16 டிச., 2020

அறிவியல் உலகம்

             Grateful thanks to
              CARTOONSTOCK
https://www.cartoonstock.com/directory/t/thermodynamics.asp

எல்லாரும் சொல்ற அதே காப்பிக் கப் உதாரணம்தான். ஆனால், கொஞ்சம் வேற மாதிரி. 

உங்கள் கையில் ஒரு காப்பி கப் இருக்கு. பீங்கான் களியினால் உருவான அழகிய வடிவத்தில் இருக்கும் கப். ஒரு முறையான அமைப்பு. அனைத்து களிமண்ணும் ஒன்றிணைந்து ஒரே பொருளாய் இருப்பது. இதை ஆர்டர் என்று சொல்லலாம். 

அந்தக் காப்பிக் கப் இப்போது கைதவறிக் கீழே விழுகிறது. விழுந்து நொருங்கிச் சிதறுகிறது. பெரிய, சிறிய, சின்னஞ்சிறிய துகள்களாக சிதறுகிறது. தரையெங்கும் கப்பின் சிதறல்கள். கூர்ந்து பார்த்தால் நுணுக்கமாக துகள்களும் இருக்கும். ஒரு பொருள் பல ஆயிரக்கணக்கில் சிதறிப்போன சிறு பொருட்களாக மாறிய இந்த நிலை, டிஸார்டர்.

இந்த டிஸார்டரைக் கால ரிவர்ஸாக்கிச் சுலபத்தில் காப்பிக் கப்பை  மீண்டும் முழுசா உங்கள் கையில் கொண்டு வந்துவிடலாம். ஆனால், அந்தக் காப்பிக் கப்பில் சூடான காப்பி நிரம்பியிருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அது விழுந்து உடைகிறது. என்ன நடக்கும்?

கப் உடைந்து சிதறுவதோடு, காப்பியும் தரையெங்கும் தெறிக்கிறது. அதோடு நின்று விடுவதில்லை. காப்பியின் வெப்பம் காற்றின் மூலக்கூறுகளுடன் கலக்கின்றது. வெப்பசக்தி வெவ்வேறு சக்தியாக மாறுகிறது. காற்றின் நுண்ணிய துகள்கள் மேலே சென்று அடுத்தடுத்து துகள்களுக்கு சக்தியைப் பரிமாறுகின்றன. அப்படிச் செல்லும் துகள்களை மரங்கள் உறுஞ்சிக்கொள்ளமால், மழையாகிக் கடலில் விழலாம். எப்படியும் அது மாறலாம். இப்போது ஏற்பட்ட டிஸார்டர் மிகவும் பெரியது. இதை மீண்டும் ரிவர்ஸ் ஆக்கனுமென்றால், மிகவும் சிரமம். இப்போது ஆர்டரிலிருந்து டிஸார்டர் ஆகிய விதம் மிக அதிகம். அந்த டிஸார்டரும் படிப்படியாகத் தொடர்ந்து விரிந்துகொண்டே போகும். அதனால் மீளப்பெறுவது மிகக்கடினம். இதைத்தான் தேர்மோ டைனமிக்ஸின் இரண்டாவது விதி சொல்கிறது. அதாவது என்ட்ரோபி.

அதனாலேயே என்ட்ரோபி, டைம் ரிவர்சலுக்கு பெருந்தடையாகவும் இருக்கிறது.

Grateful thanks to 

https://www.facebook.com/100001711084852/posts/3577119805688354/

கருத்துகள் இல்லை: