25 நவ., 2020

சுற்றுச்சூழல் : பூவுலகின் நண்பர்களின் போற்றத்தக்க தொண்டு!

இந்த வால்பாறை காடுகளுக்குள்ளேயே எங்களின் 95 ஞாயிற்றுக்கிழமைகள் இருந்து இருக்கின்றன.... ஒரு இடம் விடாமல் இந்த படத்தில் உள்ள இடத்தில் எல்லாம் எங்களின் காலடி தடம் பதிந்து இருக்கிறது.... அங்குலம் அங்குலமாக ஒரு பகுதி கூட விடாமல் 200 அடிக்கு மேல் ஒவ்வொரு இடத்திலும் கீழே இறங்கி கழிவுகளை அகற்றி இருக்கிறோம்.... 120 மழை நீர் வடிகால் வாய்க்காலை சுத்தப்படுத்தி இருக்கிறோம்.... இதுவரை 40 கிமீ வன சாலையை சுத்தம் செய்து இருக்கிறோம்.... 30 கொண்டை ஊசி வளைவு வரை நீண்டு இருக்கிறது பணி...

மீண்டும் முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து தற்போது 17 வது வளைவிற்கு வந்து இருக்கிறோம்.... மீண்டும் மீண்டும் அறிவார்ந்த மக்கள் தூக்கி எறியும் குப்பைகளை பொறுக்கி கொண்டு..... 

படத்தில் இருக்கும் பசுமையான சூழலை தக்க வைத்து கொள்ள தான் இயங்கி வருகிறோம்....  இலக்கை எட்டி அடையும் வரை தொடர்ந்து பயணிப்போம்...

இந்த படத்தை பார்த்தவுடன் மன மகிழ்ச்சியை தருகிறது... நாம் செல்லும் பாதை சரியானது தான் என மனம் சொல்லி கொண்டே இருப்பதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது....

வனம் காப்போம் நம் தலைமுறைக்காக... 

#TargetZer0 #PlasticFreeForestZone #climatechange #climatestrike #pollutionfree #savenature #saveenvironment

நன்றி :

கருத்துகள் இல்லை: