"ஜீவன் பிரிந்த போதும் சிலையாய் எழுந்த போதும்"
ஜீவா மாரடைப்பால் மரணம் அடைந்தது தொடங்கி வடசென்னையில் சிலையாக எழுந்தது வரை நிகழ்ந்த பல கருத்துக்களையும் கொண்ட சிறந்த வரலாற்று சுருக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது
மூச்சு விட்டு சுவாசித்துக் கொண்டிருக்கும் மனிதன் ஒருநாள் மூச்சு விட்டான் என்று சொல்லும் நிலையில் அவன் கதை முடிந்து போகிறது கதை முடிந்த கதை இடையில் வெந்து சாம்பல் ஆகிறது
ஜீவா என்ற சொல்லே உயிர்ப்புத் தன்மை கொண்டது அவரது சிந்தனை பேச்சு செயல் எல்லாமே உயர்வு தன்மை கொண்டவை அவரது ஜீவன் நின்ற போதிலும் சிலையாய் எழுந்தபோதும் அன்பால் கட்டுண்டு கூடிய கூட்டம் ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில்
100 ஆண்டு காலம் வாழ்ந்து 100 பேரைக் கூட அன்பால் எடுத்துக்கொள்ள முடியாத ஈரமற்ற நெஞ்சம் கொண்ட கோடீஸ்வரர்கள் ஏராளம் பேர் வீணாக வாழ்கிறார்கள்
ஆனால் குடிசையில் வாழ்ந்து கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் குடியிருப்பவர் ஜீவா
குற்றம் கண்ட இடத்தில் தர்ம ஆவேசம் கொள்ளும் நக்கீரத்தனம் அவர் உடன் பிறந்தது சிறுவயதிலேயே தீண்டாமைக்கு சாவு மணி அடிக்க முனைந்து நின்றவர் அவர் அரசியலில் பிழை செய்யாத ஆரோக்கிய போக்கு கொண்டவர் அவரது நோக்கம் எப்போதுமே மேன்மை கூறியதாக தன்மை உடையதாகவே இருந்தது
பதவிக்கும் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் மூளையை சலவைக்குப் போடும் அரசியல் வாதிகள் மத்தியில் ஜீவா எந்த பலவீனத்திற்கும் அடிமையாகாமல் மனிதத்தன்மையை வேரூன்றி நின்றார் இலக்கியங்களில் மனிதத் தன்மைகளை கண்டறிந்து மேடைகளில் முழங்கினார்
பாரதியின் பாடல்களை வரிக்கு வரி அடிக்கோடிட்டு அதன் சிறப்பம்சங்களை எடுத்து வைத்தார் சட்டமன்றத்தில் வீர முழக்கம் செய்தார்
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு தமிழ் மொழியை ஆட்சி மொழியாக இருக்கும் முதல் குரல் கொடுத்தார்
"அரசியலுக்கு ஜனசக்தி" "இலக்கியத்துக்கு தாமரை" என்று எடுத்துக் காட்டும் வகையில் இரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து அரும்பணி ஆற்றினார்
முற்போக்கு சக்திகளை இணைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பாடுபட ஒப்பற்ற பணிபுரிந்தார்
நாடு நாடு என்றே நாடிகள் துடித்த ஜீவாவின் உயிர் துடிப்பு நின்று போன செய்தியைக் கூட இருட்டடிப்பு செய்த பத்திரிக்கையை பற்றிய இதயக் குமுறலுடன் தலைவர்கள் எழுத்தாளர்கள் திரைப்படத்துறையினர் ஜீவாவின் மறைவு குறித்து அவரது பெருமை குறித்தும் செய்த பதிவுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன
ஜீவாவின் பேச்சை நேரில் கேட்க முடியவில்லையே அவரது பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்யாமல் விட்டு விட்டார்களே என்று வருந்தும் பற்றாளர்கள் ஜீவாவை பற்றிய தொகுப்பு நூலை படித்து பயன்பெற்று பயணம் செய்வார்கள்
வாசகர்களின் தேவை கருதி இந்நூலை எமது நியூ செஞ்சுரி நிறுவனம் வெளியிடுகிறது
தொகுப்பாசிரியர் ; தோழர் கே. ஜீவபாரதி அவர்கள்
விலை ரூபாய் 125 / மட்டுமே
புத்தகத் தேவைக்கான தொடர்புக்கு
மதுரை கிளை
7708683563
WhatsApp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக