மக்கள் உரிமை காக்க தவறும் மருத்துவர்களை பார்க்கும்போது , நான் ஒரு மருத்துவர் என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன் ~ Dr. Alison Goodwin , NewZealand.
இந்தக் காணொளியில் நியுசிலாந்து மருத்துவர் Alison Goodwin பேசுகின்ற சாரம் இதுதான்.
இதைத்தான் மருத்துவ அறம் போற்றும் ஒவ்வொரும் தொடர்ச்சியாக பேசிவருகிறோம்.
"ஒரு பரிசோதனை தடுப்பூசியை, மருத்துவ குறுக்கீடை அனைவருக்கும் திணிப்பது என்பது அறமற்ற செயல் ஆகும்.
அறிவியல் பார்வையில் சில முக்கிய புள்ளிகள் இப்பரிசோதனை தடுப்பூசி பற்றிய கவனத்தை பெறுகிறது.
1. புதிய தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ளது என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் போடுவதற்கு எந்த முன்பின் அனுபவம் இத்தொழில்நுட்பத்தில் நமக்கு இல்லை.
2. பரிசோதனை தடுப்பூசி அதாவது இன்னமும் பரிசோதனை கட்டத்தில் உள்ள தடுப்பூசி.
இதன் சாதகபாதகங்களுக்கு எந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமும் பொறுப்பு ஏற்கவில்லை.
இந்த பரிசோதனை தடுப்பூசியின் பலன்கள் இன்று வரை நமக்கு முழுமையாக தெரியவில்லை. இதனுடைய பாதகங்கள் பற்றிய முழுமையான ஆய்வுகளும் இன்னமும் முடியவில்லை. தற்சமயம் போடப்படுவதைதான் நாம் பரிசோதனை கட்டமாக எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.
3. இந்தத் தொற்றும் தீவிரமானதாக இல்லை. குழந்தைகளில் மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சூழலில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத ஒரு பரிசோதனை கட்டத்தில் உள்ள தடுப்பூசியை திணிப்பது என்பது risks vs benefit என்ற அடிப்படையில் இது நமக்கு தேவையற்றதாகவே உள்ளது.
மிக அடிப்படையான மூன்று மருத்துவ அறம் பற்றி நான் இங்கு குறிப்பிட நினைக்கிறேன்.
1 தீங்கு செய்யாமல் இருப்பது. Do no harm.
2. வெளிப்படைத்தன்மை மற்றும் விருப்பத்தேர்வு முன்னுரிமை. Informed consent. முழுமையான தகவலை சொல்லி தன்னிச்சையான ஒப்புதல் பெறுவது.
3. மருத்துவத் தேடல் என்பது என்றும் ஒருவருடைய விருப்பத் தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும்.
மருத்துவர்கள் மக்களுக்கான அவர்களது உரிமையை காப்பதற்கு முன்னிற்க வேண்டும். மக்கள் உரிமைக்கு மாறாக செயல்படுவது என்பது மருத்துவத் துறைக்கே அவமானமாகும். மருத்துவர் என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டும்."
பிகு: தொடர்ச்சியாக கட்டாயத்தடுப்பூசியை ஆதரித்தும் , தடுப்பூசி மறுப்பு மற்றும் சந்தேகம் என்பதே அறிவின்மை என்பது போலவும் பல மருத்துவர்கள் சித்தரித்து வருகிறார்கள். இவ்வாறான கருத்துகள் உங்கள் கண்களில் பட்டால் அம்மருத்துவர்களது பதிவை ss எடுத்து வைக்கவும்.
இப்படியான அறம் கெட்ட , சர்வாதிகார பாசிச சிந்தனையுடைய, சமூகத்திற்கும் மக்களுக்கும் மருத்துவத்திற்கும் துரோகம் செய்யும் மருத்துவர்களை நாம் தோலுரித்து காட்டவேண்டும்.
மக்கள் இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அறம்கெட்ட இம்மருத்துவர்களை நாளை உலகம் நிச்சயம் நிஞ்சிக்கும்.
இது நடக்கும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக