21 செப்., 2021

நூல் நயம் : வஉசி கண்ட பாரதி

#நான்காம் ஆண்டு விழா வாசிப்புப் போட்டி #5ஆம் வாரம் 
# பாரதி இயல்

புத்தகம் : வி.ஓ.சி. கண்ட பாரதி
ஆசிரியர்: வ.உ.சி.சுப்பிரமணியம்
பக்கங்கள் : 65

வி.ஓ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் வ.உ.சியின் மகன் வ.உ.சி.சுப்பிரமணியம், 1946ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரிமியர் கம்பெனி என்ற சென்னை நிறுவனம் மூலம் வெளியிட்ட நூல்  இது.
அமரகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பற்றி தனது தந்தையார் வி.ஓ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய குறிப்புகளை கொண்டு  இந்த நூலை ஆக்கியதாக குறிப்பிட்டுள்ளார் நம் ஆசிரியர்.

வி ஓ சிக்கு பாரதி அறிமுகமே அவர் அதி புத்திசாலி என்றும் சிறுபிள்ளையாக இருக்கும்போது தமிழில் மிக அருமையாக பாடுவார் என்றும் அவர் தந்தை கூற கேட்டு அவரை பார்க்கும் எண்ணம் தூண்டியிருக்கிறது.
அவர்களது முதல் சந்திப்பு பாரதி சென்னையில் 'இந்தியா' என்னும் பெயர் பெற்ற தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த காலத்தில்தான்.

சுப்பிரமணிய பாரதியும் நானும் சோழனும், கம்பனும் ஆக இருந்து பிறகு மாமனும், மருமகனும் ஆகினோம் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களது நெருக்கத்தை காட்டுகிறது. 
சூரத் காங்கிரஸில் தமிழர்கள் என்ற தலைப்பில் நமக்கு தெரிந்த தெரியாத விஷயங்களை பதிவிட்டுள்ளது இந்திய விடுதலைப்போரில் காங்கிரசின் தலைமையைத் தீர்மானிக்கும் சக்திகளாகச் செயல்பட்டவர்களில் வ.உ.சியும் பாரதியும் முக்கியமானவர்கள் என்பதற்கு சிறந்த சான்றாக இந்நூல் உள்ளது எனலாம்.

கடல் ஆதிக்கம் வேண்டும் என்ற நோக்கத்தில் தன் நண்பர்கள் மற்றும் தன் சொந்த முயற்சியாலும் பொதுஜன ஆதரவாலும் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி 1906 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.  அதனால் வெகுண்டெழுந்த வெள்ளையர்கள் வவுசி யை சிறைக்கு தள்ள விரும்பி ராஜத்துவேஷ வழக்கு தொடங்கி 1908ஆம் வருடம் மார்ச் மாதம் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் நம் வவுசி.

அப்போது அதற்காக நெல்லை வந்த பாரதி வவுசிக்கும் கலெக்டர் விஞ்ச் கும் இடையில் நடைபெற்றதை உருவகப்படுத்தி பாட்டுகளை எழுதியுள்ளார்.

பிறகு புதுவையில் பாரதியின் தரிசனத்தையும் , மாமாவின் மாற்றம்:சாமியாரின் தோற்றம் பற்றியும் , கடைசியாக அவரைக் கண்டதும் பற்றியும்...
மாமா மறைந்தார் ....
மாண்பு மணத்தது ...
மாமா இவ்வுலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரது தேசிய கீதங்களும் , மற்றைய பாடல்களும் , கதை கட்டுரைகளும் உலகம் உள்ளளவும் நிலைத்து புகழ் வீசும் என்பதில் ஐயமில்லை.
அவருடைய பெயர் கவிதை மேதைகளின் சரித்திரத்திலும் வைரம் என ஒளிவிடும் என முடித்துள்ளார்.
வந்தே மாதரம் வாழ்க பாரதி 
----------------------------------
செல்லமனோகரி

நன்றி :

கருத்துகள் இல்லை: