28 செப்., 2021

இன்றைய திருமந்திரம் : பாடல் 1277

திருமந்திரம் - பாடல் #1277: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வீச மிரண்டுள நாதத் தெழுவன
வீசமு மொன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமு மெழுந்துட னொத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

விளக்கம்:

பாடல் #1276 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படும் சத்தத்திலிருந்து வெளிப்படும் மந்திர ஒலிகள் இரண்டு வகைகளாக இருக்கின்றது. இவை இரண்டுமே சத்தத்திலிருந்து வெளிப்பட்டு மேல் நோக்கி ஒன்றின் மேல் ஒன்றாக விரைவாக எழுந்து கொண்டே இருக்கின்றது. இந்த இரண்டு விதமான மந்திர ஒலிகளும் ஏரொளிச் சக்கரத்தின் சத்தத்துடன் சரிசமமாகச் சேர்ந்து ஒன்றாக வெளிப்பட்ட பிறகு ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி இருக்கின்ற வெளிச்சத்தோடும் சரிசமாகப் விரிந்து பரவுவதை பாடல் #1276 இல் உள்ளபடி உலகத்திலுள்ள இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் காணலாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: