வணக்கம் வாசிப்பாளர் பெருமக்களே
வாசிப்பை ஊக்குவிக்க பல குழுமங்கள் இருக்கின்றன. ஆனால் நம் குழுமம் கொஞ்சம் மாறுபட்டது, வெறுமனே இலக்கியம் பற்றி மட்டுமன்றி சமூக அரசியல் சார்ந்த ஏகப்பட்ட புத்தகங்கள் குறித்தும் இங்கு பதிவுகள் எழுதபடுகின்றன.
ஏதாவது தவறு செய்தால் ''படிச்சவனே இப்படி பண்ணலாமா?" என்று கேட்குமளவு படித்தவர்களை மதிக்கும் இச்சமூகத்திற்கு, தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கும் நாமும் நம்மாள் இயன்றதை செய்ய வேண்டும் என தோன்றுகின்றது.
பெரிதாக ஒன்றுமில்லை. புதிதாக மத்திய அமைச்சரவையினால் ஒரு கல்விக்கொள்கைக்கு ஒப்பதல் வழங்கப்பட்டுள்ளது. அதனை நாமும் வாசித்து பார்க்க வேண்டும்.
இதோ கல்விக்கொள்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு
https://www.amazon.in/dp/B08F7WVD53/ref=cm_sw_r_cp_apa_vZ6kFbCC600W2
இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக கிடைக்கும்.
ஏற்கனவே நம் குழுவின் மூன்றாம் ஆண்டு விழாவிற்கு கல்வி சம்பந்தமான புத்தகங்களுக்கு ஒரு வாரம் ஒதுக்கினோம். இக்கல்விக்கொள்கையை அப்படிப்பட்ட கல்வி சார்ந்த புத்தகமாக நினைத்து வாசிப்போம்.
இக்குழுவில் ஏராளமான ஆசிரியர்கள் இருக்கிறீர்கள். உங்களது கருத்து மிக அவசியம்.
அடுத்த தலைமுறையின் கல்வி குறித்த விசயத்தினை கண்டும் காணாமல் கடக்க விருப்பமில்லை.
இக்கல்விக்கொள்கையினை முழுவதுமாக படித்து, உங்கள் கருத்துகளை இங்கு பகிரலாம். அது ஆதரவாக இருந்தாலும் சரி, எதிர்ப்பாக இருந்தாலும் சரி, பதிவுகளிலும் கமெண்டிலும் முழுக்க நாகரீகமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் குழுமத்தை விட்டு முழுவதுமாக நீக்க படுவீர்கள்.
முழுவதுமாக கொள்கையை படித்து, சொந்த கருத்துகளை மட்டும்தான் பகிர வேண்டும். மற்றவர்களின் கருத்துகளை இங்கு பகிர அனுமதி இல்லை.
வாசிப்போம்
(கிண்டிலில் தரவிறக்குபவர்கள் கீழே ஒரு கமெண்டை போட்டு விடுங்கள் ஒரு கணக்கெடுப்பிற்காக)
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக