வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்.. வாழ்க நலமுடன்..
எண்ணெய் கொப்பளித்தல் (Oil Pulling)
‘‘ஆயில் புல்லிங் இப்போது பெரிதாக பேசப்பட்டாலும், நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்லெண்ணெயை ஊற்றி வாயைக் கொப்பளிக்கும் முறையை 1000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளனர். பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய் கொப்பளிப்பு என ஒரு சிலவற்றை காலை சடங்குகளாகவே சொல்லியிருக்கிறார்கள்.
காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள உறுப்புகளின் வேலை தூண்டப்படும். இரத்த சுத்தகரிப்பு, பல்லிடுக்குகளில் உள்ள நச்சுப்பொருள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கி, சுவைத்திறனை அதிகரிக்க முடியும். வாய்க்கசப்பு, பசியின்மை போன்ற பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். இதயம் ஆரோக்யத்துடன் செயல்படும்.
கழுத்துவலி, கழுத்து சுளுக்கு, தொண்டைவலி, காதுவலி, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்கும் ஆயில் புல்லிங் சிறந்ததொரு சிகிச்சையாகும். பற்களில் உள்ள வெற்றிலைக்கறை, மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெண்மையாகப் பளிச்சிடும். சொத்தைப்பற்களால் வரக்கூடிய பற்கூச்சம், ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவும் நீங்கும்.’’
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக