5 செப்., 2021

இன்றைய திருமந்திரம் : பாடல் 1260

திருமந்திரம் - பாடல் #1260: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரிந்த வெழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த வெழுத்தது சக்கர மாக
விரிந்த வெழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த வெழுத்தினி லப்புற மப்பே.

விளக்கம்:

பாடல் #1259 இல் உள்ளபடி உலகங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவிய எழுத்தானது வெளிச்சமாகவும் சத்தமாகவும் இருக்கின்றது. சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகங்கள் முழுவதும் விரிந்து பரவிய அந்த எழுத்தே ஏரொளிச் சக்கரமாகவும் பிறகு பஞ்ச பூதங்களில் முதலில் நிலத்தின் தன்மையையும் அதன் பிறகு அதிலிருந்து நீரின் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது.

நன்றி :

கருத்துகள் இல்லை: