7 மார்., 2021

சுற்றுச்சூழல்


ஒரு யானை அழிந்தால், அதனைச் சுற்றியுள்ள காட்டில் 16 வகை தாவரங்கள் அழிந்து விடும்.

மார்ச்.3 - உலக வன உயிரின நாள்

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், மார்ச் 3-ம் தேதியை சர்வதேச வன உயிரின நாளாகக் கொண்டாடுகின்றன. வன விலங்குகள், வனத்தில் உள்ள முக்கிய தாவரங்களைப் பாதுகாக்க வும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதே இந்த நாளைக் கொண்டாடு வதன் நோக்கம். இந்த ஆண்டு உலக வன உயிரின நாளில், ‘வன விலங்கு களை வேட்டையாடுவது மிகக் கொடூரம்’ என்ற கருத்தை மக்களிடையே பரப்ப வனத்துறை முடிவு செய்துள்ளது.
உலகில் உள்ள வன உயிரினங்களில் 6.5 சதவீதம் வன விலங்குகள் இந்தியாவில் உள்ளன. இங்குதான் நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய உயிரினங்கள் அதிகம் உள்ளன. தற்போது வனவிலங்குகளை மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக வேட்டையாடுவதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதில் மனிதனுக்கு வரக் கூடிய சில நோய்களை, வனவிலங்கு களுடைய ரத்தம், உடல் பாகங்கள் குணமாக்கும் என்ற கண்மூடித்தனமான மூடநம்பிக்கையால் பெரும் பணக்காரர்கள், விலங்குகளின் உடல் பாகங்கள், ரத்தத்தை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர்.
அதனால், சர்வதேச சந்தையில் வன விலங்குகளின் உடல் பாகங்களுக்கு ஏற்பட்ட கிராக்கியால், இயற்கையில் மதிப்புமிக்க வன விலங்குகளை வேட்டைக் கும்பல் வேட்டையாடுகின்றன.
இந்தியாவில் புலி, காண்டா மிருகங்கள், நட்சத்திர ஆமைகள் தான் அதிக அளவு வேட்டையாடப்படுகின்ற. வாழ்வியல் சூழலில் மரபணு, சமூக, பொருளாதார, பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் கலாச்சார, பண்பாட்டில் மனிதனுடன் வனவிலங்குகளுக்கு தொடர்பு இருக்கிறது. வனவிலங்குகள் வசிக்கும் காடுகளை கொண்ட நாடுகளே, சிறந்த நாடு என அறியப்படுகிறது. அதனால், வன விலங்குகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. வன விலங்குகளை நேரடியாகப் பார்த்தால் அவற்றை தொந்தரவு செய்யாமல் ரசிக்க வேண்டும். அதை சீண்டிப் பார்க்கக்கூடாது. வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறும்பட்சத்தில், அதனை மீண்டும் பாதுகாப்பாக காட்டில் கொண்டுபோய் விட வேண்டும்.
தேசிய வனவிலங்கு கொள்கைப் படி, மொத்த காடுகளில் 28 சதவீதம் பகுதியை, வனவிலங்குகளுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள காடுகள் பரப்பளவில் 28 சதவீதம் வன விலங்கு சரணாலயமாகவும், தேசிய பூங்காக்களாகவும் அறிவிக்கப் பட்டுள்ளன''.
‘‘இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 23 புலிகள், 47 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. கடந்த நான்கு நூற்றாண்டுகளில் 36 வகையான பாலூட்டி வன விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இரு நூற்றாண்டுகளில் 300 வகையான பறவைகள் மாயமாகியுள்ளன. வனவிலங்குகளின் அழிவு காடுகளை மட்டும் பாதிப்பதில்லை மனிதனையும் பாதிக்கிறது.
ஒரு காட்டில் புலி வசித்தால், அதனை சுற்றியுள்ள வன விலங்குகள், மரங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வார்கள். ஒரு யானை அழிந்தால், அதனைச் சுற்றியுள்ள காடுகளில் 16 வகையான முக்கிய தாவரங்கள் அழிந்து போகும். இது பலருக்கு தெரியாது.

நன்றி: திரு.வெங்கடேஷ்.

நன்றி :


கருத்துகள் இல்லை: