3 அக்., 2021

இன்றைய திருமந்திரம் : பாடல் 1279


திருமந்திரம் - பாடல் #1279: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரையது விந்து விளைந்தன வெல்லாம்
விரையது விந்து விளைந்த வுயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் றானே.

விளக்கம்:

பாடல் #1278 இல் உள்ளபடி முக்திக்கு வழிகாட்டும் வித்தாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்திலிருந்தே அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்தும் உருவாகி இருக்கின்றன. அந்த வெளிச்சத்திலிருந்தே அனைத்து உயிர்களும் உருவாகி இருக்கின்றன. அந்த வெளிச்சத்திலிருந்தே இந்த உலகங்களும் உருவாகி இருக்கின்றன. ஏரொளிச் சக்கரத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்ற சாதகர்களும் இந்த மூல விதையின் வெளிச்சத்திலிருந்தே உருவாகி இருக்கின்றார்கள். 

குறிப்பு: அனைத்தையும் உருவாக்குகின்ற மூல விதையாக சாதகருக்குள்ளிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சம் இருந்தாலும் இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது அசையா சக்தியான இறைவனே ஆகும்.


நன்றி :

கருத்துகள் இல்லை: