அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்.....
தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ....
ஒரு பெரிய கடையின் முன்,
தன் காரை நிறுத்துகிறார்..
பிரபலமான பூக்கடை அது ,...
எவ்வளவு விலை சார் இது..
250 டாலர் !!..
இதைவிட அருமையான 'பூ 'காண்பிக்க முடியுமா?
"500 டாலர்"!!
சரி, இதையே ,
'பேக் செய்யுங்க..
"உங்களிடம்,
"கொரியர்" சர்வீஸ் இருக்கா?
கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் ...
அதற்கு ஒரு 100 டாலராகும்.
சரி.. எப்போ டெலிவரி பண்ணுவீங்க.. ??
நாளைக்குகாலையில.."வேண்டாம்...
இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும்..
*இன்று என் தாயின் பிறந்தநாள்*...
கொரியர் சர்வீஸ்'
பல காரணங்களுக்காக தாமதமாகலாம்... எனக்கு இன்றே போகணும்....
ஒன்று செய்யுங்க.....' ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து ...
இந்த பூங்கொத்தை,.. இன்றே என்தாயிடம் ,
இந்த முகவரியில் சேர்த்திடுங்க....
ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்.... அதற்கும் சேர்த்து 500 டாலர்...
நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின்,
வீட்டு முகவரியையும் கொடுத்து விட்டு நகர்ந்தார்..
அந்த பணக்காரர்..
மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல் ,
பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரில்
ஏறப்போக.....
ஒரு சின்ன சிறுமி
ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும்,, அழுதபடி இருக்கிறாள்.....
குழந்தை ஏன் அழறே?
அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ?
ஓகே, ஒரு டாலர் தானே தரேன்.. எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?
நோ அங்கிள் ..
*எங்க அம்மாவின் பிறந்தநாள் இன்று* ...
*நான் வருடா, வருடம் அம்மாவின் பர்த்டேக்கு*, *அம்மாவுக்கு பிடித்த ரோஜா பூ வாங்கித் தருவேன்*...
என்னிடம் பணம் இல்லை..
நீங்க ஒரு டாலர்
கொடுத்தால்
ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன்...
அம்மா எனக்காக வெயிட் டிங்'....
ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?
பாவம் ஏழை பெண் அவள்.....
" ஒரு டாலர் என்னம்மா !
10 டாலர் தரேன் எடுத்துக்கோ ...
"வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்....
என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்தாள்
அச்சிறுமி....
ஏதோ சாக்லேட்
வாங்கத்தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ?
என நினைத்து அந்த பணக்காரர்...
மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்...
ஒரு சின்ன பூக்கடையில்
ஒரு டாலர் கொடுத்து சிகப்பு ரோஜா பூ வாங்க .....
கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார்...
மிகுந்த சந்தோஷத்துடன்,
அச்சிறுமி பூவை எடுத்தபடி ஓட ....
அச் சிறுமி எங்கு போகிறாள்?...
எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின்
பின்னால் போக சொல்லுகிறார்...
பல வளைவுகளை, தெருக்களை கடந்து,ஓடும் அவள்......
போய் நிற்கும் இடம் சமாதி........
ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து..
"அம்மா,
*ஹாப்பி பர்த்டே*'..
*உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா*....
என கூறி *அம்மாவின் கல்லறையில் வணங்கி*....
*முத்தமிட*,....
அதை
பார்த்துக்கொண்டிருந்த பணக்காரரின் கண்களில் கரகரவென நீர் சுரந்தது ...
சார் , 'மீட்டிங்கிற்கு, நேரமாச்சு...
டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்தபடி அவசர அவசரமாக காரில் ஏறி,
கடைக்கு போய்,
தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக் கொண்டு வண்டியை,
வீட்டிற்கு போக சொன்னார்...
பெரிய கார் ,
தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த .....
92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது ? என பார்க்க ....
"அம்மா என அழைத்தபடி
பூங்கொத்தை கொடுத்து.... *பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா* என காலில் விழுந்த, மகனை ஆரத்தழுவிய தாய்......
உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!!
அம்மா ,
அன்பை எப்படி வெளிப் படுத்துவது,
என்று ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்...
உயிரோடு இல்லாத
தன் தாய்க்கு அச்சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்..... நெகிழ்ந்து விட்டேன்...
ஆனால் நான்?...
அச் சிறுமியின் மூலமாக
அன்பை, எப்படி வெளிப்படுத்துவது
என அறிந்தேன்...
"உயிரோடு இருக்கும், என் தாயை நேரில் வந்து பார்த்து,
வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு வேறு என்ன வேண்டும்??..
மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத்தாய்..
தாய், தந்தை இருப்பவர்கள்.... அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை,
அன்பை, அவர்கள் உயிரோடு இருக்கும் போதே வாரி வழங்க தவறாதீர்கள்....
அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்...
உங்களின், பண்பின்,அன்பை நினைத்து,மகிழ்ந்து.... ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்.....
உங்கள் வாழ்க்கை சிறக்கும்.....
*எல்லா பெற்றோர்க்கும்*
*தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி,உயர்வு என்றும் சந்தோஷம் தரும்*..
*நம் உயர்வில் பொறாமை கொள்ளாத இரு ஜீவன்கள் நம் பெற்றோர் மட்டுமே*..
அதனால் தான் *அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்" என்கிறோம்..*
அன்னையே நீ
*வாழ்க வளமுடன்*..
🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக