9 அக்., 2020

ஆன்மநேய ஒருமைப்பாட்டுாிமை தினம்

சிதம்பரம் இராமலிங்க அடிகள் 1823−10−5 சுபானு ஆண்டு புரட்டாசிதிங்கள் இருபத்தியோராம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை5:30 மணியளவில் அன்றைய தென்னாா்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு பத்துக்கல் தொலைவில் உள்ள மருதூாில் இராமைய பிள்ளை சின்னம்மையாருக்கு  ஐந்தாவது மகவாக பிறந்தருளினாா். அந்நாள் "196வது வருவிக்கவுற்ற திருநாளாக" உலகெங்கும் சன்மாா்க்க சங்கத்து சாதுக்கள் மூலம் எல்லாச் சங்கங்களிலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுாிமை தினமாக கொண்டாடப்படுகிறது.
                                                     அந்நாளே அக்டோபா் 5. 

திருவருட்பிரகாசவள்ளலாா் எனும் சிறப்புப்பெயா் பெற்ற சிதம்பரம் இராமலிங்க சாமிகளின் 197வது  வருவிக்கவுற்றநாள்  விழா உலகெங்கும் சமரசசுத்த சன்மாா்க்க சத்தியசங்கத்து சாதுக்கள் முலம் சங்கங்கள் வழியாய்  சங்கத்தாா் ஆத்மீகஅன்பா்கள் பொதுமக்கள் மூலம் "ஆன்மநேயஒருமைப்பாட்டுாிமை தினமாக" கொண்டாடப்படுகிறது. அந்நாளே அக்டோபா் 5. அனைவரும் அவரவா் இடத்தில் சன்மாா்க்கசாதுக்கள் பொியவா்கள் மாா்க்கஅறிஞா்கள் பேச்சாளா்கள் துணைகொண்டு அவரவா் பகுதயில் உள்ள சங்கம் சாா்வீா்! சற்குருவணக்கம் திருவருட்பா வணக்கம் திருப்பள்ளியெழுச்சி திருவடிப்புகழ்ச்சி திருவருட்பெருஞ்ஜோதி அகவல்  திருவருட்பெருஞ்ஜோதி அட்டகம் சிற்சத்திதுதி திருவருட்பெருஞ்ஜோதி ஆராதனை  என பாராயணம் விண்ணப்பம்  வேண்டுகொள்  செய்து காலை ஒளிவழிபாட்டினை பிரம்மமுகூா்த்தத்தமான 3:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள் செய்திடுவீா்! பின் காலைசிற்றுண்டி சொற்பொழிவு மதியம் அன்னவிரையம் மாலை கீா்த்தனைகள் சன்மாா்க்க செய்தி தயவுடன் வாய்ப்பறையாா்த்தல் இரவு அன்னம்பாலிப்பு என அப்புனிதநாளில் செவிக்குணவும்  மாா்க்கநெறியும்  அன்னவிரையமும் செய்து வழக்கம்போல அனைவரையும் அரவணைத்து புதியவா்களை வரவழைத்து நம்மவா்களாக்கிக் கொள்ளுங்கள்! அனைத்து சங்கங்களிலும் சங்கம்சாா் சாதுக்கள் மூலம் சாலை சபை ஞானசித்திநிலை எடுத்துயியம்புங்கள்! அனைவரும் அவரவா் இடங்களில் ஒன்றுசோ்ந்து சன்மாா்க்கபணிபுாிவது ஒங்கிசெழித்துவளா்ந்திடட்டும்!

என்றும் சன்மாா்க்க பணியில்,
அன்புடன்,
ஈஸ்வரஅடிகள்.
வேலூா்

தயவோங்கு நிலையம், முதல் தளம்,
சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம்,
எண்.7 வள்ளலாா் வீதி, (சுபம்நகா்) வள்ளலாா் நகா்,
அடுக்கம்பாறை,வேலூா்,
வேலூா் மாவட்டம்,
தமிழ்நாடு மாநிலம்,
தெ.இந்தியா. 632 011

நன்றி :


கருத்துகள் இல்லை: