28 ஆக., 2021

நூல் நயம் : விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

"
RM.072
177/150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி : இரண்டாம் வாரம்: சுயமுன்னேற்றம் ,
வாழ்க்கை வரலாறு ,தன் வரலாறு.

சுயமுன்னேற்றம் :1
வாழ்க்கை வரலாறு :2/10
தன் வரலாறு.           :

#####₹₹₹₹₹₹₹

"விவேகானந்தர் "
வாழ்க்கை வரலாறு .
கீர்த்தி .ராமையா பதிப்பகம் .
முதல் பதிப்பு 2010 .விலை ரூபாய் 90 மொத்த பக்கங்கள் 184..

        எனது 6 வயதில் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் அமர்ந்து நிலை கோணத்தில் படம் வரைந்து தியானம் செய்தேன்.
       சாரதா அம்மையார் அவர்களின் படத்தையும் வரைந்தேன். பிறகுதான் விவேகானந்தர் முகஓவியம் மட்டும் வரைந்து வீட்டில் வைத்திருந்து என் தந்தையின்  பாராட்டையும் பெற்றுமகிழ்ந்தேன்.
     யோகா வெல்லமென செய்தேன் .விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு எனது தந்தை சொல்லக் கேட்டுக் கொண்டேன் .அதன்பிறகு அவர் சிகாகோவில் உரையாற்றிய விதம் படித்து தெரிந்து கொண்டேன் .கன்னியாகுமரிக்கு சென்ற போது அவர் நினைவிடம் சென்று வணங்கி வந்தேன். கல்கத்தா ராமகிருஷ்ணா மடம் தலைமையிடம் சென்று வந்தேன்.
      விவேகானந்தர் என்று சொன்னாலே ஏனோ என்னுள் ஒரு உற்சாகம் ,உயிர்ப்பு எல்லாம் என் உடலில் பரவுவதை உணர்கின்றேன்.

        "அவர் மட்டும் இன்றி உயிரோடு இருந்தால்  அவர் கால்களில் விழுந்து கிடப்பேன் .இந்திய நாட்டின் விடுதலைக்கான வித்திட்டதோடு உலக அரங்கில் முன்வரிசையில் பாரதம் அமர வேண்டும் என்று இளைஞர்களை ஊக்குவித்த பெருமை அவரையே சாரும் ,"என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் கூறினார் .

      உலகின் மொத்த அறிஞர்கள் எல்லாம் ஒருபுறம் நிறுத்தினாலும் அவர்கள் அத்தனை பேரையும் விட மிகச் சிறந்த அறிவாளி சுவாமி விவேகானந்தர் என்று அமெரிக்க பேராசிரியர் ஜான் ரைட்ஸ் கூறினார் .
      அத்வைதம் சொல்லும் ஞான யோகத்தை சிகாகோவில் சிங்கம் போல முழுங்கிய விவேகானந்தர் தமிழ்நாட்டில் சென்னையில் வந்தபோது வறுமையில் வாடும் மீனவர்களை பார்த்து ," ஐயோ .இந்த ஏழைகளுக்கு வாழ்க்கையில் விமோசனமே கிடைக்காதா?" என்று கண்ணீர்விட்டு கதறினார்.

    ஞான யோகத்தை பற்றி பின்பு போதிக்கலாம் .இன்றைய இந்தியாவிற்குத் தேவை கர்மயோகம் என்னும் மனிதத் தொண்டு தான் என்று உணர்ந்த அந்த மகான் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே தொண்டு செய்தார் என்றால் அது மிகையல்ல .எந்த நெஞ்சில் வீரம் இருந்ததோ அதே நெஞ்சில் அன்பும் இருந்தது .அதே நெஞ்சில் அறிவும் இருந்தது .ஞானமும் இருந்தது .அத்தனையும் இணைந்த பெரும் சக்தியாக திகழ்ந்தவர் யுக ஆச்சாரியார் சுவாமி விவேகானந்தர் அவர்கள் .

      அவரைக் குறித்து இந்த புத்தகத்தில் கீர்த்தி அவர்கள் மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்.
#######

        முன்னுரையாக கீழ்க்கண்டவாறு கீர்த்தி அவர்கள் கூறுகிறார் :
       "இளைய பாரதமே எழுந்து வருக! என்று புதிய பாரதத்தைப் படைக்க விரும்பிய அந்த மகான் வேதத்தின் கருத்துக்களை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையாக்கி எல்லோரையும் பிரம்மத்தை அறிய வைத்த பிரம்மச்சாரியர்.
       நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நாம் சந்திக்கின்ற பிரச்சனைகளை எல்லாம் துணிவுடன் எதிர்த்து நிற்கும் வல்லமையை தருவதாக அமைந்த அந்த அருந்தவப் புதல்வரின்  வாழ்க்கை சரிதத்தை ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டியது அவசியம் ",என்கிறார் கீர்த்தி அவர்கள்.

   

######
இந்த புத்தகம் மொத்தம் இருபத்தி ஏழு தலைப்புகளில் பிரிக்கப்பட்டு விவேகானந்தர் வரலாறு எழுதப்பட்டுள்ளது.
​நரேந்திரன் பிறப்பு.
​நரேந்திரனின் இளமைப்பருவம் .
​கடவுளை காணும் ஆர்வம் .
​ராமகிருஷ்ணருடன் சந்திப்பு .
​உனக்காகத் தான் காத்திருந்தேன் .
​அம்பிகையும் நரேந்திரனும் .
​ராமகிருஷ்ணரின் மறைவு.
​ராமகிருஷ்ணன் மட உதயம் .
​பவஹாரி பாபா தரிசனம் .
​இமாலயத்தில் சுவாமிஜி.
​சுவாமியின் யாத்திரைகள் .
​குஜராத் விஜயம்.
​சுவாமியின் தென்னிந்திய விஜயம் .
​சென்னைக்கு வந்தார் .
​அமெரிக்க விஜயம் .
​சிகாகோவில் முழக்கம் .
​இங்கிலாந்து விஜயம் .
​வங்காள விஜயம் .
​ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் உருவாதல் .
​வெளிநாடுகளில் சங்கம் .
​உடலை உகுத்தார் சுவாமிஜி.
    
​இனி கீர்த்தி அவர்களின் வார்த்தையில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் வாழ்க்கை சரிதம் பார்ப்போம்.
     1863 ஆம் வருடம் ஜனவரி 12 ஆம் நாள் அன்று மகரசங்கராந்தி பூஜைகள் நகரெங்கும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த இன்றைய அதிகாலை சூரிய உதயம் ஆகி சில நிமிடங்கள் கழித்து விவேகானந்தர் அவதாரம் செய்தார் . தந்தை விஸ்வநாத தத்தர்.அன்னை புவனேஸ்வரி இவருக்கு விஸ்வேஸ்வரன் என பெயரிட்ட போதும் குடும்பத்தார் அனைவரும் நரேந்திரநாத் என்று பெயர் கூறி அழைத்தனர்.
     தமிழில் ஆறாம் வயதில் கல்வி கற்ற பாடசாலைக்கு அனுப்பப்பட்டார் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஒருமுறை ஆசிரியர் காதை பிடித்து திருகியதற்கு அவர் அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியது போல அல்லாமல் தலைமை ஆசிரியர் தைரியமாக எடுத்துக் கூறவே  அதுபோன்ற கண்டிக்கின்ற வழக்கம்  மறுபரிசீலனை செய்யப்பட்டதற்கு இவரே காரணமாக இருந்தார்.
  பள்ளியில் படிக்கும்போதே கடவுளைக் காணும் ஆர்வம் இவருக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது .தியானம் செய்வதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார் .
     ஒருமுறை நண்பர்கள் நண்பர்களோடு சேர்ந்து தியானத்தில் அமர்ந்திருந்த போது பாம்பு வந்துவிடவே எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடி கூச்சலிட்டனர் .இவரை  எச்சரித்தனர் .ஆனால் இவர் கடைசி வரை கண் விழிக்காமல் தியானத்திலேயே ஆழ்ந்து விட்டதை எல்லோரும் ஆச்சரியமாக கூறிக் கொண்டிருந்தார்கள்.
  

தட்சிணேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண பரமஹம்சர் தன்னைமுதல் முதலாக சந்தித்துக்  கடவுளை கண்ட துண்டா  என்று கேட்கிறார் .அவரும் உன்னை நான் இப்போது எப்படி காண்கின்றது போல்தான் கடவுளைக் கண்டேன்; உனக்கு காட்டுகிறேன் என்று அருகில் அமர்த்திக் கொண்டார்.
     மூன்று முறை சந்தித்தார் மூன்று முறையும் இவரைவிட குருவே மிகவும் ஆவலாக இருந்தது அவருக்கு பரவசநிலை உண்டாக்கினார்.
பொதுவாக ஒரு நல்ல சீடரை தேடித்தான் குரு தவிர்த்து போவார்கள்.ஒரு நல்ல குரு தனக்கான நல்ல சீடனை தேடிக் கொண்டிருப்பார்கள் என்பதே இவர்கள் இருவர்கள் விஷயத்தில் நடந்த ஒன்று.
    அம்பாளின் காரியத்திற்காக பிறந்தவன் நரேன் என்று குருதேவரல் சுட்டிக்காட்டப்பட்டவர் அம்பாளை கண்டார் . அதுவரை கடவுளுக்கு உருவமா என்று கேட்டவாறு இருந்த நரேந்திரர் அன்னைபவதாரணியைப் பரிபூரணமாக உணர்ந்தார்.
    இந்த நிலையில் குரு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது. நரேந்திரரை உத்தம சாதகராக செய்திட வேண்டிய பணி ஒன்று தமக்கு எஞ்சியுள்ளது என்று குரு கருதினார்.
  1866 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் குருதேவர் நரேந்திரரை தன் அருகில் அமர்த்திக் கொண்டு சமாதியில் ஆழ்ந்தார் அப்போது மிக சூட்சுமமான ஏதோ ஒரு அலாதியான தெய்வீக சக்தி நம்முடைய உடம்பில் புகுந்து பரவுவதை நரேந்திரன் உணர்ந்தார். சிறிது நேரம் கழித்து குரு அழுது கொண்டிருக்க காரணம் கேட்கிறார் .அதற்கு அவரும் ," நரேந்திரா நான் என்னிடம் சேமித்து வைத்திருந்த அனைத்தையும் உனக்கு அளித்து விட்டேன் . நான் உனக்கு அளித்த எனது சக்திகளைக் கொண்டு இந்த உலகில் நீ மகத்தான காரியங்கள் பலவற்றை சாதிக்கப் போகிறாய் .அதன் பின்புதான் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்புவாய் என்று கூறியவாறு இயற்கை அடைந்தார்.
  ராமகிருஷ்ண மடம் உதயமாகிறது.
அலகாபாத்தில் சுவாமி இருக்கும்போது பவஹாரி பாபா எனும் ஞானி காசிபூரில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரை காண 1890 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் வாரம் புறப்பட்டுச் சென்று கண்டார். அன்னை சாரதா தேவியை கண்டு ஆசிர்வாதம் பெற்று இமயமலையில் சிறிது காலம் சுற்றித் திரிந்து தவம் இருந்தார். இந்தியா முழுமைக்கும் சுவாமி யாத்திரையை மேற்கொண்டார்
 குஜராத் வந்தார் .போர்பந்தரில் சுமார் பதினோரு மாத காலம் தங்கியிருந்த சுவாமிஜி திவானின் மொழிபெயர்ப்புக்கு பேருதவியாக இருந்தார்.
   பாரதத்தின் ஆன்மீகத்தால் மேலைநாடுகளின்  உலகாயதத்தை போக்கடிப்பதோடு இன்னொரு காரணத்திற்காகவும் மேலை நாடுகளுக்கு சுவாமிஜி சென்று வர விரும்பினார்.
 சுவாமிஜி தென்னிந்திய விஜயம் மேற்கொண்டார். சென்னைக்கு வந்தார். அமெரிக்கா
விஜயம் மேற்கொண்டார். சுவாமிஜியிடம் விபரங்களை கேட்டறிந்த ஜார்ஜ் டபிள்யு ஹெல் என்ற செல்வந்தரின் மனைவி சர்வமத மகாசபை கூட்டத்தில் சுவாமிஜி கலந்துகொள்ள செய்திட தான் முயல்வதாக உறுதியளித்தார்.
   விஞ்ஞானத்திலும் செல்வச் செழிப்பிலும் அதுவரை கர்வம் கொண்டிருந்த மேலை நாடுகள் கீழ்நாட்டு நாகரிகங்களின் மதிப்பையும் ஆன்மீக உயர்வையும் புரிந்து கொள்ள 1893ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதத்தில் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மகாசபை கூட்டம் ஒரு பாலமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல .
மகாசபை கூட்டம் நடைபெற்ற நாள் உலக சமய சரித்திர வரலாற்றில் ஏன் இந்து சமயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாக அமைந்தது .சிங்கம் போல கர்ஜித்து சுவாமி விவேகானந்தர் இந்து மத முழக்கமிட்டார்.
   அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகாலம் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்து உரையாற்றி களைத்துப்போன சுவாமிஜி கடற்பயணம் தமக்கு நன்மை பயக்கும் என எண்ணி 1895 ஆண்டின் இறுதியில் பாரீசுக்கு  கிளம்பினார். அப்போது அவர் தனது அந்திம காலம் நெருங்கி வருவதை உணர்ந்தவர் போல் தனது நியூயார்க் நீ பக்தர்களிடம் எனது காலம் நெருங்கிவிட்டது என்று கூறியிருந்தார்.
 இங்கிலாந்து விஜயம் செய்து லண்டனில் பல இடங்களில் உரையாற்றினார்.
  பின்னர் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து சொற்பொழிவாற்றி 1897ஜனவரி 26 ஆம் நாளன்று இந்தியா  முனையான பாம்பணை வந்தடைந்தார் .அங்கு ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வரவேற்று வணங்கினார். சென்னை வந்து வங்காளம்  திரும்பினார்.
   ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் உருவாக்கப்பட்டது  மிஷனின் செயல்பாடுகளாக,
1) பொதுமக்களில் லவுகீக ஆன்மீக நலன்களுக்கு உகந்தவாறு ஞானமும் விஞ்ஞானமும் புகட்டுவதற்கு தகுதி பெறுமாறு சிலருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
2) கலைகளையும் தொழில்களையும் வளர்க்கவும் ஊக்கவும் வேண்டும்.
 3)ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் வேதாந்த தத்துவங்களும் வேறு சமயக் கருத்துக்களும் எவ்வாறு தெளிவுபடுத்த  பெற்றனவோ அதே முறையில் இவற்றை பொதுமக்களிடையே புகுத்தி பரப்ப வேண்டும்.
    வெளிநாடுகளில் இது போன்ற சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

    1902-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி புண்ணிய  தினமாக விளங்கும் அந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கத்தை விட முன்னதாகவே சுவாமிஜியை விழித்தெழுந்தார் .பூஜை அறைக்கு சென்றார். ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார் .
       வழக்கத்தைவிட அதிக நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்த சுவாமிஜி அன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு இம்மண்ணுலகில் காற்றினை கடைசியாக ஒருமுறைஉள்ளுக்குள் இழுத்தார். 
      உடலை உகுத்தார்.

   குருதேவர் முதலில் ஸ்ரீ ராமகிருஷ்ணராக வாழ்ந்தார் .ஸ்ரீ இராமகிருஷ்ணர் என்ற உடல் மறைந்ததும் அவரே சுவாமிஜி விவேகானந்தராகவும் வாழ்ந்தார் .அவர்கள் பூவுலகை விட்டுச் சென்று விட்டார்கள் .

       இருப்பினும் அந்த மகான் துவங்கிய ஸ்ரீராமகிருஷ்ண மடங்களும்,ஸ்ரீ ராமகிருஷ்ண சங்கங்களும் அவர் விட்டுப்போன ஆன்மீக பணியையும் சமுதாயப் பணியையும் விடாது தொடர்ந்து தொண்டாற்றி வருவது 
அப்பெருமகனின் புகழை மேலும் மேலும் வளர்த்திடுமே  தவிர ஒருபோதும் குன்றச் செய்து விடாது.

         #########

        * ஒவ்வோர் ஆன்மாவும் தெய்வீகத் தன்மை உடையது .அதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ளும் வரையிலும் அந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தும் வரையிலும் அதை உணர்த்திச் சொல்ல நான் பிறவி எடுத்து கொண்டே இருப்பேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நன்றி :

கருத்துகள் இல்லை: