துத்தி கீரை!
பயன்கள்!
துத்தி கீரை உடலை சுத்தி செய்யும் மூலிகைகளில் இதுவும் ஒன்று!
நதி முலம் ரிஷிமுலம் தெரியாமல் இருப்பவர்கள் கூட ஆதி முலம் தெரியாமல் இருக்க முடியாது.
மூலாதாரம் சரியாக இருந்தால் தான் மூளை அமைதியாக இருக்கும் மூலாதாரத்தில் அதிக படியான வெப்பத்தால் உண்டாவது மூல நோய் !
இதை சரிசெய்ய எளிய வழி துத்தி கீரை என்று சொல்வார்கள் சிறுவயதில் பெண் குழந்தைகள் சீப்பு காய் குழந்தைகள் விளையாடுவார்கள் ஒரு காலத்தில்! தற்போது விளையாட்டு என்றால் போனில் கேம் விளையாடுவது மட்டுமே பல குழந்தைகளுக்கு வாழ்க்கை முறை ...வேறு வழியும் இல்லை !
ரோட்டோரத்தில் இரயில் பாதைகளில் அதிக அளவில் வளர்ந்து கிடக்கும் இந்த இலை இதய வடிவிலான கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் இதன் பூ மஞ்சள் நிறத்தில் சிறு பூ விதழ் காய் வரிவரியாக இருக்கும்.
இதன் இலையை மட்டும் பறித்து சுத்தம் செய்து பருப்பு தேங்காய் சேர்த்து கடுகு வெங்காயம் தாளித்து குக்கரில் ஒரு விசில் விட்டு அப்படி குக்கரோடு தண்ணீரில் காட்டி விட்டு உடனே குக்கரை திறந்து விட்டால் கீரை நிறம் மாறாமல் இருக்கும் விரலால் தொட்டால் கீரை வெந்து இருக்கும் (இந்த முறையில் உள்ள காய்கறிகளை குக்கரில் போட்டு தாளித்து கொட்டி ஒரே விசில் வந்ததும் குக்கரை அப்படியே தண்ணீரில் காட்டி திறந்தால் காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும் வேளையும் நேரமும் மிச்சமாகும்)
மூன்று நாட்கள் துத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும் மூலம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சிலருக்கு மூல நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் போது இரத்த கசிவு இருக்கும் அப்படி இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் சிருங்கி பஸ்பம் என்று கேட்டால் கிடைக்கும் அதை வாங்கி இரண்டு அரிசி எடை அளவுக்கு எடுத்து நெய்யில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும் ஐந்து நாட்கள் மூலம் இருந்த அடையாளமே இருக்காது!
துத்தி கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டி இருக்கும் இடத்தில் வைத்து கட்டினால் கட்டிகள் உடையும்!
துத்தி இலை சாறு பச்சரிசி மாவு மஞ்சள் மூன்றையும் சிறு தீயில் கிண்டி வதக்கி வைத்து கட்டினாலும் கட்டிகள் உடையும்.
துத்தி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் செடி வகை.
துத்தி இலை பூ காய் என பலவகையான பலன்களை தரும் . மூலத்திற்கு துத்தி கீரை போல் பலன் தர எந்த கீரையும் இல்லை !
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக