இன்று ஆகஸ்ட் 9 உலக
ஆதிவாசிகளின் தினம்
ஆதிவாசிகள் என்றால் நாம் தான்... நம் முன்னோர்கள் காட்டை விட்டு வெளியேறிய பொழுதும் காட்டை விட்டு வெளியேறி வர கூடாது என்று இருந்தவர்கள் தான் பழங்குடிகள்....
உண்மையில் அவர்களிடம் உள்ள பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் தான் இப்போதும் கடைபிடித்து வருகிறோம்... ஆனால் நாம் மறந்த பலவற்றை அவர்கள் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள்....
எங்களின் ஊரை சுற்றி மூன்று குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள்.... அதில் ஒரு குடியிருப்பு மலையின் உச்சியில் இருக்கும் மற்ற இரு குடியிருப்புகள் மலையின் அடிவாரத்தில் இருக்கும்... ஒரு குடியிருப்பு எங்களுக்கு மிக அருகில் ஒரு 500 மீட்டர் இடைவெளியில் இருக்கும்.... நாங்கள் அவர்களோடு பல ஆண்டுகளாக ஒன்றாக தான் வாழ்ந்து வந்தோம்.... நாங்க மாரியம்மனுக்கு திருவிழா எடுக்கும் போது அம்மனை தேரில் வைத்து வடம் பிடித்து அம்மனை தூக்குவது அவர்கள் தான்.... அதே சமயத்தில் அவர்களும் வன அம்மனுக்கு திருவிழா எடுப்பார்கள்...
சிறு வயதில் இருந்து அவர்களோடு தான் விளையாடுவது, நீச்சல், மரமேறுவது, காடு சுத்துவது, தேன் சாப்பிடுவது என எனக்கு காட்டை அடையாளப்படுத்தியதே என் மலைவாழ் நண்பர்கள் தான்.... ஒரு காடானின் உடல் எவ்வளவு இறுகி போய் கல் மாதிரி இருக்கும் என்பதை அவர்கள் அம்மன் இருக்கும் தேரை தூக்கி தோளில் வைத்து தூக்கி கொண்டு நடக்கும் பொழுது தான் தெரியும்....எங்கள் ஊரில் அம்மனின் சப்பரத்தை தூக்க இவர்களால் மட்டுமே முடியும்... சுமார் மூன்று கிமீ தூரம் ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலை பாதையில் இருந்து அம்மனை தூக்கி கொண்டு நடந்து வருவார்கள்.... சிறு வயது முதலே அவர்களின் உடல்வாகை கண்டு பிரம்பித்து போய் இருக்கின்றேன்.... தற்போது இளைஞர்கள் உடலை ஜிம் க்கு சென்று மாற்றி வருகிறார்கள் ஆனால் இயற்கையாகவே அவர்களின் உடலில் இருக்கும் அந்த உடற்கட்டுகளை பார்க்கவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது....
வனத்துறையில் இவர்களின் பணி தான் அளப்பரியது... இவர்களின் துணையின்றி அவர்களால் இந்த காட்டை பாதுகாக்க முடியாது...
அப்படி உடல் உறுதியாக இருந்தவர்களையும் குடி சாய்த்து விட்டது.... பலர் குடிக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பது தான் வேதனையாக இருக்கிறது..... எவ்வளவுதான் சொல்லி பார்த்தாகி விட்டது... அப்படி கட்டுமஸ்தான உடல் கொண்டவர்கள் அதனை இழந்து நிற்பதை நேரடியாக பார்த்த பிறகு நான் அடைந்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது... தெரிந்தே போய் குடியில் வீழ்ந்தார்கள்.... குடிநோயாளிகளாக மாறி போய் கடுமையான வேலைகளை பார்க்க உடல் ஒத்துழைப்பு தரவில்லை என என்னிடத்தில் அவர்கள் சொன்ன பொழுது அந்த சப்பரத்தை தூக்கிய கைகள் நடுங்கி கொண்டு இருந்தது 😭😭....
தங்களின் இனத்தின் சிறப்பை தொலைத்துவிட்டார்கள்.... காரணம் குடி மற்றும் நாகரிக பொருட்களின் வரவு அதை பயன்படுத்தியதால் விலங்கு மனித மோதல் அடிக்கடி நிகழ்கிறது....
அவர்களாவது தங்களின் இயல்பை தொலைக்காமல் தங்களின் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.... அவர்கள் காட்டில் வாழ அவர்களின் உரிமைகளை தர வேண்டும்... அதனாலே அவர்கள் இந்த குடிக்கு அடிமையாக இருப்பதற்கும் காரணம்... வேறு வழியின்றி அரசின், வனத்துறையின் அடக்குமுறை காரணமாகவே தவறான வழியில் செல்கிறார்கள்... அவர்களை பாதுகாக்க தவறினால் நம்மால் இந்த காடுகளை பாதுகாக்க இயலாது....
காடும் அந்த மக்களும் ஒன்றே.... அவர்களை பிரிப்பது என்பது காட்டின் அழிவின் ஆரம்பமே 🌳🌲....
#TargetZer0 #PlasticFreeForestZone #TribalDay #WorldTribalDay #Nature #savetribal
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக