9 ஆக., 2021

நூல் நயம் : கரிசல் காட்டுக் கடுதாசி - கி. ராஜநாராயணன்


Reading marathan 2021
Id no RM245
Book no 35/50
கரிசல் காட்டுக் கடுதாசி
ஆசிரியர் கி. ராஜநாராயணன்
பக்கங்கள் 272
அன்னம் வெளியீடு

கரிசல் காட்டு மண்ணின் வாசமெல்லாம் என் எழுத்துக்களில் கொண்டு வந்து விட வேண்டும் என்பது என் தீராத விருப்பம் - ஆசிரியர் கி. ராஜநாராயணன்.

நான் படிக்கும் முதல் கி. ரா அவர்களின் நூல். 

இது ஒரு கட்டுரைத் தொகுப்பு
ஆனால் வாசிக்க வாசிக்க எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, இது கட்டுரைத்தொகுப்பா? சிறுகதைத்தொகுப்பா? இல்ல தன் மண்ணோட  சரித்திரமா?

ஏதுவாக இருந்தா என்னங்க, படிக்க படிக்க கரிசல் காட்டல அவங்களோட இருக்கிற மாதிரி எழுதியிருக்கிறார். 

முதல்பாகம் எல்லாம்  கிராமத்தின் நையாண்டி, நக்கல்களைக் கலந்து கரிசல் மைந்தர்களின் வாழ்வைக் காட்டுகிறார்.

இவரது எழுத்தில் அந்த மண்ணில்  ஒரு கிராமத்தான் கூட  தப்ப முடியாது என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது, போலீஸ் தாத்தா, எமனிடமருந்து காப்பாற்றிய எருமைன்னு நிறைய கதைகள் சொல்லிடே வர்ராரு.

அப்புறம் அடை மழை காலத்தில், இந்த கத நடுவுல பிரம்மா கதை ஒன்னு வந்தது அத படிச்சு வயிரு வலிக்க சிரிச்சான்னா பாத்துக்குங்க. 

நீர் ஆகாரம் குடிச்ச மக்களல காபி குடிக்க மாத்துன வரலாறு எனக்கு புதுசு, காபி பொடி வியாபாரம் இப்படித்தான் ஆரம்பிச்சது நினைக்கரப்ப நாம எவ்வளவு தொலைவு வாழ்க்கைப்பாதையிலே மாறிட்டோம் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

முதல் பாகம் முழுவதும் மக்களோட வாழ்வியல் ன்னா இரண்டாம் பாகத்துல அவங்க படுற கஷ்ட நஷ்டத்த எழுதியிருக்காருங்க. 

இடையில சாதி பற்றிய  சிந்தனைகள்ன்னு  ரெண்டு கட்டுரை கூட வருதுங்க.

இவர  கதைசொல்லித் தாத்தான்னு சிலர் எழுதியிருந்தாங்க, அது இந்த புத்தகத்த படிச்சு முடிச்சதும் தாங்க தெரிஞ்சது எவ்வளவு உண்மையின்னு. 

அப்புறம் முக்கியமா நம்ம வாசிப்பை நேசிப்போம் குழுவுக்கு நன்றிங்க. நீங்க கி. ரா அய்யாவ கொண்டித்தாங்க நான் அய்யாத் தேடி படிச்சேங்க.

நன்றி.

நன்றி :
எஸ.கோபிகிருஷ்ணா, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: