Reading Marathon 2021 - 78/50+
#RM 064 S.PRASANNAVENKATESAN
நான்காம்ஆண்டு வாசிப்புத் திருவிழா
வாரம் :10 பதிவு :1
# கட்டுரைகள்/ கவிதைத் தொகுப்புகள்
புத்தகம் :தலை நிமிர்ந்த தமிழர்கள்-பாகம் 2
ஆசிரியர்:திருவேங்கிமலை சரவணன்
பதிப்பகம் : குமுதம் வெளியீடு
மொத்த பக்கங்கள்: 152
விலை: ₹175/-
இந்த புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் ஆகும்.
இளைய தமிழ்த் தலைமுறைக்கு, தங்களுக்கு முன் வாழ்ந்த பெருமைமிக்க தமிழர்களைப் பற்றி தெரியுமா என்பதே அந்த
சந்தேகம். அதனால் வருங்கால தமிழ் சமுதாயத்திற்கு உதவும் வகையில் தலைநிமிர்ந்த தமிழர்களைப் பற்றி ஒரு தொடர் குமுதத்தில் ஆரம்பிக்க எண்ணினேன்.அந்தத் தொடர் கடினமான மொழியில் இல்லாமல் சுருக்கமாக அதே நேரத்தில் மிகவும் சுவையாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.
மிகவும் விரும்பிப் படிக்கப்படும் தொடர்களில் முதல் இடத்தை பெற்றிருக்கிறது.
இந்த தொடர் இளைய தலைமுறையினர் தாங்கள் அந்த பாரம்பரியத்தை மறக்க விரும்பவில்லை என்பதற்கு இந்தத் தொடரின் வெற்றி ஒரு சாட்சி என்று குமுதம் பத்திரிகையின் கெளரவ ஆசிரியர் டாக்டர் எஸ்.ஏ. பி ஜவஹர் பழனியப்பன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
தலைநிமிர்ந்த தமிழர்கள் ஐடியாவை சொன்னார் .தமிழகத்தில் எத்தனையோ உயர்ந்த சாதனை புரிந்த மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள். அவர்களை பற்றி எல்லாம் இளைய தலைமுறைக்கு தெரியவில்லை. நாம் தெரிய வைக்கலாமே என்றார். சொன்னதோடு மட்டுமல்லாமல் நீங்கள் தான் அதை எழுத வேண்டும் என்றும் கூறினார் எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் மலைப்பாக இருந்தது .அது ஒரு பெரிய வேலை அல்லவா ! உடனே தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன்.
தமிழகத்தில் தோன்றி மகத்தான சாதனைகளை புரிந்த தலைநிமிர்ந்த தமிழர்களின் வாழ்வை வாழ்க்கை வரலாற்றை படிக்க படிக்க நாளுக்கு நாள் பிரமிப்பு வளர்ந்தது .அந்த மாபெரும் மனிதர்களின் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வெளிவராத தகவல்களை சேகரித்த போது 'எவ்வளவு சிறந்த மனிதன் பிறந்து பூமியில் நாமும் பிறந்து இருக்கிறோம்' என்கிற பெருமிதம் மனதில் எழுந்தது என்று ஆசிரியர் திருவேங்கிமலை சரவணன்
முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இளைய தலைமுறைக்கு இதில் ஆர்வம் இருக்குமா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது ஆனால் தொடர் வெளிவந்த முதல் வாரத்திலேயே ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்து குவிந்தன எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இதை விட வேறு மனத்திருப்தி வேண்டுமா? வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இந்த தொடர்.
இந்தத் தொடரில் இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் மொத்தம் 31 கட்டுரைகளை கொடுத்திருக்கிறார்.
வள்ளல் அழகப்ப செட்டியார் தொடங்கி எடிட்டர் எஸ்.ஏ.பி. வரை அவரது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த கட்டுரைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது ஒவ்வொரு கட்டுரையிலும் முக்கியமான செய்திகளை ஒரு பெட்டிச்செய்தியாக வெளியிட்டு இருப்பதுதான் என்று குறிப்பிட்டால் அது மிகையல்ல.
முதல் கட்டுரையான
வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார்
வியக்க வைத்த உமையாள் திருமண வைபோகம்
தன் ஒரே மகள் உமையாள்- ராமநாதன் திருமணத்தை இதுவரை தென் இந்தியா கண்டிராத அளவிற்கு வெகு விமர்சியாக நடத்தினார் அழகப்பச் செட்டியார். மணமகள் சீராக தங்க கட்டிகளும் வெள்ளிக் கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து மக்கள் வியந்து விட்டனர். திருமணத்திற்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து நாடே அதிர்ந்தது. வந்தவர்களுக்கு ஒரு வாரம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது லட்சக்கணக்கான மக்களுக்கு பிரமாண்டமான போஜனம் என்று அன்றைய கல்கி 1943 தனது தீபாவளி மலரில் புகைப்படங்களுடன் நான்கு பக்கங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கொச்சி,திருவாங்கூர், செட்டிநாடுபுதுக்கோட்டை அரச குடும்பத்தினர்,பிரபல தொழில் அதிபர்கள்,அரசு உயரதிகாரிகள், அறிஞர்கள் என்று கோட்டையூர் முழுக்க விஐபிக்கள்
பெருங்கூட்டம். கோட்டையூருக்கு தனி ரயிலே விடப்பட்டது.
திரையுலக நட்சத்திரங்கள், நாட்டிய கலைஞர்கள், இசைக்கலைஞர்களின் முத்தமிழ் நிகழ்ச்சிகள் குதூகலப் பட்டது.
மகாகவி பாரதியார்
பாரதியார் சுதேசமித்திரனில் பணியாற்ற வேண்டி புதுச்சேரியிலிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். ஆனால் கடலூர் அருகே கைது செய்யப்பட்டு இருபத்தியோரு நாட்கள் சிறையில் இருந்தார். அன்னிபெசன்ட் அம்மையார் முயற்சியால் விடுதலையானார். விடுதலை பெற்றதும் கடையத்தில் போய் தங்கியிருந்தார். பிறகு சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் மீண்டும் துணை ஆசிரியர் ஆனார்.
பாரதி தன் இறுதிக் காலத்தில் சென்னைக்கு திரும்பி சுதேசமித்திரனில் பணிபுரிந்து வந்தார். அப்போது தினமும் அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு தேங்காய், பழம் கொடுப்பது வழக்கம்.
ஒருநாள் யானை அருகில் அவர் சென்றபோது அது அவரைக் கீழே தள்ளியது. அருகில் இருந்த நண்பர் குவளைக்கண்ணன் அவரைக் காப்பாற்றி வீடு சேர்த்தார். இந்த அதிர்ச்சியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வயிற்று கடுப்பு நோயும் பாரதியை மரண முறை செய்தது. 11 9 1921 அன்று பாரதி உயிர் பிரிந்தது.
இறுதி ஊர்வலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே கலந்துகொண்டனர். இன்றோ பாரதி பக்தர்கள் லட்சக்கணக்கானோர்..
திரையுலக மேதை
ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்
உன்மேல் தவறா? என்மேல் தவறா? என்கிற வீண் சர்ச்சையில் இறங்காமல், எது தவறு என்பதைக் கண்டு பிடித்து அதை மட்டும் திருத்திக்கொண்டு ஒற்றுமைப் பட்டு விட்டால் உலகத்தில் எந்த பிரச்சனையையும் சுலபமாக தீர்த்து விடலாம்.
--- ஏவிஎம் அவர்கள் சொன்னது
'டுமாரோ இஸ் நோ குட்' !
ஊழியர்களுக்கோ உதவியாளருக்கோ தெளிவான யோசனைத் தருவது ஏவிஎம் அவர்களின் வழக்கம்.
யாராவது கோபத்தில் ஏதாவது குறையாக சொன்னால் கூட நடுவில் அவர் பேச்சை வெட்டி விட மாட்டார்.அவர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து கேட்டு, அதன் பிறகு நீங்கள் கோபத்தில் இப்படி சொல்லி இருக்கிறீர்கள்.ஆனால் உண்மையில் நடந்தது வேறு' என்று கூறி விளக்கம் அளிப்பார்
.
அதே போல ஒருவர் சொல்லிவிட்டுப் போன அதே கருத்தை அடுத்து வருபவரும் சொல்ல ஆரம்பித்தால்' எனக்குத் தெரியும்' என்று குறுக்கே புகுந்து சொல்லமாட்டார். இவரது கோணத்தில் எப்படி அதைப் பார்க்கிறார் என்று கூர்ந்து கவனிப்பார். ஒரு பத்து பேர் இதே கருத்தை சொன்னால் கூட ஒவ்வொருவரிடமும் அந்தக் கருத்தை முதன்முதலில் அப்போதுதான் கேட்பது மாதிரி கேட்பார்.
எந்த வேலையையும் தள்ளிப்போடுவது அவருக்கு பிடிக்காது டுமாரோ இஸ் நோ குட் என்பார். மேசைமீது கோப்புகளை சேர விட மாட்டார். உடனுக்குடன் பார்த்து கையெழுத்திட்டு அனுப்பிவிடுவார்.
எடிட்டர் எஸ் ஏ பி
எஸ்.ஏ.பி அடிக்கடி சொல்வது இதுதான்
நாம் எல்லோருமே நம் கடமையைத் தவறாமல் செய்ய வேண்டும். கடமையைச் செய்யும் போது அந்த வேலையின் வெற்றி தோல்விகளைப் பற்றி சிந்திக்கவே கூடாது என்ன பலன் கிடைக்கும் என்பது கடமையை நோக்கமாக இருக்கக்கூடாது. கடமையின் பலன் வெற்றியாக இருந்தால் அது ஒரு போனஸ் என்றுதான் நினைக்க வேண்டும். அதற்காக மட்டுமே நாம் நம் கடமையைச் செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டால் போதும் பகவத் கீதை நமக்கு சொல்லித் தருவதே இதைத்தான்.
எஸ்ஏபி அவர்கள் எழுதிய சில நாவல்கள்
1. காதலெனும் தீவினிலே
2. சின்னம்மா
3. எனக்கென்று ஓர் இதயம்
4 இன்றிரவு
5 பிரம்மச்சாரி
6. ஓவியம்
7. பிறந்தநாள்
8 சொல்லாதே
9. கெட்டது யாராலே
10. நகரங்கள் 3, சொர்க்கம் ஒன்று
11. நீ
12. இன்றே, இங்கே,இப்போதே!
13. மூன்றாவது
14. திருமணம் குழந்தையால் நிச்சயிக்கப்படுகிறது
15. உன்னையே ரதி என்று
16. மலர்கின்ற பருவத்திலே
பத்திரிகை நிருபர்களில் பலவகை உண்டு. சினிமா, அரசியல், பொழுதுபோக்கு, சமூகம், இசை, விளையாட்டு என்று ஒவ்வொரு துறையிலும் தனித்தனியே நிருபர்கள் இருப்பார்கள். ஆனால் எல்லாத் துறைகளிலும் சென்று புகுந்து விளையாட கூடியவர்கள் ஒருசிலரே.அவர்களில் முதல்வர் திருவேங்கிமலை சரவணன். போலிஸ் துறையில் இருந்து டெல்லி பிரதமர் அலுவலகம் வரை இருக்கும் இவரது நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
பேரறிஞர் அண்ணாவுக்கு ஒரு சிக்கல் தான் எழுதிய புதிய நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். ஆனால் கதாநாயகன் வேடம் ஏற்ற நடிகருக்கோ உடல் நலம் சரியில்லை. நாடகத்துக்கு தலைமை தாங்கி நடத்தித் தர தந்தை பெரியார் வருவதாக இருந்தது. என்ன செய்வது என்று கவலையோடு அமர்ந்திருந்த அண்ணாவிடம் ஓர் இளைஞன் ஓடி வந்தான். "ஐயா, அந்த நாடகத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன்!" என்று ஆர்வமுடன் சொன்னான்.அவன் அந்த நாடகக் குழுவில் சிறு சிறு பாத்திரங்கள் ஏற்று நடிப்பவன். அண்ணா வேறு வழியின்றி அந்த துடிப்பான இளைஞனிடம் வசனத்தை கொடுத்தார். அதை வாங்கிய இளைஞனை அடுத்த இரண்டு நாட்கள் காணவில்லை. மூன்றாம் நாள் வந்தவுடன் தான் அனைவருக்கும் உயிர் வந்தது. வந்தவுடன் அந்த இளைஞன் அண்ணாவிடம் கடகடவென்று வசனத்தை ஒப்புவிக்க அண்ணாவுக்கு ஓரளவிற்கு நம்பிக்கை வந்தது. சற்று ஒட்டிப்போன கன்னங்களை உடைய அந்த இளைஞனுக்கு தாடி வைத்து பார்த்தபோது சரியாக பொருந்தியது.
முதல் காட்சியை திரை உயர்த்தப்படுகிறது.ஒரே ஆரவாரம் நான்கு பக்கத்திலும் கத்தியை சுழற்றிக் கொண்டு அனல்பறக்கும் வசனத்தை இளைஞன் கர்ஜிக்கிறான். ஆரவாரம் மேலும் அதிகரிக்கிறது. உடன் நடிக்க வந்தவர்கள் தாங்கள் பேசப்போகும் வசனத்தை ஒரு கணம் மறந்து விட்டனர். 'நம்மோடு இருந்த கணேசனா, அந்த ஸ்திரீ பார்ட் கணேசனா, சின்னச் சின்ன வேடம் செய்தவனா இப்படிப் பேசுகிறான்!" என்று மெய்சிலிர்த்துப் போனார்கள்.
யார் அந்த கணேசன் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். ஆம் நம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவர் நடித்த நாடகத்தின் பெயர் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்"
வீர சிவாஜி ஆகவே மாறிவிட்டார் கணேசன். நாடகம் முடிந்ததும் பாராட்டிப் பேசிய பெரியார் இன்றிலிருந்து நீ வெறும் கணேசன் அல்ல ; சிவாஜி கணேசன் என்று புகழாரம் சூட்டினார்.அன்று முதல் சாதாரண கணேசன் சிவாஜி கணேசன் ஆக மாறி தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தார்.
'தூக்குத்தூக்கி' படத்தில் சிவாஜி பாடுவதாக எட்டு பாடல்கள் இருந்தன.அவற்றை பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் பாடுவதாக இருந்தது. அதற்காக அவருக்கு ரூபாய் 2000 சம்பளமாக பேசப்பட்டது லோகநாதனோ ஒரு பாடலுக்கு 500 வீதம் 4000 ரூபாய் கேட்டார்.தயாரிப்பாளர் யோசிக்கவே, உங்களுக்கு குறைந்த ரேட்டுக்கு பாட புதுசா ஒரு மதுரை பையன் வந்து இருக்கான் அவனை பாருங்க என்றார் லோகநாதன். ஆனால் சிவாஜி கணேசனோ
சிதம்பரம் ஜெயராமன் பாடட்டும் என்றார்.
புதியவர் படத்தின் தயாரிப்பாளரிடம் எட்டுப்பாட்டுல 3 பாட்டு நான் பாடறேன். சிவாஜி கேட்கட்டும். அவர் ஏத்துகிட்டா மற்ற பாடல்களைப் பாடறேன். இல்லன்னா நீங்க பணமே கொடுக்க வேண்டாம்.நான் திரும்பிப் போயிடறேன் என்றார்.
அதன்படி முதலில் 'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே', 'பெண்களை நம்பாதே', 'ஏறாத மலைதனிலே' என்று மூன்று பாடல்களை பாடினார்.
பதிவான பாடல்களை ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து கேட்டார் சிவாஜி.: சுந்தரி சௌந்தரி நிரந்தரியே'பாடலை நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த படி கேட்கிறார் சிவாஜி. 'கண்டால் கொல்லும் விஷமாம்' அடுத்த பாடல் ஒலிக்கிறது. சிவாஜி நிமிர்ந்து உட்காருகிறார். 'தாம் திமிதிமி தந்தக் கோனாரே!" பாடல் தொடங்கியபோது சிவாஜி மேஜைமீது தாளம் போட ஆரம்பித்துவிட்டார்.
பாடியது யார் என்று சிவாஜி விசாரிக்கிறார். மதுரைக்கார பையன் சௌந்தரராஜன் பேரு என்று டி.எம்.எஸ். ஐ சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். வாங்கய்யா என்று அவரை தன் அருகே அழைத்தார் சிவாஜி. 'நல்லா இருக்கு' எல்லா பாட்டுகளையும் நீங்களே பாடுங்க' என்று முதுகில் தட்டி பாராட்டிச் சென்றார். நடிப்பு கலைஞன் பாட்டு கலைஞனுக்கு தந்த அங்கீகாரம்.
சீனப் போரின் போது தனது தங்க ஆபரணங்களை யுத்த நிதியாக வழங்கினார் சிவாஜி கணேசன்.
மகாராஷ்டிராவில் பூகம்பம் ஏற்பட்ட போது இரண்டு லட்ச ரூபாயை நிதியாக வழங்கினார்
1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கொடி நாளுக்காக 4 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தார்.
இந்திய-பாக் யுத்தத்தின் போது போர் நடக்கும் இடத்திற்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்த நாடக நிகழ்ச்சி நடத்தினார்.
குஜராத் பூகம்பத்தின் போது ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.
கட்டபொம்மனும் வா.உ.சி.யும் நிஜமாகவே சிவாஜிகணேசனை தேசபக்தி கொண்டவராகவே வாழ வைத்தனர் என்று சொன்னால் அது மிகையல்ல.
பிறந்தது அகண்ட காவிரிக்கரை கிராமமான திருஈங்கோய்மலை கிராமத்தில். படித்தது இன்ஜினியரிங் . தயாரானது ஸ்போர்ட்ஸ்மேன் ஆக, ஆசைப்பட்டது அரசியல்வாதியாக ஆனால் வந்ததோ பத்திரிகையாளராக.
குமுதம் ஆசிரியர் இலாகாவில் கதர் வேட்டி சட்டை அறிந்தவர்கள் நடமாடிய நேரத்தில் லிவ்இன் ஜீன்ஸ் ரெபோக் ஷூ,ப்ரூ பர்ஃப்யூம் என்று வளைய வந்த திருவேங்கிமலை சரவணன் மிகப் பெரிய பலம் அவரது நகைச்சுவையும் கலகலப்பும்.
திருவேங்கிமலை சரவணன் இன்னொரு பலம் எல்லாம் எதுவும் முடியும் என்பதுதான் ரஜினி பேட்டியா கலைஞர் நேர்காணல் சச்சின் என்ற விவாதம் சொல்லிவிட்டால் போதும் அந்த வார கவர் ஸ்டோரி நிச்சயம் பல வருடம் அவனும் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பேட்டியளிக்க செய்த பெருமை இவருக்கு உண்டு பேசும்போது அடிக்கடி உச்சரிக்கும் இரண்டு வார்த்தைகள் தமிழ் திராவிடம் ஆனால் எப்போதும் சொல்லாத வார்த்தைகள் என்னால் முடியாது
கவர் ஸ்டோரி கதாநாயகன் என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
தோழமையுடன்
சு. பிரசன்ன வெங்கடேசன்
நன்றி :
திரு.சு. பிரசன்ன வெங்கடேசன்,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக