16 அக்., 2021

நூல் நயம் : துயில் - எஸ் ராமகிருஷ்ணன்

" துயில் ".
எஸ் ராமகிருஷ்ணன் .உயிர்மை பதிப்பகம் முதல் பதிப்பு 2010 .இரண்டாம் பதிப்பு 2014 விலை ரூபாய் 460 .மொத்த பக்கங்கள் 526.

துயில் .
துயில் என்றால் என்ன ?தூக்கம்!
 துயில் யாருக்கெல்லாம் வரும் ,யாருக்கெல்லாம் வராது . துயில் எப்பொழுது கொள்ள வேண்டும் .; எப்பொழுது கொள்ளக் கூடாது.
      இங்கு ஒரு பாட்டு கூட எனக்கு நினைவுக்கு வருகிறது .

* துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதே னின்று *என்கிற இந்த  பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
     துள்ளித் திரிகின்ற பருவத்தில் துயில் கொண்டாலும் அது நோய்தான் போலும்.
             துயில் என்கிற தலைப்பை ஆசிரியர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று நீண்ட நேரம் யோசித்தேன் .இந்த புத்தகத்தை நான் வாங்கி ஆறு மாதமாக கிடப்பில் போட்டுவிட்டு இப்போது முப்பது நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன்.
      துயில் என்கிற தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் நன்கு இயங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது .
     தூங்குகிற நேரத்தில் சில உறுப்புகள் நன்கு இயங்கும் .
         உதாரணத்திற்கு இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை  நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு இயங்குவதற்காகத்
தம்மை  ஆயத்தப்படுத்திக் கொள்ளக்கூடிய நேரம் *ஈரலுக்கு.*
     துயில் என்கிற தூக்கம் நன்கு இருக்கும் போதுதான் மூளையில் மெலட்டோனின் என்கிற ஒரு சுரப்பி சுரக்கும் .அந்த சுரப்பி தான் எல்லாவற்றுக்கும் மூலகாரணமான ஆரோக்கியத்தை அளிக்கும்.

       பகலில் விழித்திருந்து உழைக்க வேண்டும் .இரவில் படுத்திருந்து ஓய்வெடுக்க வேண்டும்.
 இது இயற்கை நீதி.

       இதற்கு மாறாக பகலில் தூங்கி இரவில் விழித்து வேலை செய்தால் மெலட்டோனின் சுரக்காது .நோய் தலைதூக்கும் .
     நமது இந்திய இளைஞர்கள் இரவில் வேலை செய்து ஏராளமான நோய்களை விலைக்கு வாங்குகிறார்கள்.
    மயில் போன்று துயில் தோகை விரித்து நமக்குள் களியாட்டம் செய்ய வேண்டும் .அப்பொழுதுதான் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் . இல்லையென்றால் நோய் பற்றிக் கொள்ளும் .இந்த நோய் குறித்து நோய்மை குறித்து அது தீர்க்கும் வழி குறித்து எல்லாம் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

      நானும் பிறந்த குழந்தையிலிருந்து திருமணமாகும் வரை மூச்சு சம்பந்தமான பிரச்சினைகளினால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறேன் .எனது சிறுவயதில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பள்ளிக்கூடம் போகவே மாட்டேன் .அந்த அளவுக்கு  நுரையீரல் பிரச்சனை. 
           நாட்டு மருந்து வீட்டு மருந்து அலோபதி மருந்து சித்த மருந்து எல்லாம் உட்கொண்டு பயனில்லை .நாட்டு மருந்து சாப்பிட்டு ஒரு நாள் முழுக்க உப்பு இல்லாமல் வெறும் அரிசி சோறு மட்டும் எதுவும் கலக்காமல் உண்ண வேண்டிய ஒரு பத்தியம் நிலை .

         அப்பொழுது கல்லபாடியிலிருந்து தயிர் விற்றுக் கொண்டு வரும் ஒரு ஆயா என்னை உட்கார வைத்து கதை சொல்லி ஆறுதல் படுத்தி ஆற்றுப்படுத்தி அந்த வெறும் சோறு  எனக்கு ஊட்டி விட்டு தன் பணிக்கு செல்வார் .
    சென்ற மாதம் கூட எனது மனைவிக்காக வேண்டி ஒரு பத்து நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை .செவிலியர்கள் ,ஆயாக்கள் எல்லா பணிகளையும் பார்க்கின்றார்கள். ஒரு நோயாளிக்கு இங்கு* எல்லா பணி * என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் .தெய்வத்தின் மறுபிறவிகள் அந்த செவிலியர் தான் .

      அப்போது எனது முகநூல் நண்பர்களும் தோழர்களும் தோழிகளும் தொலைபேசி மூலம் ஆறுதல் படுத்தினார்கள். ஒரு தோழி தினமும் சண்முக கவசம் எழுதி மனைவியின் வலியை பாதி குறைத்தார்கள்.
        இவர்களையெல்லாம் ஆசிரியர் கதையில் வடித்துள்ள ஒரு 
*கொண்டலு அக்கா*
பாத்திரத்தில் பொருத்திப் பார்க்கிறேன்.

     1990களில் சென்னை ரெட்ஹில்ஸ் செங்குன்றம் அருகில் உள்ள சோழவரம் பக்கம் உள்ள ஒரு கிராமத்தில்  ஒரு தர்கா உண்டு. மாதாமாதம் ஒரு பௌர்ணமி நாளில் வேண்டியவர்கள் வேண்டிக் கொண்டவர்கள் எல்லோரும் அங்கு சென்று இரவு முழுக்க இருந்து விட்டு வருவார்கள் .நான் கூட ஒரு முறை சென்று வந்திருக்கிறேன் என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்வதற்காக வேண்டி .
       அது போன்ற ஒரு தர்கா நெல்லூர் 
அருகிலும் உள்ளது.
.      மேலும் வேளாங்கண்ணி மேரி மாதா கோயில் உள்ளது .
     இதுபோன்ற ஒரு தளம் தான் இந்த நாவலில் வருகின்ற *துயில் தரு மாதா * ஆலயம் .
     இந்தஆலயம் தான் இந்த கதைக்கு முக்கியமான தளம்.

#####
எஸ் ராமகிருஷ்ணன் குறித்த அறிமுகம் நம் தமிழ் வாசகர்களுக்கு தேவையில்லை.
####

             முன்னுரையில் எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
       ஒரு விருட்சம் கண்ணுக்குத் தெரியாமல் வளர்வதைப் போன்றதே நாவல் எழுதுவதும்.
          என் வரையில் ஒரு நாவல் என்பது நான் வளர்த்தெடுத்த ஒரு விருட்சம் .ஆனால் என் விருப்பப்படி மட்டுமே அது வளரவில்லை . அது தன் இயல்பில் தனது மூர்க்கத்தில் தன் போக்கில் வளர்ந்திருக்கிறது.
                       நோயுற்ற மனது கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது .நினைவுகளை அதை இடைவிடாமல் நெய்கிறது.பிதற்றலைப்  போல அது முன்பின்னாக நிகழ்வுகளை ஒன்று சேர்க்கிறது .
             மருத்துவமும் கல்வியும் மிக அரிய சேவைகள் என்று எப்போதும் உணர்கிறேன். இந்த இரண்டைப் பற்றியுமே ஒரு வெளிப்பாடுதான் இந்த நாவலும் கூட.
            நோயாளிகள் மருத்துவரிடம் செல்வதை காட்டிலும் அதிகமாக கடவுளிடமே தங்கள் நோய்மை தீர்க்கச் சொல்லி மன்றாடுகிறார்கள் .அதற்காக பயணம் செய்கிறார்கள் .உபவாசம் இருக்கிறார்கள் . காணிக்கை தருகிறார்கள் .அந்த நம்பிக்கைய உலகெங்கும் ஒன்று போலவே இருக்கிறது .நோயைப் பற்றி பேசாத மதமே உலகில் இல்லை. பிணி  நீக்கத்தில் மதம் ஆற்றும் பங்கினை  ஆராய்ந்து அறிய வேண்டி இருக்கிறது.   
             நாம் வாழும் வாழ்க்கை முறையும் எண்ணங்களும் செயல்களும் இச்சைகளுமே நோய்க்கு காரணமாக இருக்கின்றது. அதைக் குறித்த ஒரு விசாரணையை தான் இந்த நாவல் மேற்கொள்கிறது.
            "ஒரு எழுத்தாளனாக நான் நோய்மை யுறுதலின் நினைவுகளையும் அதன் விசித்திர அனுபவங்களையும் எனது புனை களமாக கொண்டு இருக்கிறேன் ."

         "வாழ்வனுபவங்களும் புனைவும் இணைந்து உருவானதே இந்த நாவல் ,"",என்கிறார் தனது முன்னுரையில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்.

######
     இனி துயில் நாவல் குறித்துப்
 பார்ப்போம்:

           நோய் தான் நாவலின் முக்கியக் கருப்பொருள், நோயாளிகளைப் பற்றி இதற்கு முன்பு யாரும் இவ்வளவு நுட்பமாக எழுதியதேயில்லை.

   அதனால்தான் ஆசிரியரும் இந்த புத்தகத்தை மருத்துவத்தை மக்கள் சேவையாக நினைக்கும் மருத்துவர்கள் யாவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்.

   முப்பத்தி இரண்டு அத்தியாயங்களில் இந்த கதை எழுதப்பட்டு இருக்கிறது .
      முதல் அத்தியாயம் ஆத்திகுளம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆரம்பிக்கிறது.
       தெக்கோடு துயில் தரு மாதா கோயிலில் ஆனி மாதம் உற்சாகம் துவங்கியதும் பகல் இரவாக ஆட்கள் பயணம் போவதற்காக ஆத்திகுளம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து போவதாக இருக்கிறார்கள்.
    எல்லோருமே நோயாளிகள் . துயில் தரு மாதா கோயிலுக்காக செல்கின்றவர்கள்.
   கால் முடமானவர்கள், சயரோக காரர்கள் இடுப்பு வாதம் கொண்டவர்கள் ,தொழுநோயாளிகள் ,
முடக்குவாதகக்காரர்கள் ,வலிப்பு நோயாளிகள் ,மேகவெட்டை கண்டவர்கள் , எலும்புருக்கி தாக்கிய நோயாளிகள் , ஊமைகள் ,பைத்தியங்கள் ,குருடர்கள் ,
செவிடர்கள் , பித்த வாத காரர்கள் , காமாலை கொண்டவர்கள், கால் ஆணி ,மூலம் ,பவுத்திரம், சிரங்கு சொறி படை கண்டவர்கள் ,இப்படி எண்ணிக்கையற்ற நோயாளிகள் ஒன்றுதிரண்டு ஊசி கிணற்றில் குளித்து உபவாசமிருந்து ஜெபித்து பிரார்த்தனையின்  வழியே நோய்மை நீங்கி போகிறார்கள் தெக்கோடு.

        நோய்மை குறித்து இந்தளவுக்கு விரிவான நாவல் வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா  ? தெரியவில்லை.
       
         இத்தனை நோயாளிகள், இத்தனை நோய்மைகள், இத்தனை நோய்க்கான காரணங்கள் என்று விரிந்து செல்லும்போது மனம் கசிந்து கொண்டே இருக்கிறது.
      
          கரிசல் ரயில் நிலையத்தின் விவரிப்பும் கோடைகால பகல்வேளையும் கண்முன்னே காணும்படியாக இருக்கிறது .
         நாவல் இரண்டு பகுதியாக உள்ளது, முதல்பகுதி நோயாளிகளின் வருகை. இரண்டாம் பகுதி தெக்கோடில்
மாதா கோயில்.
   
       அழகர், சின்னராணி செல்வி மூவரும் கோயில் திருவிழாவுக்காக செல்கின்றார்கள். கோயில் பாதிரியார் அழகர் கடை போடுவதற்கு சின்ன ராணியை நேரே பார்த்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்ள இவர்கள் முன்னதாக செல்கின்றார்கள்.

      இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வித கதை பின்னணி உண்டு.
     அழகர் அப்பா அடித்ததால் வீட்டை விட்டு ஓடி பழனி ஹோட்டலில் வேலைக்கு சேருகிறான். ஜிக்கி என்ற விபச்சாரவிடுதி நடத்தும் பெண் அழைத்ததும் அவளுடன் செல்கிறான். தனியாக திருவிழாவில் நாககன்னிகை ஷோ நடத்துகிறான். 
          அது சரியாக வராமல் சின்ன ராணியை கல்யாணம் செய்து மனைவியை வைத்து கடல்கன்னி ஷோ செய்கிறான். அவர்களுக்குப் பிறந்த ஒரு ஊனமுற்ற பெண் குழந்தை செல்வியை விடமுடியாமல், சின்ன ராணிவீட்டை  விட்டு வெளியேறும் வழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சித்தப்பா வீட்டுக்கு ஓடி விடுகிறாள் ;இருந்தும் மீண்டும் அவனோடு குடும்பம் நடத்துகிறாள்.

    கடல்கன்னி வேஷம் போடுவதற்காக
சிறுநீர்கழிக்கக்கூட முடியாமல் சின்னராணி படும்பாடு நம்மிடம் இரக்கத்தைத் தோற்றுவிக்கிறது.

       வயிறு நிரம்ப நிறைய தண்ணீர் குடித்து விட்டு சிறுநீர் கழிக்காமல் பயிற்சி எடுத்துக் கொள்கின்ற அவளின் அவஸ்த்தை நம்மை நடுங்கச் செய்து விடுகிறது.

   இவளின்  தோழி நங்கா யாரைப் பார்த்தாலும் கல்யாண பற்றியே பேசுவாவாள்.*காமம் அவள் உடலில் அரும்பி முற்றி *இருந்தது. கல்யாணம் ஆகாமலேயே இறந்துவிட்டாள்.

       அடிபட்ட மிருகம் ஒன்று வலியோடு காலை இழுத்து இழுத்து செல்வது போல முனங்கியபடியே நீண்ட பகலுக்குள் சென்று கொண்டிருந்தது ரயில் .முதல் அத்தியாயம் முடிந்தது.
***
  
இரண்டாம் அத்தியாயம் 1873 கல்கத்தா கிரேட் ஹவுஸ்.

        *ஏலன் பவர்* வெளிநாட்டிலிருந்து வந்த பெண் மருத்துவர். பல இன்னல்களுக்கும் இடையில் சேவை மட்டுமே குறிக்கோளாக கொள்கிறார். தெக்கோட்டிற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட பெண் மருத்துவர்.இறை அவதாரம் கொண்டவர்.  

      நோய்மை நிச்சயம் கடவுள் தரும் தண்டனை இல்லை ஆனால் கடவுள் பற்றி சிந்திப்பதற்கான முதல் வழிகாட்டுதல் என்கிற கொள்கையை உடையவர்.
  நோய் நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததை விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது ..ஒவ்வொரு மனிதனும் நோயிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறான்.அப்போதுதான் அவனுக்கு உடலின் அமைப்பும் நுணுக்கமும் விசித்திரங்களும் புரியத் துவங்குகிறது.
     மதம் என்கிற மாளிகைக்கு நோய் ,பசி காமம் அதிகாரம் என்கிற நான்கும் தேவைப்படுகிறது.

***

எட்டூர் மண்டபம்:

       மதுரைக்குக் கிழக்கே முப்பத்தி ஆறு மைல் தொலைவில் இருக்கிறது. இங்குதான் *கொண்டலு அக்கா * அறிமுகமாகிறார்.
அடிக்கடி என் சிறுவயது நினைவில் வந்து போகும் தயிர் விற்கும் பாட்டியின் கதாபாத்திரம் போன்ற
 கொண்டலு அக்கா,  எட்டூர் மண்டபத்தில் சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ரோகிகளுக்கும் இதர நோயாளிகளுக்கும் முகம்சுளிக்காமல் பணிவிடை செய்கிறாள்.

    ஆனோ பெண்ணோ குளிப்பாட்டுகையில் வித்தியாசம் இல்லாமல் சேவை செய்கிறார் .கேட்டதற்கு மரக்கட்டை பொம்மை போல உங்களை நான் நினைத்துக் கொள்கிறேன் .எனக்கு எந்த உணர்ச்சியும் இல்லை .சேவை ஒன்றே முக்கியம் என்று கூறுகிறார்.

    தண்ணீரைப் போல உன்னதமான மருந்து எதுவும் உலகில் இல்லை .அதுதான் உண்மையான மருத்துவச்சி. தண்ணீரைப் போல மனிதனை ஆறுதல்படுத்த வேறு என்ன இருக்கிறது .உலகின் ஒரே ஔஷதம்  தண்ணீர் என்றபடியே தலை முதல் கால் வரை தண்ணீரால் சுத்தம் செய்ய சொல்வாள் கொண்டலு அக்கா.

    அக்காவைத் தேடி வருஷம் முழுவதும் நோயாளிகள் வந்தபடியே இருக்கிறார்கள் .மண்டபத்தில் உள்ளேயும் வெளியேயும் வீடற்ற நோயாளிகள் தங்கி இருக்கிறார்கள்.

      நோயாளிகளின் துயர் அனைத்திற்கும் கொண்டலு அக்காவாவின் சொற்கள் மருந்தாக அமைந்து விடுவது மட்டுமல்லாமல் மயிலிறகு தடவி துயில் 
கொள்ளச் செய்தது.

        வெட்டவெளியில் உறங்குவது முறையான குளியலும் குறைவான குணம்தான் சிகிச்சையே. அங்கே பிரார்த்தனைகளும் வழிபாடும் எதுவும் கிடையாது.

    மனித வாழ்வில் பசிக்கு அடுத்தபடியாக ஏன் சில சமயங்களில், சிலருக்கு பசியை விட அதிக துயர் தருவது பிணி.

    நோயில்லாமல் மனிதன் எப்படி வாழ முடியும்?
       உலகில் காற்றையும் வெளிச்சத்தையும், குளிர்ச்சியையும், வெக்கையையும் நோயாளிகளே கவனமாய் உணர்கிறார்கள். மற்றவர்கள் அதை வெறும் சூழ்நிலையாகக் கருதிக் கடந்துபோய் விடுகிறார்கள் என்கிறார் ஆசிரியர்.

            மருத்துவம் ஒரு வேலையில்லை, அது மனிதவாழ்வில் ஆற்றப்படும் ஒரு சிறந்த சேவை. அதிலும்  மருந்துவர்கள் சொல்லும் ஆறுதலான  சொற்களை நம்பித்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொல் கசக்கும் போது மனம் நடுங்கத் துவங்குகிறது. ஆறுதலான சொற்களே நம்மை வலியிலிருந்து மீளச் செய்கிறது. குளிரில் நடுங்குவோருக்குக் கதகதப்பான போர்வைபோல ஆதரவான சொற்கள் நோயாளியைப் பாதுகாக்கின்றன. 

        இன்னொரு பக்கம்  நோயாளிகள் மருத்துவரிடம் சொல்வதைவிடக் கடவுளிடம் அதிகம் மன்றாடுகிறார்கள். அதற்காகக் காணிக்கை, விரதம், நேர்த்திக்கடன்கள் என்று பல்வேறு வடிவங்களில் முறையிடுகிறார்கள். நோய்மை பற்றிப் பேசாத மதங்கள் எதுவுமில்லை என்கிறார் ஆசிரியர்.

          பசியை அலட்சியம் செய்பவனிடமும், மிகுதீனி உண்பவனிடமும் உடனே நோய் அடைக்கலமாகிவிடுகிறது என்பதையும். நோய்களுக்கு வைரஸ் கிருமிகளைவிடப் பசிதான்  பெரிதும் காரணமாகயிருக்கிறது என்பதையும் நாவல்  பதிவு செய்துள்ளது.

        மாதாகோவில் கோபுரம், , திருத்தேர், ஓவியங்கள், வெண்கலமணி, அதன் ஓசை, மாடங்கள், கலைஞர்கள், புனிதச் சொரூபங்கள், எக்காளமிடும் வானவர்கள், தேவதைகள், தேக்குமரப் பெஞ்சுகள், ஊசிக்கிணறு, மணிக்கூண்டு, கன்னிமார்மடம், பெரியமைதானம் என்று மிக விரிவாக பத்து நாள் திருவிழாவையும் நாமே நேரில் காண்பது போன்று உள்ளது.

      வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள் தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன இந்த தரிசனமே இந்த நாவல்..
      
       மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான புறவயமான இரண்டு பாதைகள் இருப்பதை அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர்.

   டாக்டர் ஏலன் பவர் கொல்லப்படுகிறார் .காரணம் பல சொல்லப்படுகிறது .உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.  

          காலரா என்னும் கொள்ளை நோய் பரவியது. திராவகத்தில் விழுந்த புழுக்கள் சுருண்டு சாவது போல நோயாளிகள்
 அடிவயிற்றைப் பிடித்தபடியே வலி தாங்க முடியாமல் செத்து விழுந்தனர்.  

     அந்த நாட்களில் எல்லோர் மனதிலும் ரோகத்தை குணமாக்கிய அற்புதங்களை பற்றி ஊர் ஊராக பேசி மக்களை எழுச்சி கொள்ளச் செய்த கன்னியர் மடத்தின்
துறவியான *ருத் சீயாளி *என்ற பெண்ணை பற்றி அழியாத சித்திரம் இருந்தது.
   சின்ன ராணி இருவரை கொன்று விட்டு மதுரை ஜெயிலுக்கு சென்று விடுகிறாள் .தன்னை கற்பழிக்க வந்த அவர்களை கொன்று விடுகிறாள்.
   சின்ன ராணியை பார்ப்பதற்காகவும் ஜாமினில் எடுப்பதற்காகவும் செல்வியோடு அழகர் மதுரை செல்வதாக  கதை முடிகிறது.

   இந்த நாவலில் எல்லா பெண்களும் உச்சத்தில் ஏற்றி வைக்கப்பட்டு சேவையின் மறு உருவமாகவே காட்டப்படுகிறார்கள்.

###₹#₹#########

    எல்லாமே மிகவும் பச்சையாக நிர்வாணமாக எழுதப்பட்டிருக்கிறது.பசி ஆகட்டும் காதல் ஆகட்டும் காமம் ஆகட்டும் நோய் ஆகட்டும் எல்லாமே ஆசிரியரால்
 மிகவும் பகிரங்கமாக பச்சையாக எழுதப்பட்டு இருக்கிறது.

           இவையெல்லாம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் பரந்துபட்ட பயண அனுபவங்களும், ஆழங்கால் பட்ட படிப்பும் சுய அனுபவமும் ,நினைவாற்றலும் மற்றவர்களின் உடனான கலந்துரையாடலும் சாத்தியமாக்கி உள்ளன.

     நாவலில் இருந்து எனக்கு பிடித்த சில வரிகள்:..
    தெக்கொட்டில் எலன்பவர் ஒரு வீட்டில் தங்குகிறாள் .*வீடு என்பது வசிப்பதற்கான இடமில்லை. அது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் * ஆசிரியர் அப்போது குறிப்பிடுகிறார்.

###இடையர்கள் ஒரு  குழுவைப் போல வாழ்ந்தாலும் ,அவர்கள் வாழ்வில் பெற்றோர்களைக் கவனிப்பது தான் பிரதான வேலை .எந்த இடையனும்
பெற்றோர்களின் வஎதைச் சொல்லவே மாட்டார் .அதிக வயதான பெற்றோர்கள் குழந்தை போன்றவர்கள் என்று அவர்களை குளிக்க வைப்பது முதல் உணவு தருவது வரை அத்தனை வேலைகளையும் மகனே முன்னின்று செய்வார் .அவர்களில் ஒரு வயது குழந்தையை தான் அதிக வயதானவராக கருதுகிறார்கள் .காரணம் அவன் பிறப்பதற்கு முன்பு இருந்த காலம் யாவும் அவனோடு சேர்ந்து பிறக்கிறது என்று நம்புவார்கள்.*

##மலையும் மனிதனும் ஒன்று சேர்ந்தால் அற்புதங்களை உருவாக்க முடியும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது போலத்தான் பூமியும் மனி தனும் இணைந்துவிட்டால் அதிசயங்கள் சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.

நோயாளிகளை மனம்விட்டு பாடச் சொல்வார் அது ஒன்றுதான் நோய்களில் இருந்து மீட்கும் வழி என்று அக்கா கூறுவார். அவரும் பாடுவார் இவ்வாறு
*பாபஞ் செய்யா திருமனமே 
நாளைக் கோபம் செய்தேயமன் கொண்டோடிப் போவான் 
பாவம் செய்யாதிரு மனமே*

#உறக்கம் தேனைப் போன்றது அளவோடு இருந்தால் அமிர்தம் அதிகமாகி விட்டால் விஷம் உன் உதட்டில் உறக்கத்தில் தேன் ஒட்டி இருக்கிறது.

* ஏலனுக்கு தரப்பட்ட அந்த புத்தகம் தரங்கம்பாடியில் வாழ்ந்த ஜுகன் பால் எழுதிய *Ziegenbalg's Grammatica Damulica*என்ற புத்தகம் 1716 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் வெளியான முதல் தமிழ் இலக்கண நூல் அது.

**"நோய் நீங்கிப் போனாலும் நோயாளியின் மனதில் தான் எப்படி நோய்வாய்ப்பட்டோம் என்பது அப்படியே தங்கிப் போய்விடுகிறது.அதைமுதலில் அகற்ற வேண்டும்.நோய்மை உற்றவனுக்கு முதலில் தேவை ஆறுதலான சொற்கள்.அவனை அந்த சொற்களே வலியில் இருந்து மீளச் செய்கின்றன.கதகதப்பான போர்வையை போல ஆதரவான சொற்கள் அவனைப் பாதுகாக்கின்றன."

"***கடவுள் ஒரு மனிதனை தண்டிக்க விரும்பினால் அவனுக்கு பசியையும் கொடுத்து சாப்பிட முடியாமலும் செய்து விடுவார்"

"***ஆறுதல் சொல்லி சாந்தப்படுத்த முடியாதபடி தான் பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கை இருக்கிறது..."

"*****நோயாளியிடம் பரிவு கொள்ளத் தெரியாத மருத்துவரைப் போல இந்த உலகில் மோசமானவர்  எவருமில்லை.மருத்துவம் என்பது பணம் சேர்க்கும் தொழில் இல்லை.அது ஒரு சேவை.கைமாறில்லாத சேவை.அது குறைபாடும் போது மனிதன் மீட்சியுறவே முடியாது"

"*****ஈர உடைகள் காற்றில் உலர்ந்து தூய்மையடைவதைப்போல நீங்கள் மனம் விட்டுப் பேசுவதால் மனதில் உள்ள துயரம் குறையக்கூடும்."

***என்னால் நோய் மையின் விசித்திரங்களை கூட புரிந்து கொள்ள முடிகிறது .ஆனால் நம்பிக்கையின் விசித்திரங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. எது விந்தையாக இருக்கிறதோ அதை இயல்பாகவும் ,எது இயல்பாக இருக்கிறதோ அதற்குள் ஒரு விந்தையையும் இவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் .அந்த மன போக்கினை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .ஆனால் அந்த நம்பிக்கைகளை அறிந்து கொள்ளும் போது மட்டுமே நான் இவர்களுடன் ஒருவராக சேர்ந்து வாழ முடியும் என்பது முற்றிலுமாக புரிகிறது.

***
நினைவு தான் நோயின் தாய் போன்று தோன்றுகிறது. நினைவு கொள்ளுதல் என்பது வழியேதான் நோயாளி அதிக துயரம் அடைகிறான் . துர்சொப்பனங்கள் கூட நமக்குள் நினைவுகளாக படிந்துவிடுகின்றன.
          பறவை சுவடு இல்லாமல் வானை கடந்து போவது போல நம் மனதை விட்டு போய் விட வேண்டியதுதானே .
     ஏன் அப்படி நடக்காமல் தூர் கனவுகூட நினைவாகி விடுகிறது.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்." துயில் ".

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நன்றி :

கருத்துகள் இல்லை: