7 அக்., 2020

பயணம் : அமர்நாத் பனிலிங்கம் யாத்திரை


அமர்நாத் பனிலிங்கம் யாத்திரை நான் கண்டவை

Amarnath Yatra Through My Eyes | Pahalgam

339,660 views•Jul 22, 2020

AANMEEGA SUTRULA

15.4K subscribers

அமர்நாத் யாத்திரையை என் கண்கள் மூலம் உங்களுக்கு காட்டுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அமர்நாத் பனி லிங்கம் செல்ல பஹல்கம் & பால்தால் ஆகிய இரண்டு வழிகள் உள்ளது. நான் உங்களுக்கு காட்டிய பாதை பஹல்கம் வழியாக சென்றது இந்த வழியாக சென்றாள் சராசரியாக 48 கிலோமீட்டர் தூரம் ஆகிறது மற்றொரு பாதை ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாதை பால்தால் இது 14 கிலோமீட்டர் தூரம் ஆகும். நான் உங்களுக்கு காட்டிய பஹல்கம் பாதையில் அருவிகளும் இயற்கை காட்சிகளும் மிகவும் அதிகம் மேலும் இந்த வழியாகச் செல்லும்போது இடையில் தங்குவதற்கு வார் பால் மற்றும் பஞ்ச தரணி ஆகிய இரண்டு இடங்கள் உள்ளன. மேலும் பயணம் மேற்கொள்வதற்கு சரியான சமமான நிலப்பரப்பும் இதுவாகவே உள்ளது. நாம் தேவையான அடையாள அட்டையை பெற்ற பிறகு பகல்காமில் உள்ள ராணுவ முகாமில் நாம் தங்கிக் கொள்ளலாம். பயணம் மேற்கொள்ளும் போது சந்தன்வாரி என்ற இடத்தில் அடையாள அட்டையை இராணுவத்தால் பரிசோதிக்கப்படும். பிறகே நமது பயணம் தொடரும். இங்கிருந்து பிச்சு டாப், சேஸ் பால், நவகோடி, வார்பால், மகாகுன்டாப், பபிபால், பஞ்சதரணி, சங்கம் பிறகு நாம் குகையை அடைந்து பனிலிங்கத்தை தரிசிக்கலாம்.

        இந்த கோவில் இமயமலையின் பனிப் பிரதேசத்தில் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு அருகே அமைந்துள்ளது இது சுமார் 5000 வருடம் பழமையான கோவிலாகும் இது 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பனிலிங்கத்தை தரிசனம் செய்ய மே மாதம் கடைசி முதல் ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை அங்கு இருக்கும் பனி சூழலுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுகிறது இங்கு ஆண் மற்றும் பெண் ஆக இரு பாலரும் சென்று தரிசிக்கலாம் இங்கு செல்ல குதிரை, டோலி, மற்றும் ஹெலிகாப்டர் ஆகிய வசதிகள் உள்ளதால் நடக்க முடியாதவர்கள் கூட சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு அனைத்து பக்தர்களுக்கும் உள்ளது எனவே அனைவரும் ஒரு முறையாவது இங்கு சென்று தரிசனம் செய்துவர வாய்ப்பு உள்ளது  

         இந்தப் பதிவை உங்களுக்கு காண்பிக்க வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி! நன்றி !நன்றி!....

 

Grateful thanks to AANMEEGA SUTRULA  and YouTube 

கருத்துகள் இல்லை: