23 அக்., 2021

நூல் நயம் : பிரான்சிஸ் கிருபா கவிதைகள்


##ஆண்டுவிழா RMID110
#கவிதை தொகுப்புகள் 130/100+
புத்தகம்: ‌‌    ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள் ஆசிரியர்:. ஜெ.பிரான்சிஸ் கிருபா
பக்கம்: 650 மின்னூல்.

ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள்  .
மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல், நிழலன்றி ஏதுமற்றவன், மல்லிகைக் கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளையும் ஒரே நூலாக  தொகுத்து மின் னூலாக வந்திருக்கிறது.மொத்தம் 418 கவிதைகளை சுமந்து..( மல்லிகை கிழமைகள்  யாராவது விளக்கம் சொல்லுங்களேன்)

ஒருவரின் மனதை  திறந்துப் பார்க்க முடியுமா? இதோ திறந்திருக்கிறார். பார்ப்பவர்களும் படிப்பவர்களும் அவரின்  வலியையும் வாழ்வையும் வார்த்தைகளின் நர்த்தனங்களையும் , தங்களுக்கானதாக மாற்றிக் கொள்ளலாம். 

 இதனை இரண்டு மூன்று கட்டுரைகளாக எழுதினால் கூட தீராது தான்.  கொஞ்சம் வரிகளை மட்டுமே
 இங்கு குறிப்பிட முடிகிறது

சில கவிதைகள் ராட்டினத்தில் ஏறி இறங்கும் அனுபவத்தை தருகிறது. சில கவிதைகள் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வை தருகிறது. 

 மீண்டும் மீண்டும் படிக்க‌ வெவ்வேறு  கருத்துக்களை கண்டு பிடிக்கும் வாசகனின் திறமையைப் பொறுத்ததாக அமையும்.
 

♥️வெளியே சுட்டெரிக்கும் வெயில் வீட்டிற்குள் நுழைந்தால் வெளிச்சம்.இரண்டும் ஒன்று தான் ஆனால் இடத்தின் பொருட்டு மாறு படுகிறது. மனித மனங்களைப் போல..

"வெளியில் அடிப்பது வெயில் 
வீட்டுக்குள் நுழைந்து 
கிடப்பது வெளிச்சம். "

♥️திருவிழாவில் தொலைந்தக் குழந்தையே அழாமல் காத்திரு தெருவில் சுற்றும்த் தேர் இங்கு வந்து நின்று தானேயாக வேண்டும்  முடியாத திருவிழா இல்லையே கூட்டம் கலைந்ததும் உரியவரிடம் சேரலாம்

"தொலைந்து வரும் குழந்தையே 
அழுது கதறாமல் திரியப் பழகு 
தொலைத்தவர் கலைந்து 
போகும்வரை காத்திரு தேரடியில்
 முடிவடையாத திருவிழாக்களே இல்லை. "

♥️என்னதான் வளர்ந்தாலும் தாயின்சொல்லைத் தட்டவும் முடியாமல் இருப்பும் கொள்ளாமல் தவிப்பவன் ஒரு மழைநாளில்..

"சொல்லாமல்கொள்ளாமல் 
வெளியேறத் தெரியாத 
பிள்ளையாய் இருப்பதை 
எண்ணி ஆத்திரமடைந்தேன்
என் வயதுகள் கரைந்து வாசலில்
 வழிந்தன இறுதித் துளியை நோக்கி"

♥️ ஏமாந்த காதலின் வலி

"மயிர்க் கூச்செறிந்து ஏமாறுகிறது காதல் 
பூட்டைவிட  உறுதியாக 
கதவிடுக்கில் உறைந்துவிட்டது 
கோபத்தின் ரத்தம்"

♥️ஓடும் ரயிலில் சில நீர்த்துளிகள்

"படிக்கட்டுவரை துரத்தி 
வந்து ரயிலேற முயன்று 
தோற்றிருக்கலாம் மழை."

♥️எரியும் மெழுகுவர்த்தி...

"பகலில் எரியும் மெழுகுவர்த்தியின் 
திரியிலிருந்து சுருள் சுருளாய் 
விரிகிறது இருள்."

 

♥️முழுவானமும் தெரியும் வசமாய் ஒரு ஜன்னல் செய்ய முடியுமா? முழுதாய் தெரிய வெட்ட வெளி போதாதா?

♥️"கல்லின் குரல் கணத்தில் 
தொனிக்கும் போதெல்லாம்
 ஒரு ஜனனம்."

♥️ மனவலியை உணர்த்தும் வரிகள்
 
"மனதின் வலியை 
தூண்டிவில் புழுவாய் ....."

♥️"திமிங்கலங்கள் கூட விழுங்க முடியாத 
ஆகப் பெரிய புழுவாகி 
நெளிந்துகொண்டிருக்கிறேன் 
சின்னஞ்சிறிய தூண்டில் முள்ளில் கொஞ்சதூரமேனும் எங்கிருந்தோ
 வந்து நீ நடந்து போக வேண்டும் 
 என் தாகத்தின் மீது. "

♥️பாம்புகள் இணை சேர்ந்து பிண்ணி பிணைவதை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தின் மனநிலை 

"இருந்தும் கடைசி ரவுக்கையை 
உரிக்கவேயில்லை பெண் பாம்பு. "

♥️"நினைவுக்கொடி நுனியில் 
அடுத்த வரிக்காக தலைகீழாய்த்
 தொங்கும் மௌனம். "

♥️தனிமையின் தகிப்பை உதிராக்கும் வரிகள்

"உளவு பார்க்கத் துவங்கிற்று
 அறையின் மற்றொரு தனிமை. "
 
♥️ நீர்குமிழியினுள் பூட்டிய கனவுகளா?
 
"அவர்கள் கனவுகள் நாம் 
நுழைய முடியாத நீர்க் குமிழியாகப் பூட்டியிருக்கின்றன"

♥️ விளக்கெரிந்துக் கொண்டிருந்த பாட்டில் உடைந்து சிதறுகிறது.
 
"பாட்டில் நழுவி விழுந்து 
இரவு சிதறியது"

♥️ தூண்டில் குத்தியதை தேள் என நினனைத்து வீடே பரபரத்து கடைசியில் தேடிப்பார்த்தால்..
 
"தனித்தினியே பார்த்தார்கள்
 லேசாகத் துருவேறிய
  தூண்டில் முள்ளை! "

♥️"வெளியில் கொட்ட
 இடமேயின்றி கைக்கடிகாரத்துள் 
 உதிர்ந்து கிடந்த பழைய நொடிகள்"

♥️பெண்ணின் நிலை  பெற்றுக் கொண்டால் மகள் இல்ல்லையேல் இருள்

பெண்ணைக் கண்டு
 பேரிரைச்சலிடுகிறாயே மனமே பெண் யார்? பெற்றுக்கொண்டால் மகள் 
 பெறாத வரையில் பிரகாசமான இருள் வெறொன்றுமில்லை. "

♥️"அகம்" இநாத தலைப்பில் இருக்கும் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்க  நம்பை நாமே சுய அலசல் செய்யலாம்..

 
♥️"உதடுகளை உரசி சிரிப்பைப்
 பற்ற வைத்தேன் "
 
♥️" இரக்கமின்றிச் சென்றுவிட்டாய்
 மறுபடியும் மறுபடியும் 
 எரிகிறது மனம்
 சாயம் போன பின்னும்
 மீள்கிறது ஆசை"

 ♥️விருந்தாளியாய் போகும் இடத்தில் மீன்களின் உணர்வுகளை கவனியுங்கள் ..
 
"உற்றுக் கவனியுங்கள் 
காஃபி ஆறினாலும் கவலையின்றி 
ஒவ்வொரு கணமும் 
வெவ்வெறு மொழியில் நாம் 
கற்றக்கொள்ள முடியாத 
வகையில் பிடிவாதமாக உரையாடிக்கொண்டிருக்கின்றன மீன்கள். "

♥️புற் பனிப் பாத்திரத்தில்...

  "தானேயுண்டு பசியாறும்
  சூரியனுக்கு எதிரே
   நிலைக்கண்ணாடியில் ஒரு
   புன்னகையை வரவேற்க 
   காத்திருக்கிறது அதே புன்னகை. "
   
  ♥️ ஒருவன் செய்த ஏதோ ஒரு உதவிக்காய் மீண்டும் மீண்டும் தளைந்துபோகக்கூடிய பரிதாபம்
   
"ஒரு உதவிக்கு கைமாறாக
 இங்கே தொலைந்து
  கொண்டிருக்கின்றன சக 
  மனிதனின் சுய   அடையாளங்கள். "
  
  ♥️ எல்லாப் பொழுதுகளும் கோப்பைகளில் நிரம்பி விடுகிறது
  
"சிலர் அந்திகளையும் 
சிலர் அதிகாலைகளையும்
 ஊற்றி வைத்திருந்தார்கள் மதுவென்று"
 

♥️"அகந்தையின் அளவு ‌"  பாதம் முழங்கால் இடுப்பு என எல்லாவற்றிற்கும் அளவெடுத்தவன் கிருடம் என வயுமுன் ததலையையே திருகிச் செல்கிறான்

♥️நகரில் சிக்கியவனின்  நிலை..

" மிளகிலுள்ள மேடுபள்ளங்கள்
  கடுகில் இல்லை கடுகிலுள்ள 
  கள்ளச்சுவை மிளகில் இல்லை
   குலையில் தொங்கும் திராட்சை 
   ஒரு கூட்டுக்கனவு அதிகாலையில் 
   உதிரும் நாவற்பழங்கள் 
   இரவின் துளிகள்
   எலியின் கண்கள்
   அச்சத்தின் மச்சங்கள்"
    
   
♥️" தோற்ற தாமரைகளின்
  முத்த ஒலிகளை சிற்றலைகள்
   மென்னிருளில் நெய்கின்றன"
   
♥️" யாருமற்ற இரவை
 கத்தரித்துக்கொண்டு 
 வந்து சேர்கிறான் 
 சிறகுகளுள்ள இளைஞன்"

♥️சிட்டுக் குருவியின் கனவு

 "காற்றின் உயிர்
 பிரிந்தபோதே நம் பூமி 
 மூர்ச்சையாகிவிட்டது மரங்கள்
  விறைத்துப் போயின கடல்கள் 
  பனிச்சிலைகளாகி விட்டன 
  பதைத்த நிலா தன் 
  மஞ்சள் தாவணியாலும் துடித்த
   சூரியன் தன் தீத்தோகையாலும் 
   விக்கித்துப்போன விண்மீன்கள்
    மெல்லிய    இமைகளாலும் விசிறிப்
    பார்த்தபோதும் மூர்ச்சை 
    தெளியாத பூமி அன்றே இறந்துவிட்டது"
   

 ♥️  " விளையாடக்கூட பழகாத பிள்ளை 
     சும்மா சும்மா பார்க்கிறது 
     அம்மா முகத்தை அவள் 
     கண்ணில் சங்கமிக்கின்றன "
     
♥️  " மின்னல் கடவுள்போல் மின்னுகிறது 
     இடி சாத்தானைப் போல் துள்ளுகிறது 
     இரவு உன்னைப் போல் கவிகிறது 
     மழை என்னைப் போல் பெய்கிறது 
     குளிர் நினைவுபோல் அலைகிறது
      தூக்கம் மரணம்போல் தழுவுகிறது 
      காதல் மட்டும் அப்படியே இருக்கிறது. "
      
     
♥️  " கனவின் மடி விரித்து அதில்
     கவிதைகளை கிடத்தித் தாலாட்டுகிறேன்  "
     
♥️ " நான் வீட்டை மாற்றிப் பார்க்கிறேன்
     பெயரை மாற்றிப் பார்க்கிறேன் 
     மனசை மாற்றிப் பார்க்கிறேன் 
     உயிரை மாற்றிப் பார்க்கிறேன்
      மாற்றவே முடியவில்லை கனவுகளை. "
      
      ♥️துணை என்ற தலைப்பில் மழையை கொடியில் காயப்போடும் வித்தை தெரிந்தவன்..
      
 ♥️" உடையைப்போல மழையை
     உதறி வெளியே கொடியில்
      காயப்  போட்டுவிட்டு"
      
      உள்ளே சென்றமறந்துப் போனாளாம்.
      
    
♥️"பொட்டும் புருவமும் 
 நெற்றியிலிருந்தாலும் தொட்டுக்கொள்ள முடியாதென்பதை சொல்லவே 
 அன்று அந்த இரவு வந்தது"
 
♥️"என் கல்லறையைச் சில்லறை 
 மாற்றி எனக்கே என்னை 
 பிச்சையிட ஆரம்பித்தது உன் ஞாபகம்
கடிதமான அந்தி இரவு"

♥️"நிரம்பியிருந்த இருளையெடுத்து 
உனக்கு ஜடை பின்னியபடி நடந்தேன் 
வழியில் உன் கூந்தலுக்குச் சூட 
ஏற்றதொரு பூவாக பூத்திருந்தது என் வீடு"
 
♥️"மேகப்பள்ளிகள் விட்டு 
 வீடு திரும்பும் தூறல் 
 பிள்ளைகள் வெள்ளமாக 
 தெருவில் விரைகிறார்கள் 
 என்றே நம்பினார்கள்
 மழையோ இரவிலும் தவித்தது விடியலிலும் தவிதவித்தது மதியமும் துடிதுடித்தது"

♥️ஒருவேளை  இயலாமையின் குறியீடோ?

"பறவைகள் கூடுகளை மாற்றுவது 
என்றென்றும் இயல்பு 
கூடுகள் பறவைகளை மாற்றுவதில்லை
 என்பதே என்றென்றைக்குமான என் துயரம். "
 
 ♥️பெண்கள் தபால் தலையளவு 
  கண்ணாடியில்   எதைப்பார்ப்பார்கள். 
  
 "அவள்அவள் வெளிச்சம்
  அவள் அவளுக்கு" 
  
அப்புறம் எதற்கு ஆராய்ச்சி.
  
 ♥️ஏளன வாசல்
 
" சிறுதுண்டுச் சூரியனை 
 கடைவாயில் மென்றபடி 
 கன்னங்கள் மினுமினுக்க 
 இருதுண்டு உதடுகள் 
 பிரியாமல் யாரைப் பார்த்துப் 
  புன்னகைக்கிறாள்   நாதியற்ற பாதையில்? "

♥️"உயிர் வேட்கை‌" எத்தனை குற்றங்கள் புரிந்தாலும்  கோடிக் குற்றங்களானாலும் தண்டனை ஒன்றே தான் அது "வாழத்துடிப்பது."

 
♥️ ரசனை என்ற தலைப்பில்..
 
"அதற்கு விடை கிடைத்துவிட்டால் நீ மனிதன் 
விடை எட்டாவிட்டால் நீ இறைவன். "

  ♥️மனங்களின் அசைகளாக ....
  
"வீட்டு வாசலில் கைவிடப்பட்ட வெட்டிக்கிழடுகள் இங்கிருந்தே துண்டு போட்டு சொர்க்கத்தில் கடவுளுக்குப் பக்கத்தில் இடம் பிடிக்கிறார்கள்

இவைகள் சிறு துளிகளே!

♥️ஏன் கவிதை எழுதுகிறாய். யாருக்காக எழுதுகிறாய் என் அவ்வப்போது கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு. இன்று வரை திட்டவட்டமாக எந்த பதிலையும் எட்ட முடியவில்லை. கவிதை எனக்குள் நிகழ்கிறது. இதை தடுக்கவோ நிறுத்தவோ தெரியவில்லை எனக்கு. நிகழும்வரை நிகழ்ந்து விட்டு போகட்டும்!
                                 -ஜெ.பிரான்சிஸ் கிருபா

நன்றி :
Ms சுகந்தி,

கருத்துகள் இல்லை: