#புத்தக கண்காட்சி 2021
#காரைக்குடி
காரைக்குடியில் இன்று மாலை...
#நேஷனல்புக்டிரஸ்ட்
மற்றும்
எமது
#நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் ,
#தமிழ்நாடுகலைஇலக்கியபெருமன்றம் சிவகங்கை மாவட்ட கிளை
இணைந்து.....
#35-வது தேசிய புத்தகக் கண்காட்சியை 05.03.2021 முதல் 19.03.2021 வரை செக்காலை ரோட்டில் உள்ள M.A.M மஹால் நடத்திவருகின்றார்கள். அதனுடைய தொடக்க விழா இன்று நடைபெற்றது தொடக்க விழாவில் தவத்திரு குன்றக்குடி #பொன்னம்பலஅடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்.
புத்தக கண்காட்சியை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதிப்புறு கர்னல் #நா.ராஜேந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் #பேரா.கா.மணிமேகலை அவர்கள் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்கள்.
மேலும் இவ்விழாவில் பேரா ஜானகிராமன் ரோட்டரி சண்முகம்,சுப. நாகநாதன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் அ.சேதுராமன் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டனர்.
கண்காட்சி தொடக்க விழா ஏற்பாட்டை தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் பேராசிரியர் கரு.முருகன்
,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி ,மேலாளர் கு. பாலசுப்பிரமணி ஆகியோர் ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய ஆவண செய்து வருகின்றனர். விழாவில் பொதுமக்களும் மாணவர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர் புத்தகக்கண்காட்சி விற்பனையாகும் புத்தகங்களுக்கு10% கழிவும் தரப்படுகிறது.
அனைவரும் வருகை தந்து இக்கண்காட்சியை சிறப்பிக்கவும் வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக