7 செப்., 2020

வள்ளல் பெருமானின் அமுதசுரபி!

வள்ளல் பெருமானே அமுதசுரபி:

தம்முள் இருக்கும் உணவை எவ்வளவு எடுத்துக் கொண்டாலும் மீண்டும் உண்டாக்கிக் கொண்டு எப்பொழுதும் குறையாத நிலையில் இருக்கும், இப்படி அல்ல அல்ல குறையாமல் இருப்பதற்கு அமுதசுரபி என்று பெயர்.

ஒருநாள் இரவு உணவு எல்லாம் சமைத்து உண்ண போகின்ற வேளையில் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென்று வடலூர் சத்திய தருமச்சாலைக்கு வந்து விட்டனர். அவர்களை கண்ட உடனேயே அடியவர்களுக்கு எல்லாம் ஒரே கவலையும் பதைபதைப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த உணவு பத்து பேர் சாப்பிடும் அளவு மட்டுமே இருந்தது, பத்து பேர்  மட்டுமே  சாப்பிடக்கூடிய அளவுள்ள உணவை அத்தனைபேருக்கும் பகிர்ந்தளிப்பது சாத்தியம் இல்லாத சூழல், இந்த இரவு வேளையில் அவ்வளவு பேருக்கும் சமைப்பது சாத்தியம் இல்லையே என்று வருந்தினர். அடியவர்களின் மன ஓட்டத்தை அறிந்த வள்ளல் பெருமானார் அவர்களை நோக்கி வந்திருந்த அனைவருக்கும் இலை போடுங்கள் என்று கூறி தாமே அனைவருக்கும் பரிமாறத் தொடங்கினார். அங்கு ஓர் அளவே இருந்த உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டும் அவ்வளவில் குறையாது அப்படியே இருந்தது, அனைவரும் வயிறார உண்டு மகிழ்ந்தனர்.

அதேபோல் மற்றொரு சமயம் தருமச்சாலையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட அதை அன்பர்கள் வள்ளல் பெருமானிடம் கூற அவர் சிறிது நேரம் தியானம் செய்தார், பின்னர் அடியார்களிடம் நாளைக்கு அரிசி வரும் என்று கூறிச்சென்றார். அவ்வாறு அடுத்தநாள் திருத்துறையூரிலிருந்து மூன்று வண்டி அரிசியும் பிற உணவுப் பொருட்களும் வந்து சேர்ந்தன. அப்பொருட்களை கொண்டு வந்த அன்பர் முதல் நாள் இரவு சுவாமிகள்   தனது கனவில் தோன்றி எளியவர்களுக்கு உதவிட கட்டளையிட்டார் என்றும், அக்கட்டளையை நிறைவேற்றவே யான் இப்பொருட்களை கொண்டு வந்தேன் என்றும் கூறினார்.

திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க!

நன்றி :

கருத்துகள் இல்லை: