10 அக்., 2020

மறைக்கப்பட்ட மாபெரும் உண்மைகள்

🍀🍂🍀🍂🍀🍂🍀🍂

வெப்பம்+இல்லை
வேப்பிலை!
உடல் வெப்பத்தை
இல்லையென்றாக்கும்
வேப்பிலை!

கரு+வெப்பம்+இல்லை
கருவேப்பிலை!
கருப்பை வெப்பத்தை
இல்லையென்றாக்கும்i
கருவேப்பிலை!

அகம்+தீ−அகத்தீ
உடலின் உள்ளே
அகத்தின் தீயைக் குறைக்கும்
அகத்தி!

சீர்+அகம்−சீரகம்
அகத்தின் சூட்டைச்
சீராக்கும்
சீரகம்!

காயமே இது பொய்யடா−வெறும்
காற்றடைத்த பையடா!
காயத்தின் காற்றை
வெளியேற்றும்
பெருங்காயம்!

வெம்மை+காயம்−வெங்காயம்
உடலின் வெம்மையைப்
போக்கும் வெங்காயம்!

பொன்+ஆம்+காண்+நீ
பொன்னாங்கண்ணி!
உண்டால்
உடல் பொன் ஆகும்
காண்நீ!

கரிசல்+ஆம்+காண்+நீ
கரிசலாங்கண்ணி
காய்ச்சிய எண்ணெய்
கூந்தலைக் கரிசலாக்கும்
காண் நீ!

சொற்களுக்குள்ளே
மருத்துவம் வைத்தான்!
நம் மகத்தான பாட்டன்!

தமிழ்ச் சொற்களை
மறந்தோம்!
நம் மருத்துவம்
மறந்தோம்!
சொன்ன பாட்டியை
மறந்தோம்!
பாட்டனை மறந்தோம்!

மனிதக் கிருமி மறந்த மருத்துவம்!
மனிதக் கிருமி மறுத்த மருத்துவம்!
மனிதக் கிருமி
அழித்த மருத்துவம்!

மனிதனை அழிக்கும் 
கிருமியால் உயிர்த்தது.
இது இயற்கையின் வெற்றி! நம் தமிழின்
வெற்றி!👍👍
🍃☘️🍃☘️🍃☘️🍃☘️.  Visvanathan IV the Cross

நன்றி :

திரு.விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை: