திருமந்திரம் - பாடல் #1019: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
எடுத்தவிக் குண்டத் திடம்பதி னாறிற்
பதித்த கலைகளும் பாலித்து நிற்குங்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.
விளக்கம்:
வினையினால் எடுத்து வந்த குண்டமாக இருக்கும் இந்த உடலை இயக்கும் 16 கலைகள் உள்ளது. இந்த கலைகளுக்கு சக்தியூட்டும் கனலை குண்டலினியிலிருந்து எழுந்து வரும் அக்னியில் கண்டு அறிந்து கொள்பவர்களின் பிறவியோடு தொடர்ந்து வருகின்ற கொடிய வினைகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும்.
பதினாறு கலைகள் (நாடிகள்):
1. மேதைக்கலை
2. அருக்கீசக்கலை
3. விடக்கலை
4. விந்துக்கலை
5. அர்த்தசந்திரன் கலை
6. நிரோதினிக்கலை
7. நாதக்கலை
8. நாதாந்தக்கலை
9. சக்திக்கலை
10. வியாபினிக்கலை
11. சமனைக்கலை
12. உன்மனைக்கலை
13. வியோமரூபினிக்கலை
14. அனந்தைக்கலை
15. அனாதைக்கலை
16. அனாசிருதைக்கலை
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக