RM.072
259/150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி :
பத்தாம் வாரம்: கட்டுரைத் தொகுப்புகள், கவிதை தொகுப்புகள்.
கட்டுரைத் தொகுப்புகள் . ...
கவிதைத் தொகுப்புகள்.....4✓
______
மொத்தம். 4 ( 92)
______
" முறிந்த சிறகுகள் ".
கலீல் ஜிப்ரான்.மொழியாக்கம் ஆ.மா.சகதீசன் .நேஷனல் பப்ளிஷர்ஸ் மொத்த பக்கங்கள் 104 முதல் பதிப்பு 2004 இரண்டாம் பதிப்பு 2011 விலை ரூபாய் 40.
உலகிற்கு அரேபியாவின் பரிசு கலீல் ஜிப்ரான் .இவரது ஆசிய சிந்தனைகளை கண்டு உலகம் பிரமித்தது .இவரால் லெபனான் நாடு பெருமை பெற்றது.
இலக்கிய உலகில் சிகரங்களைத் தொட்டவர் .ஜிப்ரான் ஈடுஇணையற்ற சொல்லாற்றலால் காலத்தை வெல்லும் சொல் வகைகளைப் படைத்து அளித்தார்.
கவிஞர் ,கட்டுரையாளர் ஆசிரியராய் நாவலாசிரியராய் சிற்பியாய் நாடக ஆசிரியராக பன் முகங்கொண்டு திகழ்ந்த கலீல் ஜிப்ரானின் மனிதநேய நெஞ்சம் வானை போல் விசாலமானது .அவரது சமுதாயப் பார்வை தெளிவானது திட்டவட்டமான உறுதியானது.
அவர் எழுதிய இந்த ஞானக்களஞ்சியம் அற்புதமான தத்துவ ஞான கருவூலம். கவிதை தேன் சொட்டும் கற்பக மலர் தோட்டம் இது.காடு கமழும் கற்பூரச் சொற் சித்திரங்கள்.நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் இதில்.
தொட்டால் கை மணக்கும் என்பார்களே அப்படித்தான் சொன்னால் வாய் மணக்கும்; நினைத்தாலே நெஞ்சினிக்கும்: இதயத்தையே மலர்வனம் ஆக்கும் ;பூமி மண்ணில் சிலிர்ப்புகள் ; இலக்கிய வானில் மின்னல்கள் இவை.
ஜிப்ரானின் இலக்கிய உலகில் சாத்தான் மகாஞானம் பேசுகிறது .அந்த ஞானம், மகான்களின் ஞானங்களை எல்லாம் விழுங்கி ஜீரணித்து விடுகிறது. பைபிள் விளக்கம் அளிக்கிறது .மத விருட்சத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கிறது. கடவுளின் மீது புதிய வெளிச்சம் வீசுகிறது. சாத்தானின் ஞான உரை கேட்டு அஞ்ஞான இருளிலிருந்து அறிவு வெளிச்சத்தில் பிரவேசிக்கும் பாதிரியார் திகைப்பு அடைந்தது போலவே நாமும் பிரமித்துப் போகிறோம்.
ஜிப்ரானின் எழுதுகோல் தீண்டலில் பூக்கள் வேதாந்தம் பேசுகின்றன. சொத்தைப்பல் அரசியல் விஞ்ஞானம் பேசுகிறது .பேய் பிசாசு பூதங்கள் பேரழிவின் தீப்பந்தம் ஏந்தி வந்து நம்மைத் திகைக்க வைக்கின்றன .
இந்த இருபதாம் நூற்றாண்டில் கலீல் ஜிப்ரானின் பாதிப்புக்கு உள்ளாகாத படைப்பாளியை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .
மகாஞானி ஓஷோவை மிகவும் பாதித்தவர் கலீல் ஜிப்ரான் .
######₹#
ஆசிரியர் குறிப்பு:
ஆ.மா.சகதீசன் கலீல் ஜிப்ரானின் பித்தர் என்று கூறுவதை விட பக்தர் என்று கூறுவதே சரியாக இருக்கும் .
அவருக்கு கலீல் ஜிப்ரானே தெய்வம் .அவருடைய நூல்களைப் படிப்பது ஆராதனை செய்வது போல.
"கலீல் ஜிப்ரானே !உங்களை ஒரு தமிழனாக துடிக்கிறேன் . தமிழ் தாய்க்கு உங்கள் நூல்கள் அனைத்தையும் அணிகலனாக்கி மகிழ வைக்க ஏங்குகிறேன்.".என்கிறார் சகதீசன் .
அந்த ஏக்கம் வெறும் ஏக்கமாகவே நின்றுவிடாமல் ஜிப்ரானின் 20 நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .அதிகமாக மொழி பெயர்த்தவர் இவர்தான்.
#####
"கண்ணீர்க் காவியம் "என்று அப்துல் ரகுமான் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
கலீல் ஜிப்ரான் ஒரு விஞ்ஞானி. ஞானக் கடலில் மூழ்கி அற்புதமான முத்துக்களை எடுத்து வந்து உலகிற்கு தந்தவர் .
குர்ஆனுக்கு அடுத்ததாக அரபி மொழியை உலகறியச் செய்தவர் ஜிப்ரான் தான் .
அவர் எழுதுகோல் ஆட்டோமன்
பேரரசையே அசைத்து விட்டது .
ஆனால் அதே நேரத்தில் மொழி வீணையில் அமர கானங்களை மீட்டியது.
ஒவ்வொருவருக்கும் ஒரு செல்மா இருப்பாள் .
ஆனால் ஜிப்ரான் தன் கண்ணீரை காவியமாக்கியது போல் மற்றவர்களால் முடியுமா என்பது ஐயமே .
அந்த கண்ணீர் காவியம் தான் முறிந்த சிறகுகள்
பெயர் முறிந்த சிறகுகள் என்று இருந்தாலும் இலக்கிய வானத்தில் மிக உயரமாகப் பறந்த நூல் இது என்கிறார் அப்துல் ரகுமான்.
###₹
என்னுரை என்று ஆசிரியர் ஆ.மா.சகதீசன் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.:
கலீல் ஜிப்ரானின் 20 நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.
என் மொழிபெயர்ப்பு மிகவும் சுருக்கமாகவும் நீண்ட சொற்றொடர்கள் இன்றி அழுத்தமாகவும் அழகை உள்ளத்தில் பதியும்படி அமைந்துள்ளது.
எந்த வயதினரும் படித்து ரசித்து சுவைக்க முடியும்.
முறிந்த சிறகுகள் என்ற தொடர் உதயமாக காரணமாக இருந்தவர் கலீல் ஜிப்ரானின் தாயார் கமீலா.
அழகு அறிவு அடக்கம் ஆற்றல் பணிவு தாய்மை தெய்வீகத்தன்மை ஒழுக்கம் தியாகம் இனிய குரல் வளம் இசை ஞானம் எல்லாம் ஒழுங்காக பெற்ற தாய் தான் கமீலா.
மேரி எலிசபெத் அக்ஸல் என்பவர் லெபனான் நாட்டு பெண்மணி .
பள்ளிக்கூட முதல்வர் சொந்தமாக பாஸ்டன் நகரில் பள்ளிக்கூடம் நடத்தியதும் ,ஜிப்ரானின் உயர்வு திறமையை அறிந்து ஊக்குவித்து பண உதவி செய்து புத்தகங்களை எல்லாம் திருத்தி, ஒழுங்குபடுத்தி பதிப்பிக்க
உதவி, வழிகாட்டியாய் ,God Mother போல அமைந்தவர்.
எகிப்து நாட்டில் பத்திரிக்கை நடத்தி வந்த மே கெய்டானும் ஜிப்ரானும் உள்ளத்தால் உணர்வால் புணர்ச்சி பழகா காதலர்கள் .
முதல் பிரதி முறிந்த சிறகுகளை அவருக்கு அனுப்பி வைத்தார் .அவர் தான் இதன் கதைக் கருவை மறுத்தார் .
இந்த நூலை பல முறை படித்தால்தான் அதன் இனிமை செழுமை புனிதம் புரியும் ..
செல்மாவின் சமாதியில் மலர் தூவுங்கள்,"என்கிறார் ஆசிரியர்
தனது முன்னுரையில்.
##₹
இனி இந்த முறிந்த சிறகுகள் குறித்து பார்ப்போம்:
மொத்தம் பத்து முத்து அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது முறிந்த சிறகுகள் காவியம்.
1. துயரத்தின் சகாப்தம்.
2. விளையாடும் வீதி
3.கோயிலில் நுழைந்தேன் .
4.வெண் ஒளிக்கதிர் .
5.சீறிப்பாயும் விதி
6.எரியும் தணல் ஏரி.
7.மரணப் பொற்கோயில் .
8.ஏசு கிறிஸ்துவுக்கும் இஷ்டாருக்கும் இடையே...
9.பலிபீடத்தின் மேல்
10.சாவிற்கு பிறந்த குழந்தை.
இந்த தலைப்புகளில் முறிந்த சிறகுகள் காவியம் படைக்கப்பட்டுள்ளது.
கலீல் ஜிப்ரான் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
எனக்கு வயது 18 .செல்மா கராமி எவ்வளவு அழகான மடந்தை.
என் காதல் கண்களைத் திறந்தவள் அவளை.ஆத்மாவில் துடித்து எழச்செய்தார் அவள் விரல்களில் என்ன தீச்சுடர் இருந்ததோ ?காதல் நந்த வனத்திலே என்னை அழைத்துச் சென்று ஒரு அழகிய உலகையே காண்பித்தாள் .அங்கேயே கழிந்த நாட்கள் கனவுகளே .!
செல்மா கராமி ,அவள் அழகின் உருவம் ;காதலின் இரகசியங்களை வெளிப்படுத்தினார். என்னை கவிஞன் ஆக்கினான்.
முதற்காதல்! மறக்க முடியாத முதல் காதல் .நினை ப்பதே மகிழ்ச்சி. உணர்வே கவிதைகளின் கரு .நினைக்க நினைக்க இனிக்கும் .சுவைக்கும் .
ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு முதல் காதலி இருப்பாள் . அவளை இரவிலும் பகலிலும் ,நினைவிலும் கனவிலும் உயிரோடு ஆனந்த கவிதைகளில் நீரூற்றாய் திகழ்வாள்.
நான் கற்பனையில் மிதந்தேன் ;இயற்கையை தேடினேன் ;நூல்களில் ஆழ்ந்தேன் ;எல்லா இடங்களிலும் செல்மா கராமி
தோன்றினாள் ;முத்தமிட்டாள் .காதிலேயே கவிதையை புகன்றாள்; ஒளியூட்டினாள் .காதல் கோபுரம் போல உயர்ந்தாள்.
ஆதாமுக்கு ஏவாள். எனக்கு செல்மா.
ஏவாள் ஆதாமை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு அழைத்து வந்தார். செல்மா என்னை உலகிலகினின்று சொர்க்கத்திற்கே அழைத்துப் போனார் .
என் வாழ்வும் ஆதாமின் வாழும் போலவே அமைந்தது .காதல் சொர்க்கத்தை இழ. தேடுகின்றேன்;
பாடுகின்றேன் வாடுகின்றேன்.
"செல்மா"என்று வாழ்நாளெல்லாம்
கூவுகின்றேன்.
எஞ்சியது அவள் நினைவு. கண்ணீர் ஏக்கம் துயரம் வேதனை என் அழகு செல்மா இறந்துவிட்டாள்.என் காதல் உள்ளம் உடைந்தது .உயர்ந்த சைப்ரஸ் மரக்காட்டினிலே அவள் கல்லறை .அது அசையாது ;நான் உ லவுகின்றேன் .
அவள் உடலின் தாதுப் பொருட்கள் மண்ணோடு மண்ணாகி மரங்களை வளர்த்து ஓங்கி உயற்கி.
என் இதயமான கல்லறையிலே செல்வா அழகு காதல் ஏக்கம் மரணம் எல்லாவற்றையும் வளர்க்கின்றார் . வான் முட்ட உயர்கின்றன .
ஓ!என் இனிய இளைய பெய்ரூட் நண்பர்களே !அடர்ந்த மரங்கள் ,அமைதியான அவள் கல்லறை ,நில்லுங்கள் .என் பெயரைச் சொல்லுங்கள் .கட்டாயம் செல்மாவிற்கு கேட்கும் .
இங்கேதான் கடல் கடந்து வாழும் கலீல் ஜிப்ரானின் நம்பிக்கை காதல் இன்பம் சுகம் எல்லாம் புதைக்கப்பட்டுள்ளன .!செல்மா, உன்னையே எண்ணி எண்ணி கண்ணீர் கடலிலே மிதக்கின்றேன் .நீயே நெஞ்சில் நுழைந்தாய் , நிரைந்தாய்; உயிரில் ஊறிவிட்டாய் .கல்லறையைத் தொட்டு முத்தமிடுங்கள் ..மலர்மாலை சூழ வாழ்த்துக்கள் .
"செல்மா! செல்மா!! என்று கூவுகின்றான் ஜிப்ரான் என்று முழங்குங்கள் ," என்று கலீல் ஜிப்ரான் கூறுகிறார்.
####
எல்லாக் கவிஞர்களிடமும்
துயரமும் வேதனையும் வாழ்க்கையின்
முறிந்த சிறகுகளாய் அவர்களுடனே வாழ்கிற போது -- ஜிப்ரானிடமும்
அவை வாழ்ந்திருக்கின்றன.
ஆகவே தான் ஜிப்ரானின் எல்லா எழுத்துக்களிலும் துயரத்தின் சாயலும் தொடர்ந்து வருகிறது.
இவருடைய முறிந்த சிறகுகளுக்கு இணையான ஒரு காதல் காவியத்தை எந்தப் படைப்பாளியும் இதுவரை படைத்ததில்லை .இந்த நூலைப் படிக்கிற எல்லோருமே ஜிப்ரானிடம் இதயத்தைப் பறி கொடுத்தே ஆகவேண்டும்
ஜிப்ரானின் நூல்களை பெய்ரூட் நகரம் தீவைத்துக் கொளுத்தியது .அதனால்தான் இன்றுவரை அந்த நகரம் தீ நாக்குகளின் கோரப்பிடியில் துப்பாக்கி குண்டுகளின் ஓங்கிய சத்தத்தில் சிக்கித்தவிக்கிறது.
இப்போதைய லெபனான் பெய்ரூட் விமான நிலையத்துக்கும் அதன் சாலைக்கும் ஜிப்ரானின் பெயரை வைத்திருக்கிறார்கள் .
அதைவிட ஜிப்ரானின் எண்ணங்களை உலகமெங்கும் பரப்ப வழி செய்திருக்கலாம்.
ஒரு பெண்ணின் பார்வை ஆணிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் .அதே பெண்ணின் ஒரு சொல் அவனை செல்வந்தனாக ஆக்கும்.ஆனால் ஆணின் ஒரே ஒரு வார்த்தை அவனை வறியவனாக்கி விடும் என்கிறார்ஜிப்ரான்.
இறுதியாக எனது கோரிக்கை.
#முறிந்த சிறகுகளை தொடுகிற நீங்கள் காதலில் தோற்றுப் போன ஆண்களா?
அப்படி என்றால் உங்களை விட்டுப் பிரிந்து போன காதலிக்கு எப்படியாவது இந்த நூலை வாங்கிப் பரிசாக அளியுங்கள்.
#₹₹
நீங்கள் பெண்களா?
காணாமல் போன உங்கள் காதலின் மேன்மையை அறிந்து கொள்ள இந்த நூலை வாங்கி உங்களின் பழைய காதலருக்கு பரிசாக அளியுங்கள்.
நன்றி :
திரு கருணா மூர்த்தி,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக