கனவு பெஞ்சு
எழுபதுகளில் நான் ஒண்டிக்கட்டை.தஞ்சாவூர் மேல வீதியில் சங்கர மடத்துக்கு பக்கத்து சந்து எங்கள் வீடு.திறந்த மடம்
தெரு முகனையில்(தஞ்சை வழக்கு). ஒரு காபி கிளப்
இரவு கடை மூடியதும்
அங்கேபோவேன். எல்லாம் கழுவிக் கவிழ்க்கப்பட்டு கடை
மூடப்பட்டிருக்கும்.கடைக்கு வெளியே ஒரு மரபெஞ்சு
அப்படியே கிடக்கும் பழைய சினிமா பாட்டுகள் இசை
ஒலிக்கத்துவங்கும்.கடைக்காரர் உபயம்.பெஞ்சில்படுத்தபடி
ரசிப்பேன்.பெஞ்சு லேசாக நொடிக்கும்.பாட்டுக்கு சிலாகிக்கிற அசைவாக அது இருக்கும்.காற்று அள்ளிக்கொண்டு போகும்
கண் சொருகும் தம்பி எந்திரிங்க மணி பண்ணண்டாச்சு என்பார் கடைக்காரர்.காலம் அந்த பெஞ்சையும் என்னையும் பிரித்து விட்டதுஆனாலும்
என் கனவு பெஞ்சாக அது மனதுக்குள்.கிடந்தது
வயது எழுபதை நெருங்கி விட்டதுவீடு முழுவதும் நான் விரும்பியதும் விரும்பாததுமாக வாங்கிப் போட்ட பொருட்களால் நிரம்பி வழிகிறது ஆனாலும் ஒரு மர பெஞ்சு இல்லை என்ற ஆதங்கத்தை அறிந்த அப்துல் ரசாக் என்ற அன்பர் என்ஆசையை நிறைவேற்றி வைத்தார். தேக்கு மரத்தில் பெஞ்சு செய்து (குறைவான தொகை )அனுப்பிவைத்தார்
பெஞ்சு வந்து இறங்கியது இரண்டு பேர் தூக்கமுடியவில்லை.கனம் கம்பீரம் அப்படியே பளபளக்கிறது.புத்தம் புதுசாக
..மின்னுகிறது.ஆனாலும் என் மனதுக்குள் ஏமாற்றம்பெஞ்சு
அழகாக இருக்கிறது ஆனாலும் அதன் டாம்பீகம் பிடிக்கவில்லை.ரொம்ப திமிர் அதுக்குவலுவாக நறுவிசாக
ஆறு தேக்கு கால்களுடன் இருந்தால் ஆச்சா?உடைந்த
காலுள்ள பழைய மேலவீதி பெஞ்சுக்கு.இணையாகுமா?வழுவழுப்பான தன் உடம்பை
காட்டிக் கொண்டு நிற்கும் அதன் மீது உட்கார மனமின்றி அதை உற்றுப் பார்க்கிறேன் அது என்னைப் பார்க்கிறது!
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக