கியிருக்கும் பல பெண்களுக்கும், வாழ்க்கை எல்லைகளற்றது என்ற வழியையும் அதற்கான தன்னம்பிக்கையையும் காட்டியிருக்கிறார் அம்பிகா.
தன்னம்பிக்கை நாயகி அம்பிகா IPS,
வாழ்வின் அத்தனைத் தடங்களிலும் மேன்மேலும் உயர மிளிர நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் 💐💐💐
சிங்கப்பெண்கள்தான்...🔥
@allequalright
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக