24 ஆக., 2021

நூல் நயம் : நினைத்தேன் ஜெயித்தேன்

 "
RM.072
175/150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி : இரண்டாம் வாரம்: சுயமுன்னேற்றம் ,
வாழ்க்கை வரலாறு ,தன் வரலாறு.

சுயமுன்னேற்றம் :1/9
வாழ்க்கை வரலாறு :
தன் வரலாறு.           :

#####₹₹₹₹₹₹₹

"நினைத்தேன் ஜெயித்தேன் ".
தேவன் அரோரா .கிழக்கு பதிப்பகம்.
 முதல் பதிப்பு 2007 .விலை ரூபாய் 70 . மொத்த பக்கங்கள் 164.

    கூரை ஏற தெரியாதவர் கோழி பிடிக்கவும் தெரியாது. ஆனாலும் வானம் ஏறி வைகுண்டம் போனார் தேவன் அரோரா .கல்லூரியிலிருந்து பாதியில் விலகினாலும் தனது எதிர்காலக் கனவை ஜப்பானில் விதைத்திருந்தார் .உத்திரபிரதேசம் எங்கே ஜப்பான் எங்கே இரண்டுக்குமிடையில் ஒரு நம்பிக்கை ஏணியை கட்டி ஒரு மகத்தான வெற்றியாளராக தன்னை நிரூபித்து காட்டினார் .
     அவர் எழுதிய yen for yen  எனும் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம் இது.
     
      அவருக்கு ஒரு கனவு இருந்தது .ஜப்பான் சென்று தொழில் கல்வி பயில வேண்டும் .சாத்தியமே இல்லை என்று தேவன் அருகில் கையில் அடித்து சத்தியம் செய்ய ஆயிரம் பேர் காத்திருந்தார்கள் .

        ஆகட்டும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தார் தேவன் அரோரா.
 ஆரம்பிக்கும் போது அவருக்குத் தெரிந்துவிட்டது இது ஒரு யுத்தம் என்று .

        ஆயிரம் கடிதப் பரிமாற்றங்கள் .திறந்திருந்த எல்லா கதவுகளையும் தட்டினார் அரோரா .திறக்காத கதவுகளை தட்டவில்லை .அவர் தனியாக பெயர்த்து எடுத்தார்.
            ஒரு பயிற்சியாளராக ஜப்பானில்
வாழ்க்கையைத் தொடங்கினார் . விடாமுயற்சி ,அறிவுக்கூர்மை ,
அர்ப்பணிப்பு போன்ற திறமைகளால் உலகப் புகழ்பெற்ற ஜி.இ.நிறுவனத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் .
             இருபத்தி ஏழு வருட ஜி.இ.வாசம். பல பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி புரிந்திருக்கிறார். ஜி . இ.நிறுவன சரித்திரத்தில் உயர் பதவியை எட்டிய முதல் இந்தியர் இவர் தான். பொருள்கள் வாங்கும் பிரிவின் பிரிவின் முடிசூடா மன்னராக போற்றப்பட்டார்.
  இன்று "ஐகான் ஏசியா"என்கிற நிறுவனத்துக்கு சொந்தக்காரர் ,இந்திய பொருட்களுக்கான வெளிநாட்டு ஆர்டர்களை
ஏற்படுத்தித் தரும் நிறுவனம் அது. பர்சேஸ் மற்றும் சப்ளை பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் தேவன் அரோரா ஒரு நடமாடும் கையேடு  என்பதில் சிறிதும் ஐயமில்லை.
#######
  இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம் மொத்தம் 16 அத்தியாயங்களில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
​முதல் தோல்வி .
​ஓர் ஆசானை கண்டுபிடி.
​ஹிடாச்சியிலிருந்து வந்த முதல்  கடிதம்.
​.கடைசி படிக்கட்டில் நான்.
​ஜப்பானிய தொலைக்காட்சியில் ஓர் இந்திய தம்பதி .
​திருப்பும் ஏற்படுத்திய டாம் ஒகாடா 
​வீடு மனைவி மக்கள் 
​வெற்றிக்கு அடித்தளம் . 
​சோதனைக்காலம் 
​உற்பத்தியை எட்டுதல் 
​இயக்குனர் ஆனேன்.
​அதிரடி முடிவு 
​என் இரண்டாம் வாழ்க்கை 
​நரகத்தில் பள்ளத்தாக்கில் 
​திருத்தி எழுதப்பட்ட வாழ்க்கை 
16.​கனவு தொடர்கிறது..

#####₹₹
1)சௌகரியம் கிடைப்பதற்கு முன்பு எல்லாமே கடினமானவை தான் என்று  ஜான் நார்லே கூறுகிறார்.
   தேவன் அரோரா கல்லூரி படிப்பை முடிக்க வில்லை .தொடர்ந்து 25 முறை எழுதிப் பார்த்தும் தேர்ச்சி பெற முடியவில்லை. 25 நுழைவுத் தேர்வுகள் எழுதியும் தெரிவு செய்யப்படவில்லை .தொடர் தோல்விகளால் அவர் இருண்டு போயிருந்தாலும் தனக்கென பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று திடமாக நம்பினார்.
  ரேக்ஸ் சினிசிட்டா நிறுவன உரிமையாளரை சந்தித்து பணிக்கு சேர்ந்தார் ."வேலை செய்து கொண்டே இருப்பது யாரையும்  கொன்று விடாது .ஆனால் வேலை செய்வது போல் பாசாங்கு  செய்கிறவர்களை அது காவு வாங்கி விடும் "என்று இவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
     தொலைக்காட்சி பொறியியலை கற்றுக்கொள்வதற்காக ஜப்பான் செல்லத் தீர்மானித்தார் தொலைக்காட்சிப் பெட்டிகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

2) அறிவார்ந்த ஒரு மனிதரோடு நேருக்கு நேர் பேசுவது ஒரு மாத காலம் செலவழித்து புத்தகங்களை படித்து அறிவை விட மதிப்பு உடையது என்பது சீனப் பழமொழி.
    ஒரு நிறுவனத்தின் தலைவரை பார்ப்பதற்கு முன் அவரது செயலாளரை பார்த்து கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே அவர் திட்டம் .அது தான் முன்னேற வழி என்பதை கண்கூடாக கண்டு கண்டு கொண்டு வாழ்க்கை முழுவதும் அதனை பயன்படுத்தி வந்தார். இவரின் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

போஹேக்கரின் செயலாளர் சுப்பிரமணியம் அவர்கள் மூலமாக ஆரம்பகால உயர்நிலை இவருக்குக் கிட்டியது.
      துறு துறுப்பான பேர்வழிகள் மிகவும் நாகரீகமாகவும் நம்பிக்கையுடனும் காய்களை நகர்த்துகிறார்கள் .ஒரு நாட்டின் துணை முதல்வர் உட்பட எல்லா உயர்மட்ட அதிகாரிகளின் செயலாளர்களுடன் நட்புறவோடும் நம்பமாகவும் பழகக் கற்றுக் கொண்டார் இவர்.
     ரேணுவின் அம்மா அப்பா அவர்களுக்கு கிடைத்தது இவர் செய்த அதிர்ஷ்டம்.
3)*நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இரு .வேறு எப்படியாவது இருக்க வேண்டும் என்று ஆசைப் படாதே .நீ இருக்கிறபடியே சிறந்தவனாக இருக்க முயற்சி செய்*... சைன் பிரான்சிஸ் டே சேல்ஸ் .
    ஜப்பானியர்கள் மிகவும் பழமைவாதிகள். அவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் கிடையாது இந்தியர்களைப் போல சரளமாக பேசக்கூடியவர்களும் அல்லர்.அவர்களோடு தொடர்பு கொள்கிற முறையே அலாதியானது என்று இவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி நடக்க ஆரம்பித்தார்.
  
  

    போஹேக்கர் அவர்கள் அறிந்து முக்கிய அவர்களுக்கு அறிமுகப்படுத்தி கடிதம் கொடுத்து உதவினார்..
இதுவரை இவர் கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்புகொள்வது விடாமுயற்சி நல்ல போட்டி மனப்பான்மை.
4) பாஸ்போர்ட் பெறுவதில் ரொம்ப சிரமம் இருந்தது. தொலைக்காட்சி பொறியியல் துறை உயர் கல்வி வசதி எதுவும் இல்லை என்பதே எதிர்கால தேவைகளை முன்னிட்டு தனக்கு அனுமதி வழங்கிய ஆக வேண்டும்  மொரார்ஜி அதனால் இந்தியாவுக்கு தான் நன்மை என்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசி பாஸ்போர்ட் பெற்றார் தேவன் அரோரா. மொரார்ஜி தேசாய் அவர்களை சந்தித்து வாதிட்டு பெற்றார். 
5)திருமணம் முடிந்த பிறகு ஒசாகாவுக்கு பயணமானார். 1972 மார்ச் 12ஆம் தேதி ஜிஇ.நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
6)*ஏற்கெனவே சாதித்ததை விட அதிகமாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இல்லாவிடில் நீங்கள் ஒருபோதும்  வளர மாட்டீர்கள்*. ரால்ப் வால்டோ எமர்சன்.
  இந்தியாவிலிருந்து உற்பத்தி பொருள்களையும் வேலையாட்களையும் தருவித்து ஜப்பானிய நிறுவனங்களுக்கு உதவி முனைந்தேன் .அது உடனடியாக வெற்றி அளித்தது. இரண்டு சதவிகிதம் எனக்கு தரக்கூடிய கிடைத்ததாகக் கூறுகிறார் .இவரின் தொழில் நல்ல வளர்ச்சி அடைந்தது. இந்த வெற்றியின் விளைவாக இவரின் முழு ஈடுபாடும் இந்த உபதொழில் தொழிலின் மீதே சென்றது.
   மூளை தான் நம் கணிப்பொறி .காலையில் எழும்போது உடம்பு சரியாக இல்லை என்று நினைத்தால் அது மூளை கணிப்பொறியில் அப்படியே பதிவாகி விடுகிறது. அதன் விளைவாக நீ ஒரு நோயாளியாக மாறி விடுகிறாய்.நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய் என்பது இவரது தத்துவம்.
    நிறுவனங்கள் வெற்றி படிக்கட்டுகளில் மேல் 60 பற்றிய ரகசியங்கள்.P--I--E என்கிற மூன்று எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
Performance
Image
Exposure.

7) எல்லா சாதனைகளும் ஓர் ஆசை இருந்துதான் தொடங்குகிறது .இதை எப்போதுமே மனத்தில் இருத்துங்கள் .பலவீனமான ஆசைகள் பலவீனமான வாழ்க்கையைக் கொடுக்கும் .சிறிய அளவிலான நெருப்பு சிறிதளவு வெப்பத்தையே தரக்கூடியது :        
          நெப்போலியன் ஹில்.
   பேச்சுக்கலை கவனித்தல் சிந்தித்தல் போன்ற அடிப்படையான ஆற்றல்களைக் கொண்டு ஒருவர் தன்னை பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும் .அடுத்தவர்களையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மனித குல மேம்பாட்டிற்கு இந்த சக்திகள் அவசியம் என்று கருதி அதற்கேற்ற பயிற்சி வகுப்பில் இவர் முழுமையாக கலந்து கொண்டார்.
8) வெற்றி.
இது செயலோடு தொடர்புடையது .வெற்றிகரமான மனிதர்கள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
அவர்கள் தவறு செய்யலாம். ஆனால் ஒதுங்குவது இல்லை. 
           காண்ட்ராட் ஹில்டன் .
வரலாற்றிலிருந்து நாம் இனியும் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொடுக்கிறோம்..
இவரின் பணிப் பொறுப்பு தலைமை நிர்வாகிக்கு அளவுக்கு உயர்ந்தது இவரது வாழ்க்கை மிகவும் பரபரப்பானது.
தாம்சன் நுகர்பொருள் மின்னணுவியல் தொழிலோடு இவர்கள் இணைந்து அதிகாரப்பூர்வமாக செயல்பட்டதால் இவருக்கான மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது.
9) ஒரு பொருள் கண்களுக்குத் தெரியும் தொலைவுதான் அவற்றின் இல்லை என்பது .:james browton.
1990 இல் யோகாவா மருத்துவ அமைப்பில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஒய் எம் .எஸ்  தான் உண்மையான ஜப்பான். எம் ஆர் சிடி ஸ்கேன் எக்ஸ்ரே கருவிகள் மற்றும் கருவிகள் போன்ற நோய் கண்டறியும் கருவிகள் பற்றி இவருக்கு எந்த விவரமும் தெரியாது அந்த நிறுவனத்தில் பணியாற்றி தொடங்கிய காலம் இவருக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.
10) சாதனையை நிகழ்த்துவதற்கு படிக்கட்டுகள் உண்டு நன்கு தெளிவாக திட்டமிட வேண்டும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தயாராக வேண்டும் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் விடாப்பிடியாக இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்.
  இப்போது இவர்கள் குழுவிடம் நன்கு வளர்ச்சி அடைந்த ஒரு குழு அமைந்துவிட்டது கலாச்சாரம் என்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது நாங்கள் சாப்பிடுகிறோம் சுவாசிக்கிறோம் எங்களாலும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் இவர்.
11)
இயக்குனர் ஆகிவிட்டார்.
என்னை நோக்கி மிகவும் சிறப்போடு நின்றுவிட்டார்.
      *புதிதாக ஒன்றை உருவாக்குவதற்கு திறமை  அத்துடன் தைரியம் கூடுதலாக வேலைத்திறன்- இவை அனைத்தும் அற்புதங்களுக்கு இணையானது.*
என்கிறார் பாப் ரிச்சர்ட்ஸ் , 
போல்வால்ட்டர் 
இருமுறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்.....
13)
ஒரு வேலையை செய்து முடிக்க புதிய வழி கிடைத்து விட்டால் அதை இன்னும் சிறப்பாக செய்து முடி.
 ::தாமஸ் ஏ.எடிசன்

சர்வதேச உற்பத்தி திட்டம் பிரிவின் பொது மேலாளராக பணியாற்றினார்.
 அதிரடி முடிவாக 1998 டிசம்பர் 31-ஆம் தேதி ஓய்வு பெற விரும்பினார் ஆசியா-பசிபிக் இருதயநோய் சர்ஜரி குழுவின் பொது மேலாளராக மெட்டிரானிக் ஆசியாவில் ஒரு பதவி தருவதாக இவருக்கு சொல்லப்பட்டது.
13)*எந்தவிதமான துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியை  போன்ற அத்தியாவசியமான வேறு ஒரு பங்கு இருப்பதாக நான் கருதவில்லை. எல்லாவற்றையுமே அது வென்றுவிடுகிறது, இயற்கையும் கூட .*ஜாதி ராக்ஃபெல்லர்.

  மனத்தாலும் உடலாலும் 25 ஆண்டுகள் ஜி5 வனத்தில் வாழ்ந்து விட்டு இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வது என்பது பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
14) *எப்போதும் வீழ்ச்சி அடையாமல் இருப்பதில் எந்தப் பெருமையும் கிடையாது .அது ஒவ்வொரு முறை விழுந்த பிறகும் எழுவ தில்  தான் உள்ளது .*கன்பூஷியஸ்.
  மெட்டிரானிக் நிறுவனத்திலிருந்து இவரை விலகியதன் பாதிப்பு அதனுடைய தன்மையை உணர வைத்தது .இவருக்கு முக்கியப் பாடம் கிடைத்தது .22 ஆண்டுகள் ஈடு இணையற்ற தொடர்ச்சியான வெற்றி என்பது எதிர்காலத்திற்காக எந்த உத்தரவாதத்தையும் கொடுக்காது என்பதை அறிந்து கொண்டார்.
15) திருத்தி எழுதப்பட்ட வாழ்க்கை:

*தொழில் முனைவர் என்பவர் அடிப்படையில் தீர்க்கதரிசனம் உடையவர் .அத்துடன் நடைமுறைகளை பின்பற்றுகிறவர் .எதையேனும் அவர் ஊகித்து உணரலாம் .அப்படி அதை ஊகித்து உணரும்போது  அதை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றியும் துல்லியமாக அவர் கூர்ந்து நோக்குவார் ராபர்ட் எல். ஷாவார்ட்ஸ்.
    பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டாண்லி ஒர்க்ஸ்  என்ற நிறுவனத்திற்கு ஆசியாவில் கொள்முதல் துறைக்கு தலைமை பொறுப்பு ஏற்க இவரிடம் சொல்லப்பட்டது .அவ்வாறே தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

16) கனவு தொடர்கிறது.

*ஆயிரம் மைல் தொலைவு பயணமும் ஒற்றைக்காலில் தான் தொடங்குகிறது*.
                       சீன நாட்டு பழமொழி.

ஜூலை 2003 எதையாவது செய்தாக வேண்டும் என்று பரபரப்பாக இருந்தார்
இவரின் திறமைகளைப் பற்றியும் சொத்துக்களை பற்றியும் கணக்கெடுத்து பார்த்தபோது அவற்றில் செல்வச்செழிப்பு அவருக்கு பிரமிப்பும் வியப்பூம் ஊட்டியது.
  2004 என்னுடைய புதிய தொழில் முயற்சி தொடங்கப்பட்டது அதற்கு ஐகானஆசியா 
ICONASIA என்ற நிறுவனம் பெயர் வைக்கப்பட்டது.
இதன் பொருள் என்னவென்றால் ,இந்தியன் ஆகிய நான் (I) சைனாவில் 15 பணியாற்றுகிறேன் (ஆகையால் C ),ஜப்பானில் வசிக்கிறேன் (நிப்பான் -N)இவை தவிர என்னுடைய நிறுவனத்தின் எல்லை என்பது முதல் கட்டமாக ஆசியா(ASIA) என்று இருப்பதுதான். ஓ  என்ற எழுத்து இவருடைய வட்டவடிவமான முகத்தை குறிப்பதாக நினைத்துக்கொண்டார்.

   எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒ இஎம் அடிப்படையில் ஜி இஆடியோ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சான்யோ நிறுவனம் செய்து வந்தது .அந்த நோரி இப்பொழுது ஐக்சானாசியா  லிமிடெட் நிறுவனத்தின் இவரோடு பங்குதாரராக ஆகிவிட்டார்.

    டேவிட் ஜோசப் ஷ்வார்ட்ஸில் வார்த்தைகளில் சொல்வதென்றால்,
" எல்லா மகத்தான சாதனைகளுக்கும் உரிய நேரம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் நான்கு கட்டங்களில் கடந்து வரத்தான் வேண்டியிருந்தது .
அ) சேகரித்தல் Gathering.
ஆ)அதிரடியாக தாக்குதல்.Sturming.
இ) எல்லை வகுத்தல்.Norming ஈ)உருவாக்குதல்.Forming.

        ஒரு மாறுபட்ட கணக்கின்படி நான்கு கட்டங்களையும் கடந்து வெற்றிக் கொடி நாட்டி விட்டார் தேவன் அரோரா அவர்கள்.

  
##########
சரிதமாக,
 சுயசரிதம் போல எழுதப்பட்ட இந்த நூல் சுயமுன்னேற்ற நூல் என்பது போலவே அமைந்திருக்கிறது .

இந்தப் புத்தகத்தை படிக்கின்ற சுயம்புகள் நாளைய உலகில் ஜொலிப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை .

அருமையான தமிழில் அழகாக எழுதப்பட்டிருக்கிறது .அவசியம் படிக்க வேண்டிய நூல்.

சத்தமே இல்லாமல் 
யுத்தம் செய்து 
மொத்தமாக உலகையே 
குத்தகைக்கு விலைக்கு வாங்கிய வித்தகரின் சுயமுன்னேற்ற புத்தகம் இது

நன்றி :

கருத்துகள் இல்லை: