26 நவ., 2021

குட்டிக்கதை

கண் பார்வை இல்லாத ஒருவர் 
கோவிலுக்கு வந்தார். 

பூசாரி கேட்டார் :

ஐயா, உங்களுக்குத்தான் கண் தெரியாதே. 
மலை ஏறி, வரிசையில் நின்று, 
இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கிறீர்களே,
கடவுளை உங்களால் தரிசிக்கவா முடியும்...? 

பார்வையற்றவர் சொன்னார் :

ஐயா, நான் கடவுளை தரிசிப்பதில் 
அவருக்கு என்ன ஆதாயம்...?

கடவுள் என்னை பார்த்தால் போதும். 
என் கஷ்டங்கள் எல்லாம் ஓடிவிடும் 
என்று நம்பித்தான் வந்திருக்கிறேன்."

இதுதான் உண்மையான பக்தி. 
உண்மையான ஆர்வம். 
உண்மையான நம்பிக்கை.

கருத்துகள் இல்லை: