Dr. Mathi Vanan
அறிவு நம்மை காக்கும் கருவி.
இந்தியாவில் கொரானா ஊசி போட அவசரமாக தயாராகிறது பாஜக அரசு. இங்கு போடப்படும் ஆக்ஸ்போர்டு ஊசி 62 சத பாதுகாப்பை தந்ததாக சொல்கிறது.
அவர்கள் நடத்திய ஆய்வில் கொரானா ஊசி போட்டவர்களுக்கு, ஊசி போடாதவர்களை விட 62 சதம் பாதுகாப்பு தந்தது என்கின்றன.
கொரானா ஊசி பட்ஜெட் 80 ஆயிரம் கோடி ரூபாய். எதிர்ப்பு தன்மை எவ்வளவு நாள் இருக்கும் என்பது அவர்களுக்கே தெரியாது. 6 மாதம் இருக்கலாம். அவர்களே இரண்டு வருடம் ஒருமுறை மீண்டும் மீண்டும் போட்டால்தான் எதிர்ப்பு தன்மை இருக்கும் என்கிறார்கள். எனில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை 80 ஆயிரம் கோடி ரூபாய்.
பக்க விளைவுக்கு பொறுப்பு இல்லை என கம்பெனிகள் பல நாடுகளில் ஒப்பந்தம் போட்டுவிட்டன.
சாதா கொரானா தீவிர கொரனாவாக மாறும் ஆபத்து, மரபணு மாற்ற ஆபத்து, நோய் எதிர்ப்புபொருள் அதிகமாகி ஆபத்து, தன் உறுப்புகளுக்கு எதிராகவே எதிர்ப்பு பொருளை உருவாக்கல் ஆபத்து என்பதை ஆராய 5 வருடங்கள் ஆகும். மூன்று மாதத்தில் ஆபத்து இல்லை என கூறிவிட்டார்கள்.
இன்னொரு புறம், இயற்கை ஆய்வு உள்ளது.
கடந்த ஓராண்டில் கொரானா தமிழ்நாட்டில் பரவியது.
தோராயமாக,
8 கோடி மக்களில் கொரானா தொற்று அறியப்பட்டோர் 8 லட்சம். அதில் நோய் அறிகுறிகள் உள்ளவர் 10 சதம். 80 ஆயிரம் பேர்.
நோய் அறிகுறி வருவதை கொரானா ஊசி 62 சதம் கூடுதலாக தடுக்கும் என மருந்து கம்பெனிகள் சொன்னால்,
இயற்கை ஆய்வில்,
கொரானா பரவிய தமிழ்நாட்டில் நோய் அறிகுறி இல்லாமல் இயற்கை எதிர்ப்பாற்றல் தடுத்தது 99.9 சதம் பேர்.
இயற்கை எதிர்ப்பாற்றல் நிலையானது.
செலவில்லாதது. பக்க விளைவற்றது. அனைத்து நோய்களுக்கும் பொருத்தமானது. நல்ல உணவு, காற்று, நீர், வாழ்வியல் சூழலை முன்னேற்றினால் போதுமானது.
கொரானா ஊசி போட்டால் 62 சதம் கூடுதல் பாதுகாப்பு என சொல்லும் முதலாளிகளிடம்,
இயற்கை எதிர்ப்பாற்றல் தந்தது 99.9 சத பாதுகாப்பு, அதை பெருக்குங்கள் என சொல்வது சமூக நலன் உள்ளவர் கடமை. அதை பெறுவது மக்கள் உரிமை.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக