25 ஆக., 2021

நூல் நயம் : சாயாவனம் - சா.கந்தசாமி

#நான்காம் ஆண்டு வாசிப்பு திருவிழா
#இயற்கை

புத்தகம் : சாயாவனம்
எழுத்தாளர் : சா.கந்தசாமி.

மனித சந்ததி பெருகும்போதெல்லாம் எழிழ்மிகு இயற்கையின் அங்கங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

மனிதன் தன் சுயநலத்திற்காகவும் லாபத்திற்காகவும் இயற்கையை அழிக்க யோசிப்பதேயில்லை.

எங்கிருந்தோ வரும் ஆசாமியிடம் தன் பரம்பரை வழிவந்த தோட்டத்தை பணம் கிடைத்தால் போதும் என்பது போல் விற்கிறார் சாம்பமூர்த்தி ஐயர். புளியை தவிர வேறு பயன் தராததால்.

தன்னிடமுள்ள பணத்தை கொண்டு தான் பிறந்த மண்ணில் தன் கனவை நிறுவ தோட்டத்தை வாங்குகிறான் சிதம்பரம்.

ஆரம்பத்தில் விருப்பமில்லாத தேவர் சிதம்பரம் தன் ரத்த சொந்தம் என்று சொன்னவுடன் அவன் அசைவுக்கு இசைந்து கொடுக்கிறார்.

காட்டை எப்படியாவது அழித்து விட்டு கரும்பாலை அமைக்க ஆள் தேடுகிறான். கிடைத்த இரண்டு பேரை வைத்து மளமளவென அழிக்க துவங்குகிறான் சிறு புல் முளைக்கவும் காரணமில்லாத சிதம்பரம். எவ்வளவு கடினம் வந்தாலும் காட்டை அழித்து விட நேரம் காலம் இல்லாமல் உழைக்கிறான்.

ஒவ்வொரு முறையும் சோர்வாகும் போதும் இளைப்பார மரத்தடியில்தான் தஞ்சம் அடைகிறான். அதற்காக சிறு குடிசையும் அமைக்கிறான்.

தன் செயலால் அனைவரையும் கவர்ந்து தன் எண்ணம் ஈடேற உதவியும் கேட்டு அவர்களுக்கும் செய்து சாமர்த்தியமாக தன் முயற்சிக்கு தடையேதும் இல்லாமல் தன் வேலையே குறிக்கோளாக இருக்கிறான்.

ஒரு அளவுக்கு மேல் தன்னால் முடியாது என்று தோன்றும் போது பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை பயன்படுத்துகிறான். பல தலைமுறையாக புளி ஒன்றையாவது கொடுத்து வந்த மரமும் கருகிவிடுகிறது.

அந்த வனத்தில் வாழ்ந்த நரியும் குரங்கும் எங்கள் இருப்பிடத்தை அழி்க்க நீ யார் என்பதை ஊளையிட்டும் அவன் அறியவில்லை.

நிழலுக்கு அமைத்த குடிசையும் எரிந்து கட்டுகடங்காமல் நெருப்பு பரவும் போது அதை அணைக்க இயற்க்கையின் பரிசான மழையையும் வேண்டி பெறுகிறான்.

அழிந்த காட்டில் தன் ஆலையை அமைத்து அனைவரையும் அதற்கு தேவையான கரும்பையும் விளைய வைத்து வெற்றியடைகிறான். ஆனால் ஊரில் புளி தட்டுபாடென்று வெளியூரிலிருந்து இறக்குமதி செய்தாலும் வனத்தின் மரத்தில் கிடைத்தது போல் இ்ல்லையென்று உணரவைக்கிறார் ஆச்சி. இனி முயன்றாலும் அது போன்ற மரத்தை வளர்க்க முடியாது ஏனென்றால் அது இயற்கை தந்த பரிசு.

தன் மனம் போல் வளர்ந்த வனம் அழிந்து சாய்வதே இந்த சாயாவனம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: