19 அக்., 2020

மேன்மக்கள் : பட்டாசார்ஜி தம்பதிகள்

பல லட்சம் மதிப்புடைய கார்கள் அணிவகுத்து நிற்க..............
நாட்டின் மிகச் சிறந்த மருத்துவர்கள்............கூடி நடைபெறும் ஒரு கூட்டத்திற்கு.......  தலைமை ஏற்று நடத்த............
வேலூர் நகர பேருந்தில் இருந்து இறங்கி, MCR செருப்பையும், கதர் சட்டையையும் அணிந்துக் கொண்டு ஒரு மருத்துவர் வருகிறார் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.

Dr.சுரஞ்சன் பாடாசாரிஜி என்ற இந்த எளிமையான மனிதர் தான் 2007 முதல் 2012 வரை....... இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையான கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (CMC )வேலூரில்   இயக்குனர் பொறுப்பில் இருந்தார்.

இயக்குனருக்கு கொடுக்கப்படும் விலை மதிப்புடைய காரை பயன்படுத்தாமல்......... தினமும் பேருந்தில் பயணம் செய்தே மருத்துவமனைக்கு வருவார்......
தன் வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை நோயாளிகளின் நிதி கணக்கிற்கு கொடுத்து விடுவார்....
.
ஒருமுறை தன் சொந்த தாள் பிரதியொன்றை மருத்துவமனை கணக்கில் எடுத்துவிட்டார்.....  பணியாளரிடம் அந்த தொகையை  கொடுத்து........ நோயாளிகளின் நிதியில் சேர்த்துவிடக் கூறிய Dr.சுரஞ்சனின் நேர்மைக்கு வார்த்தைகள் இல்லை.

கதர் சேலையை உடுத்திக் கொண்டு தோளில் ஜோல்னா பையுடன் காட்சியளிக்கும் அவர் மனைவி Dr.சாரா பாடாசாரிஜி அம்மையாரும் எளிமையின் அழகில் ஜொலிப்பார்.

பணக்கார திரைச் சீலையை விலக்கி எளிமை வாழ்வின் அழகை நேசிக்க Dr.சுரஞ்சன் போன்றவர்களின் வலிமை இப்பொழுது யாருக்கு உள்ளது ?...

நன்றி :

கருத்துகள் இல்லை: