14 அக்., 2020

சிரிக்கவும் சிந்திக்கவும்

*எதார்த்தமான உண்மைகள் !!!

😜
*1.* கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,
*உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!*

*(நம்ம ஊரு டிசைன் அப்படி)*

😜
*2.* கும்பிடும் வரை கடவுள்;
*திருட்டுப் போனால் சிலை...!*

*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*

😜
*3.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*

*(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*

😜
*4.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் 
*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!*

*(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*

😜
*5.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது 
*ஒரு தீ குச்சியின் மரணம்..!*

*(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*

😜
*6.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட 
*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!*

*(நிதர்சனமான உண்மை)*

😜
*7.* அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட  தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, *தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க ..! ஏன் இந்த கொடுமை..!*

*(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)*

😜
*8.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!*

*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*

😜
*9.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!*

*(எல்லாம் பீஸ் தான் காரணம்)*

😜
*10.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, 
*இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!*

*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*

😜
*11.* 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் 
*இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!*

*(லஞ்சம் தான் காரணம்)*

😜
*12.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். 
*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!*

*(யூஸ் பண்ணத் தெரியல..அவ்ளோதான்)*

😜
*13.* தூக்கம் வராமல் முதலாளி... 
*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!*

*(கரன்சி பண்ற வேலை)*

😜
*14.* கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..!
*கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில்லை...!*

நன்றி :

சிதம்பர ராஜ்ஜியம், 
வாட்ஸ்அப் குழு 

கருத்துகள் இல்லை: