RM.072
248/150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி :
ஒன்பதாம் வாரம்: சிறுகதைத் தொகுப்புகள் நாடகங்கள் நாவல்கள்
சிறுகதைத் தொகுப்புகள் ..3✓
நாடகங்கள் ...................2
நாவல்கள். ...........1
______
மொத்தம். 6 ( 81 )
______
" வாக்குமூலம்".
வாசந்தி எழுதியது.
கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு .
முதல் பதிப்பு 2007 விலை ரூபாய் 90 மொத்த பக்கங்கள் 288.
ஆசிரியர் குறிப்பு:
வாஸந்தி,மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது., என்று விக்கிபீடியா தகவல் தருகிறது.
#####
தனது முன்னுரையில் ஆசிரியர் வாசந்தி இவ்வாறு கூறுகிறார் :
எனக்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம் உண்டு .தோட்டத்தை உருவாக்கும் பணிக்கும் படைப்பிலக்கியம் பணிக்கும் அபூர்வ ஒற்றுமை இருப்பதாக தோன்றுகிறது .
கதைக்கு தேர்ந்தெடுக்கும் கருவை மனதில் அசை போட்டு புரட்டி கிளறி ஊறப்போட்டு சிந்திப்பதற்கு ஒப்பாக விதை விதைப்பதற்கு முன் நிலத்தை தயார் செய்ய வேண்டும் .சரியான விதைகளை பக்குவமாக பதப்படுத்திய பாத்திகளில் புதைக்க வேண்டும் .அவற்றில் எத்தனை முளைத்து ஆரோக்கியமாக வளரும் என்பது தெய்வ சித்தம் போல ஒரு மர்மமான விஷயம் முளைத்து தலைநிமிரும் வரை மனசு தினம் தினம் எதிர் நோக்கி படபடக்கும் .இலை துளிர்த்து பொட்டுக்கட்டி இதழ் விரித்து அற்புத வண்ணக் கலவையை காட்டி சிரிக்கும் போது எனது உழைப்பின் மூலம் புலன்களுக்கு எட்டாத அமானுஷ்ய சக்தி ஒன்று ஓர் அற்புதம் சாத்தியமானதே உணர்த்துவது போல நெஞ்சு சிரிக்கும் .
சிறுகதை எழுதும் அனுபவம் அத்தகையது .திடீரென்று மனதில் ஒரு பொறி ஒன்று பற்றும்.அதை கதைக் கருவாக பயன்படுத்த கற்பனை விரியும் .சில சமயங்களில் பொறி பற்றியவுடன் அசுர வேகத்துடன் வார்த்தைகளாய் தாளில் கொட்டும் .கை தானாக எழுதிக் கொண்டு போகும் .நம் கட்டுக்குள் அடங்காதது போல .
சில சமயங்களில் அது நீரு பூத்த நெருப்பாக உள்ளே கமுக்கமாக அமைந்திருக்கும்.
சிறு கதையை ஆரம்பிப்பது சிரமம் என்றால் முடிப்பது அதைவிட சிரமம் என்கிறார் வாசந்தி அவர்கள் தனது முன்னுரையில்.
#####
இனி இந்தப் புத்தகம் குறித்து பார்த்து இந்த புத்தகத்தில் மொத்தம் 27 சிறு கதைகள் எழுதப் பட்டிருக்கிறது.
படு களம்.
அடையாளச் சிக்கல் .
ஆகாசத்தில் ஓர் இடைவெளி.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை .
இருபத்தி ஒன்பது கட்டளைகள்
மரவாரி.
சேதி வந்தது .
வராத பதில் .
துணை.
படிமங்கள் .
வழிப்பறி .
யக்க்ஷன் சொன்ன சேதி.
பயம் .
பேரணி .
பெயர் எதுவானாலும் .
மரணம்.
ஈரம் .
விடுதலை .
மழை .
விஸ்வரூபம் .
வாக்குமூலம்
என்று மொத்தம் இருபத்தி ஒரு கதைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
வாக்குமூலம் பேரணி பெயர் எதுவானாலும் ஈரம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை போன்ற அரசியல் பின்னணி கொண்டவர் கதைகளை படிக்கும்போது கோபமும் துயரமும் ஆட்கொள்ளும் .
ஆசிரியர்களின் இந்த எழுத்தினால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்ற இயலாமை சோர்வைத் தரும் என்றாலும் படிப்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த தான் செய்கிறது.
வாக்குமூலம் கதை இதுதான்.:
ஒரே வீட்டில் உள்ள 14 சொந்தங்களை எரித்துக் கொன்று விடுகிறார்கள் அரசியல் காவல்துறை செல்வாக்கு மிக்க
ரவுடிகள் .
தப்பி ஓடிவிட்ட மகளும் தாயும் தம்பியும் மட்டுமே காவல்துறையில் ரிப்போர்ட் செய்கின்றார்கள் .நேரில் பார்த்த சாட்சியாக 70 பேர்கள் குறிக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்கப் படுகின்றார்கள் .40 பேர் மட்டுமே வருகின்றார்கள் .நீதி துறை நீதிபதி கேள்வி கேட்கும் பொழுது ,சரியாக பார்க்கவில்லை ,எனக்கு கண்ணுக்கு தெரியவில்லை என்று சாட்சிகள் ஒவ்வொன்றாக தடம் புரண்டு மழுப்பி விடுகின்றன பயத்தின் காரணமாகவும் அரசு வக்கீல் காவல்துறை ரவுடிகளின் மிரட்டல் காரணமாகவும்
இந்த மகளும் தாயும் தம்பியும் சாட்சி சொல்ல வரும்போது வழிநெடுக உள்ள மக்கள் எல்லோரும் அவர்களை மிரட்டுகிறார்கள். சாட்சி சொன்னால் மீதியுள்ள உறுப்பினர்களும் கொல்லப் பட்டு விடுவார்கள் என்று .ஆனால் தனது சொந்தங்கள் 14 பேரை இழந்த அந்த மகள்
உண்மை சொல்லிவிட வேண்டுமென்று என் மனத் துணிவோடு வருகிறாள். நீதித்துறை கூண்டில் ஏறினார் .கொலை செய்தவன் வழியிலேயே இடைமறித்து மிரட்டுகிறான் ,நீதித்துறையை வளாகத்தின் உள்ளேயும் வந்து அமர்ந்து கொண்டு பார்வையாலேயே மிரட்டுகிறார் , இவளைப் பார்த்து நீதிபதி கேட்கிறார் ,"சொந்தம் நீ தானே .காவல்துறையிடம் ரிப்போர்ட் கொடுத்து இருந்தாய் .நீ பார்த்தாயா ?"என்று கேட்கிறார் .
"நான் எதையுமே பார்க்கவில்லை "என்று மக ளும் தாயும் தம்பியும்
சொல்லி வந்துவிடுகிறார்கள் என்பதாக கதை முடிகிறது.
*******
மரணம் யக்ஷன் கேட்ட கேள்வி, பயம் விடுதலை போன்ற கதைகள் ஆசிரியரின் நேரடியாக கண்ட விஷயங்களால் அதிர்வினால் எழுதப்பட்டவை .
மனித மனத்தில் ஏற்படும் வக்கிரங்கள் அவற்றுக்கு காரணமான பயங்கள் சிறுமைகள் ஏமாற்றங்கள் ஊடகங்களில் ஆக்கிரமிப்பால் மரத்துப் போன உணர்வுகள்.....எல்லாமே அதிர்ச்சி தருபவை. அவற்றுக்கெல்லாம் காரணங்களை ஆராய்வதே படைப்பு இலக்கியவாதிக்கு,கதை எழுதும் ஆசிரியர்களுக்கு சுவாரசியம் மிக்க ஒன்று .
மனிதநேயமே எழுத்தில் உந்துதல் என்பதால் அந்த சுவாரசியம் ஆன்மீக தேடலாக பரிணமிக்கும் போது இலக்கியம் பிறக்கிறது .
நீதி சொல்வது எழுத்தாளனின் பணி அல்ல. ஏனென்றால் விடையைத் தேடும் பயணத்தில் இருப்பவர்கள் எழுத்தாளர்கள் .பயணத்தின் இறுதியில் விடை கிடைக்கும் என்பது நிச்சயமில்லை .எழுத்தாளர்களுக்கு அந்த பயணம் தான் முக்கியமே தவிர விடை அல்ல.
எல்லா பயணங்களும் வெளிச்சத்தை நோக்கி தான் செல்கின்றன ,இருட்டை நோக்கி அல்ல .மனித மனங்களின் செயல்பாடுகளை அலச முற்பட்ட அந்த கதைகளின் முடிவில் ஆசிரியருக்கு விடை கிடைக்குதோ இல்லையோ சற்று வெளிச்சம் படிக்கின்ற நமக்கு கிடைக்கிறது.
###
####
மர மாரி ,29 கட்டளைகள் ,படிமங்கள் ஆகிய கதைகளில் சுற்றுச்சூழல் பறவை மிருகங்கள் தாவரங்கள் ஆகியவற்றுக்கு மனிதனால் ஏற்படும் பாதிப்பினால் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடுகள் தான் இந்தக் கதைகள்.
கற்பனைக் கதைகள் என்றாலும் நமது மனதில் சற்று சஞ்சலம் ஏற்படுத்தத்தான் செய்கிறது.
படிமங்கள் கதை ,*கணவனை இழந்துவிட்ட ஒருத்தியை தனி வீட்டில் அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கிறார் .பிள்ளைகளை அழைத்தும் போகமல் இருக்கிறாள் .
இப்படிப்பட்ட நிலையில் ஒரு பெண் கதவைத் தட்டி உள்ளே வந்து தனது அனுபவங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி ,தனியே இருக்க வேண்டாம் என்றவாறு அவளை ஒரு வித மன குழப்பத்துக்கு ஆளாக்கி தெளிவு படுத்தி பிறகு அவளின் பிள்ளைகளுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வரச் செய்து ஒரு வருடமாக தனித்தவம் செய்த அவளை அழைத்துப் போகுமாறு செய்கிறார் என்பதுதான் படிமங்கள் கதை.
*****"""
துணை ,மழை ,செய்தி வந்தது ,வராத பதில் ,வழிப்பறி ஆகியவை ஒரு பெண் சார்ந்த பார்வையில் எழுதப்பட்டவை.
ஆசிரியரும் ஒரு பெண் என்பதால் அவரது பார்வையில் இந்த கதைகள் புதிய பரிமாணம் பெறுகிறது.
துணை:
அருமையான கதை .இது காமினியை பெண் பார்க்க வருகிறார்கள் .அலுவலகத்தின் தலைமை நிர்வாகி அவள் என்பதால் சிலபல காரியங்கள் செய்து முடித்து விட்டுத்தான் வீடு திரும்ப வேண்டிய கட்டாய நிலை அவளுக்கு .
அப்பா தொலைபேசி மூலம் நினைவுபடுத்துகிறார் .இவளால் முடியவில்லை நேரத்திற்குச் செல்ல. இரவு மணி ஏழு முப்பது ஆகிவிடுகிறது .
கவலையோடு வீடு திரும்புகிறாள் .வழியில் ஏகப்பட்ட போக்குவரத்து பிரச்சினைகள் ,சிக்னல் பிரச்சினைகள் .
தன் அம்மா இறந்து விட தான் காரணமோ என்று அஞ்சுகிறாள். 35 வயது ஆகிவிட்ட நிலையில் தான் கல்யாணம் செய்து கொள்ள வில்லையே என்ற கவலைதான் அம்மாவின் சாவுக்கு காரணமோ என்று மனம் கொள்கிறாள் .
சுற்றத்தார் பேசுவது நண்பர்கள் பேசுவது ஒரு உலகம் பேசுவது எல்லாம் நினைத்துக் கொண்டே வருகிறாள்.
தனக்கு பிடித்தமான யாரும் அமையவில்லை என்பது ஒருபுறமிருக்க தனது உத்தியோகத்திற்கு சரி சமமாகவோ அல்லது சற்று ஏறக்குறைய இருந்தால் பரவாயில்லை .குறைவான பணி என்றால் இன்பிரியாரிடி காம்ப்ளக்ஸ், தாழ்வு மனப்பான்மை வந்து குடும்ப அமைதி போய்விடும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வருகிறாள்.
அந்த வீட்டில் விளக்கு ஏற்றப்படாமல்
இருளிலே அமர்ந்திருக்கிறார் அப்பா
தன் தனி அறையில் தனியாக .
என்னப்பா என்று கேட்க அவர் இன்னும் சாப்பிடவில்லை, பசிக்குது வாமா என்று சாப்பிடுகிறார்கள்.
வந்தவன் சொல்லிய வார்த்தைகள் அப்பாவுக்கு மனதை மிகவும் வாட்டியது .என்ன என்றால் பெண்ணுக்கு வயது 35 ஆகிவிட்டது .எப்படி இருப்பாளோ கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டான் பெண் பார்க்க வந்தாவன் .
அதைக் கேட்டவுடன் அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது . வெளியே போடா நாயே என்று சொல்லிவிடுகிறார் .தனது மனைவி இறந்ததற்கு தான்தான் காரணம் என்றும் மகள் அல்ல என்றும் கூறுகிறார் .பிறகு தனது மனைவி சொன்னபடியே மகளுக்கு எப்போது மனம் விரும்புகிறதோ அப்பொழுது துணை தேடிக் கொள்ளட்டும் என்று சொல்வதாக கதை முடிகிறது.
ஆசிரியர் இன்னும் விரிவாக பெண்ணின் மனதை விவரித்து வைத்திருப்பார் .அவரும் பெண்ணல்லவா.
புதிர்த்தன்மை கொண்ட வாழ்க்கையின் வசீகரம் மகத்தானது என்பதால் நம்பிக்கையே எல்லா எழுத்துக்கும் ஆதாரம் .அதன் பலத்தை நம்பியே இலக்கியவாதிகள் தொடர்ந்து எழுதி வருவதாக நினைக்கிறேன்.
########
வாசந்தி அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர், பத்திரிக்கையாளர் ,பயண கட்டுரையாளர். பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் .
குறிப்பாக பெண்ணியச் சிந்தனைகள் இவரது எழுத்தில் அழுத்தமாக வெளிப்படுவதை நன்கு உணரமுடியும் .
மனித மனங்களின் மெல்லிய உணர்வுகள் அதன் பின்னணியில் உருவாகும் மனப்போராட்டங்கள் ,
பாச பரிவர்த்தனைகள் , ஏக்கங்கள் ,சமுதாய அக்கறை எல்லாம் அற்புதமாக பின்னிப்பிணைந்து ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகின்ற விதம் ஆசிரியரின் எழுத்தாற்றலுக்கு மிகுந்த மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நன்றி :
திரு. கருணா மூர்த்தி,
வாசிப்பை தேசிப்போம்,
முகதூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக