21 அக்., 2021

நூல் நயம் : அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார்

#ஆண்டு விழா 
# கட்டுரை

கட்டுரைகள் தொகுப்பு: அணிலாடும்   முன்றில்.
ஆசிரியர்: நா.முத்துக்குமார்

கட்டுரைகள் என்றால் ஏதாவது துறையைப் பற்றியோ பொதுவான தலைப்பாகவோ மொழியின் தொகுப்பாகவோ அறியப்படும்.

ஆனால் நா.முத்துக்குமார் தன் உறவுகளை பற்றி கட்டுரைகளாக தொகுத்திருக்கும் விதங்களும் அனுபவங்களும் நம்மை அவர் குடும்பத்தோடு பயணிக்க வைக்கின்றன.

நம் வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும் அடைந்த இன்பங்களையும் எளிதில் மறந்து விட முடியாது. 

குடும்பம் என்றால் அப்பா அம்மா தான் என்றே எண்ணியிருக்கும் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு எண்ணிக்கையில்லா சொந்தங்களின் அறிமுகம் கிடைக்கும் இந்த தொகுப்பில்.

என்னதான் சண்டை சச்சரவு என்றாலும் நல்லது கெட்டது என்று வரும் போது கூடே நிற்கும் சொந்தங்களை பொறுத்தே நம் இன்பங்கள் பெருகும் துக்கங்கள் குறையும்.

இந்த காலத்தில் குறைகள் இல்லாமல் மனிதன் வாழ்கிறான் ஆனால் குடும்பமாக வாழவில்லை.

பூட்டன் பதினாறு பெற்றார், தாத்தா எட்டு பெற்றார், அப்பா இரண்டு பெற்றார், தான் ஒன்றே போது மென்று நினைக்கிறார்.

சொத்து சேர்த்து வைப்பதை விட சொந்தங்களை சேர்ப்பது தான் பெருமை.

ஒரு முறேயேனும் நினைக்க தோணுகிறது சிறு வயது முதல் கடந்து வந்த சொந்தங்கள் அறுந்து போன உறவுகளை ஒன்றாக காண வேண்டுமென்று.

நன்றி :

திரு.ராம் குமார், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல் 

கருத்துகள் இல்லை: