RM.072
296/150+
நான்காம் ஆண்டு விழா வாசிப்பு போட்டி :
பன்னிரண்டாம் வாரம்: பழந்தமிழ் இலக்கியங்கள்.
பழந்தமிழ் இலக்கியங்கள்:. 1
மொத்தம். 130
"சிலப்பதிகாரம்".
சிலம்பொலி செல்லப்பன் .
பாரதி நிலையம் மறுபதிப்பு 2016 .
விலை ரூபாய் 150 மொத்த பக்கங்கள்467..
தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம் .
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி என்பன தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்கள் .அவற்றில் ஒன்றான சிலப்பதிகாரம் காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் தோன்றிய கண்ணகி கோவலன் கதையைக் கூறுகிறது.
நான் முதன்முதலாக ஆறாம் வகுப்பு படிக்கும்போது சிலம்புச் செல்வர் ம பொ. சி அவர்கள் எழுதிய சிலப்பதிகாரம் படித்தேன் .புரியவில்லை என்றாலும் புரிந்து கொள்ள முயற்சித்து படித்தேன் .
அந்தக்கால கண்ணம்பா அவர்கள் நடித்த கண்ணகி சினிமா கதை தூண்டுதல் காரணமாகவே இந்த கதையை படித்தேன் .
அதன் பிறகு டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் எழுதிய பூம்புகார் சினிமா பார்த்து புளங்காகிதம் அடைந்தேன்.
அதில் நாயகன் பாடுவதாக வரும்----- *மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை.*
என்று கோவலன் பாடுவதாக அமைந்த சிலப்பதிகார பாட்டு இன்னும் என் நெஞ்சில் நிழலாடிக்கொண்டு இருக்கிறது .
தேரா மன்னா என்று கண்ணகி சிலம்பைக் கையில் ஏந்தி
நீதி கேட்கும் காட்சியும் என் மனக்கண்ணில் ஆடுகிறது.
அதன்பிறகு சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பேசியதையும் எழுதிய ஓரிரு புத்தகம் படித்திருக்கிறேன் . இப்போது இந்த சிலப்பதிகாரம் புத்தகம் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.
ஓலைச்சுவடிகளை தேடித்தேடி ஆய்ந்து சிலப்பதிகாரத்தை அரும்பத உரை அடியார்க்கு நல்லார் உரையுடன் முதன்முதலில் அச்சில் பதித்த (1892 ஆம் ஆண்டு )பெருமை தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாதய்யர் அவர்களையே சாரும்.
இந்த காப்பியம் முதலில் தமிழிலேயே செய்யப்பட்டதால் முதல்நூல் வழிநூல் சார்பு நூல் என்னும் நூல் வகை மூன்றில் முதல் நூலாகக் கொள்ளப்படுகிறது இக்காப்பியத்தை இயற்றியவர் இளங்கோ அடிகள் இவர் வங்கியில் இருந்து அரசாண்டு வந்த சேர மன்னன் நெடுஞ்சேரலாதன் சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ அடிகளின் இயற்பெயர் தெரியவில்லை அரசனின் இளைய மகன் என்பதால் இளங்கோ என்றனர்.
நாடக சூத்திரம் நாட்டிய சூத்திரம் மிகவும் சிலாகித்து எழுதப்பட்ட விபரங்கள் எல்லாவற்றையும் இந்த நூலில் சிலப்பதிகாரத்தில் காணலாம்.
சிலப்பதிகாரம் புகார் காண்டம் மதுரைக் காண்டம் வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டிருக்கிறது .தொடக்கத்தில் பதிகம் உரைபெறு கட்டுரை என இரண்டு பகுதிகள் உள்ளன.
சிலப்பதிகார புகழ்:
இத்தகு பெருமை கொண்ட சிலப்பதிகாரத்தை பலரும் உளம் குளிர பாராட்டி புகழ்ந்துள்ளனர்.
*பழுதற்ற முத்தமிழின் பாடல் *
என்கிறது அடியார்க்கு நல்லார் உரை .
*ஓரும் தமிழ் ஒரு மூன்றும் உலகு இன்புற
வகுத்துச்
சேரன் தெரிந்த சிலப்பதிகாரம் *--
என அடியார்க்கு நல்லார் உரை சிறப்புப் பாயிரம் கூறுகிறது.
*நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு * என பாரதியார் பாடி களி.
*தேனிலே ஊறிய செந்தமிழின் -- சுவை தேரும் சிலப்பதி காரதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் -- நிதம் ஓதி உணர்ந்தின் புறுவோமே *
என சிலம்பை சுவைத்து செல்ல பாடுகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை .
சிலம்பை ஓதுவோம் !
சிந்தை தெளிவோம்.!!
#####*
ஆசிரியர் குறிப்பு:
சிலம்பொலி செல்லப்பன். சு.
சிலர் பேசினால்
சந்தன தமிழுக்கு
சவ பெட்டி தயாரித்து
அதில் ஆணி அடிப்பது போல் இருக்கும் .
இவர் பேசினால் .
அந்த தமிழுக்கு
சந்தத் தொட்டில் கட்டி அதை
ஆட்டுவது போல் இருக்கும் .
இன்று
நம்மிடையே வாழ்ந்த இவர்
அந்த நாள் திருவிக.வின் பதிப்பு ; அதனால்தான் தமிழுக்கே
இவர் மேல் ஒரு மதிப்பு.
சிலம்பொலி சு. செல்லப்பன் தமிழறிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் எனும் ஊரில் பிறந்த சிறந்த பேச்சாளர்.
கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர்.
மாவட்டக் கல்வி அலுவலர்
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர் 1968
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பரிந்துரைக்கும் குழுவின் தலைவர் .
சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் உட்படப் பல நூல்களை எழுதியிருக்கிறார்.
சிலம்பொலியாரின் அணிந்துரைகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
##########*
ஆசிரியர் தனது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
சேரன் செங்குட்டுவன் ஒரு நாள் மனைவி வேண்மாள் நம் தம்பி இளங்கோ தண்டமிழ் ஆசான் சாத்தன் ஆர் ஆகியோருடன் மழை வளம் கண்டு இருந்தனன் அவனை காண வந்த மலைக் குறவர்கள் ஒரு பெண் தன் கணவனோடு விண்ணுலகு சென்றதை தாங்கள் கண்கூடாகக் கண்ட கூறி அவர் யார் மகளோ எந்த நாட்டோடும் அறிவோம் என்றனர் செங்குட்டுவன் கண்ணகி பற்றிய அறியாதிருந்த நிலையில் அருகிலிருந்த சாத்தனார் கண்ணகி கோவலன் கதையைக் கூறினார் இளங்கோவடிகள் சாதனம் பெருமைமிக்க இந்த வரலாற்றை காப்பியமாக செய்வோம் என்றார் சாத்தனார் அடிகளே இக்கதை மூவேந்தர் குமுறியது ஆதலின் இதனை நீங்களே ஏற்றுங்கள் என்றார் அவ்வாறு இளங்கோ அடிகள் இக்காப்பியத்தை செய்தார்.
கண்ணகியின் கால் சிலம்பில் கருப்பொருளாகக் கொண்டு அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்பதும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்பதும் ஆகிய மாபெரும் உண்மைகள் உணர்த்தப்படுகின்றன பாதுகாப்பிற்கு அடிகள் சிலப்பதிகாரம் என்று பெயரிட்டார் இந்தக் காப்பியத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் பரவி வருவதால் இது முத்தமிழ் காப்பியம் என்றும் இயல் இசை நாடகத் தொடர் நிலைச் செய்யுள் என்றும் கூறப்படுகிறது நாடகம் உறுப்புகளை கொண்டிருப்பதால் நாடக காப்பியம் என்றும் உரையும் பாட்டும் இடையிடையே கலந்து வருவதால் உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் அழைக்கப்படுகிறது..
சிலப்பதிகாரம் கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இளங்கோவடிகள் சமய நடுநிலையாளர் என்பது உறுதியாகிறது.
இந்த நூலுக்கு அரும்பதவுரை என்றும் அடியார்க்கு நல்லார் உரை என்றும் இரண்டு பழைய உரைகள் உண்டு.
தமிழை கற்று தேர்ந்தவர்கள் மட்டுமே சிலப்பதிகார பாடலை மூலத்தை அறிந்து இன்புற முடியும் .
ஓரளவே கற்றவரும் சிலம்பு செய்தியை சிந்தையில் கொள்ளத் துணை செய்யும் நோக்குடன் இத்தெளிவுரை
வெளிவருகிறது.
புத்தகத்தின் இடப்புறம் பாடலும் வலப்புறம் பொருளும் அப்பகுதிக்கு உரையும் ஆக இந்த நூல் அமைந்துள்ளது .பொருள் விளங்கும் முறையில் மூலத்தில் சொற்கள் பிரித்து தரப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பண்டைக் கால வரலாறுகள் சமயங்கள் கதைகள் முதலியவற்றை சிலம்பில் விரிவாக அறிகிறோம் உறவு வாணியம்பாடி அரசியல் மாற்றி பற்றிய பல அரிய செய்திகள் சிலம்பில் கிடைக்கின்றன நாட்டிய இலக்கணம் மேடை அமைப்பு திரைச்சீலைகள் ஒளி அமைப்பு பாடலாசிரியர் குரல் ஆசிரியர் ஆசிரியர் இசை ஆசிரியர் பாடல் ஆசிரியர் தலைமையாசிரியர் தலைக்கோல் பட்டம் பாடல்கள் என்ன வகைகள் பற்றி சிலம்பில் தான் முதன்முதலில் முதன்முதலாக அரங்கேற்று காதை வழி விரிவாக அறிகிறோம் கானல் வரி வேட்டுவ வரி ஆய்ச்சியர் குரவை குன்றக்குரவை அம்மானை வரி வரி ஊசல் வரி வள்ளைப்பாட்டு முதலிய ஆடல் பாடல்களையும் சிலம்பில் தான் முதன் முதலில் விரிவாக அறிகிறோம் புகார் மதுரை நகர அமைப்பு மிக விரிவாக கூறப்பட்டிருக்கிறது உங்கள் வருகையை மாதவியின் மடல்கள் நமக்கு அருமையாக குணப்படுத்துகின்றன காண அருகில் உள்ள பாட்டுகள் எல்லாம் அகப்பொருள் துறை அமைய பாடப்பட்டுள்ளன வேட்டுவ வரியும் காட்சிகளிலும் கட்சி காஞ்சி எனும் அவர்களுக்கு உரிய துறைகள் பல வந்துள்ளன காப்பியத்தில் அகமும் புறமும் அருமையாக இணைந்து வந்துள்ளன.
ஒரு பெண் அரசனிடம் தானே சென்று வழக்குரைத்து வென்றதும் , அரசியல் பிழைத்ததற்காக பாண்டியன் உயிர் விட்டதும் ,கணவன் உயிர் தேடிச் செல்வாள் போல பாண்டிமாதேவியின் உடன் உயிர் துறந்ததும் ,பெண்ணை முழுமைப்படுத்தும் வகையில் சேரன் செங்குட்டுவன் கோயில் எடுத்து வழிபட்டதும் ,தமிழர் ஆட்சியின் காட்சியையும் பண்பு மேம்பாட்டையும் உணர்த்துகின்றன", என்று தனது முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார்.
#################
இனி இந்தப் புத்தகம் சிலப்பதிகாரம் குறித்து பார்ப்போம்.
1. )மனையறம்படுத்த காதை:
கோவலனின் பெற்றோர் கோவலனும் கண்ணகியும் இல்லறத்தை நல்லறமாக நடத்துவதை காண விரும்பி அவர்களை தனியே குடி வைத்தனர் .
2.)அரங்கேற்று காதை :
புகார் நகரில் கணிகையர் குலத்தில் பிறந்தவள் மாதவி .ஆடல் பாடல் அழகில் சிறந்தவள் .ஐந்தாம் வயதில் தொடங்கி ஏழு ஆண்டுகள் நாட்டியம் பயின்று 12ஆம் வயதில் சோழ மன்னன் முன் அரங்கேறிட, அரசன் அவளுக்கு தலைக்கோலி பட்டம் அளித்து 1008 கழஞ்சு பொன் பரிசும் தந்தான். மாதவியின் தாய் ஒரு பொன் மாலையை கூனி ஒருத்தி கையில் தந்து நகர நம்பியர் நடமாடும் தெருவில் நிற்கச் செய்து இந்த மாலையை வாங்குபவர் மாதவிக்கு மணமகன்ஆகலாம் என அறிவிக்கச் செய்ய, கோவலன் அந்த மாலையை வாங்கி மாதவி வீடு சென்று அவளோடு மகிழுந்து அங்கேயே நிலைத்து நின்று விட்டான் .தன் இல்லத்தை மறந்தான்.
3). அந்தி மாலைச் சிறப்பு செய் காதை :
மாதவியும் கோவலனும் நிலாமுற்றத்தில் நிலவு பயன் கொண்டிருந்தனர். ஊடியும் கூடியும் மாதவி கோவலனை மகிழ்வூட்டினாள் .
கோவலனை பிரிந்த கண்ணகி மங்கல அணியை தவிர வேறு ஏதும் இன்றி வருத்தமே வாடியிருந்தாள்.
4) இந்திர விழா ஊர் எடுத்த காதை:
புகார் நகரம் மருவூர்ப் பாக்கம் பட்டினப் பாக்கம் என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இரண்டிற்கும் இடையில் நாளங்காடி என்னும் கடைவீதி இருந்தது .அந்த நகரில் இந்திர விழா தொடங்கியது .மறவர் குடி வீரர்களும் வேந்தன் வெற்றி கொள்வானாக என தம் தலையை அறுத்து பலியூட்டினர் .நகரிலிருந்த ஐவகை மன்றங்களிலும் பலியிடப்பட்டன .
1008 பொற் குடங்களில் காவிரி நீரை கொண்டு வந்து இந்திரனை மஞ்சன நீராட்டி நகரில் எல்லா கோயில்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன. அறநெறியை சொற்பொழிவுகள் நிகழ்ந்தன
விழாவின்போது கண்ணகிக்கும் மாதவிக்கும் கண்கள் முறையே இடத்திலும் வலத்திலும் துடித்தன.
5) கடலாடு காதை :
மாதவி மண நீரில் குளித்து பல் வகை அணிகலன்களால் தன்னை ஒப்பனை செய்து வந்து கோவலனைக் கூடினாள்.
விழா முடிவில் மக்கள் கடலாட சென்றனர் .அந்த விளையாட்டை காண கோவலனை மாதவி அழைத்தாள் . வெண்கார்கட்டிலில் இருவரும் இருந்தனர்.
6) கானல் வரி:
மாதவி யாழிசைத்து சுருதி கூட்டி கோவலனி்டம் கொடுத்தாள்.
கோவலன் யாழை மீட்டி ஆற்று வரியும் கானல் வரியும் ஆக இசைப் பாடல்களைப் பாடினார் .தலைவன் ஒருவன் தலைவியை நினைத்து ஏங்கி பாடுகின்ற பாடல்களாக அவை இருந்தன .இதில் ஏதோ ஒரு குறிப்பு உண்டு ,இவன் தன் நிலை மயங்கினான் எனக்கருதி , மாதவி யாழினி வாங்கி அவளும் ஒரு குறிப்பு உடையவள் போல வரி பாடல்களைப் பாடினாள்.
யாழிசை மேல் வைத்து ஊழ்வினை
வந்து ஊட்டியதால் கோவலன் அவள் வேறு ஒன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாள் என அவரை விட்டு பிரிந்து சென்றான் .கோவலன் இல்லாமல் மாதவி தனியே வீடு திரும்பினார் .
7) வேனீற் காதை:
தனித்துக் கிடந்த மாதவி வாடினாள் .
"நிலவோடு கூடிய இளவேனில் காலம் பிரிந்து இருக்கும் காதலர்களை துன்புறுத்தும் என்பது நீங்கள் அறியாததா ?" என கடிதம் எழுதி வசந்தமாலையிடம் தந்து அனுப்பினாள் .
"மாதவி நாடக மகள் .ஆதலால் இவ்வாறு நடிப்பது அவளுக்கு இயல்பு" என்று கூறி கடிதம் பெற மறுத்துவிட்டார்.
8) கனாத்திறம் உரைத்த காதை:
கண்ணகியின் தோழி தேவந்தி நீ உன் கணவனை பெறுவாய் என்றாள்.
கண்ணகி அவளிடம் ,"நானும் என் கணவனும் வேற்றுர்சென்றோம் .அங்கு என் கணவன் மீது பழி சுமத்தப்பட்டது .நான் அரசனிடம் வழக்குரைத்தேன் .அதனால் அரசனுக்கும் ஊருக்கும் தீங்கு உண்டாயிற்று .பின்னர் எங்களுக்கு நேர்ந்த நலனைக் கேட்டால் நகைப்பாய்," என்று தான் கண்ட கனவினை கூறினாள் .
" விரதம் இருக்குமாறு "கேட்டுக் கொள்ள , "இது பெருமை தருவது அன்று "என்று மறுத்து விடுகிறாள் கண்ணகி .
அந்த நிலையில் கோவலன் மாதவி வீட்டுக்கு வருகிறான் .வாடிய அவன் முகத்தை கண்டு ,"என் சிலம்புகள் எடுத்துக்கொள்ளுங்கள் " என்கிறாள் கண்ணகி.
";இதனையே முதலாக வைத்து இழந்த பொருளை மீட்ப்பேனென்று கோவலன் சொல்ல இருவரும் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள்.
9) நாடுகாண் காதை:
கோவலனும் கண்ணகியும் காவிரியின் வடகரை வழியே நடந்து ,வழியில் கவுந்தி அடிகள் அவர்களை சந்தித்து தென்கரை சோலையை அடைந்தனர் .அங்கு ஒரு பரத்தையும் காமுகனும் கோவலன் கண்ணகியைப் பழித்து பேசியதைக் கண்டு கவுந்தி அடிகள் அவர்களை நரிகளாக போகுமாறு சாபித்தார் .
மூவரும் பின்னர் உறையூரை அடைந்தனர்.
II மதுரை காண்டம்.
11) காடுகாண் காதை:
கோவலன் கண்ணகி கவுந்தி அடிகள் ஆகிய மூவரும் உறையூரில் இருந்து தெற்கு நோக்கி சென்று ஒரு கோயிலை அடைந்தனர்.
12) வேட்டுவ வரி:
வழிபாடு செய்ய வந்த சாலினி என்பவள் மீது தெய்வம் ஏற பெற்று கண்ணகியை சுட்டிக்காட்டி ,"இவள் கொங்கச் செல்வி; குடமலை யாட்டி; தென்தமிழ்நாடு செய்து செய்த தவக்கொழுந்து ;ஒருமா மணியாய் உலகில் தோன்றிய திருமாமணி ,"என்று கண்ணகிக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
13) புறஞ்சேரி இறுத்த காதை:
மூவரும் மதுரை நோக்கி நடக்கலானார்.
மாதவி எழுதிய கடிதத்தை கோசிக மணி என்பவன் கொண்டுவந்து தருகிறான். மாதவி குற்றமற்றவள் என்பதை உணர்கிறான் .அந்தக் கடிதம் தனது பெற்றோருக்கும் பொருந்தும் என்பதால் அதையே பெற்றோருக்கு சேர்க்குமாறு கோசிகனை கேட்டுக்கொண்டான். மதுரையின் புறத்திலிருந்த புறஞ்சேரி யில் தங்கினர்.
14) ஊர்காண் காதை:
கோவலன் ரத்தின கடை வீதி , பொற் கடை வீதி ,அறுவை வீதி கூலவீதி ஆகிய வீதிகளையும் வேறுசில வீதிகளையும் கண்டு வந்தான்.
15) அடைக்கலக் காதை:
கண்ணகியுடன் மதுரையின் உட்புறத்தே சென்று தங்குமாறு கவுந்தி அடிகளும் மாடலனும் கோவலனிடம்
கூறிக் கொண்டிருந்தனர் .அப்போது மாதரி என்னும் இடைக்குல பெண் அங்கு வந்து காந்தி அடிகளை வணங்கி கோவலன் கண்ணகியை அழைத்துக் கொண்டு கோட்டை வாயிலில் நுழைந்து தன் வீட்டை அடைந்தாள்.
16) கொலைக்களக் காதை:
கண்ணகியின் ஒரு சிலம்பை விற்பதற்காக கோவலன் கடைவீதிசென்று பொற்கொள்ளர்களிடம் சிலம்பினைத் தந்து அதனை விலை மதிப்பிட முடியுமா என கோவலனும் கேட்டான் .சிலம்பைப் பார்த்த பொற்கொல்லன் தான் முன்னர் அரண்மனையில் திருடிய சிலம்பை அது ஒத்து இருந்தது கண்டு திருட்டுப் பழி
அவன் மீது சுமத்த எண்ணி,
இதை அரசனிடம் காட்டிவரும் வரும் வரை இங்கு இரு என்று அவனை தன் வீட்டில் இருக்கச் செய்து சென்றான் .
அரசியின் சிலம்பை திருடியவன் இப்போது என் வீட்டில் தங்கியிருக்கிறார் என்று சொல்ல ,அரசன் ஆராயாமல் காவலரை அழைத்து அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வா என்று கூறுகிறார். காவலர்களும் ஏதும் ஆராயாமல் அவனைக் கொன்று விட்டனர் .கோவலன் உடல் அறுபட்டு குருதி கொப்பளித்தது.
.பண்டை வினை
செயல்படத் தொடங்கியது .மன்னனின் வளையாத செங்கோல் வளைந்தது.
17) ஆய்ச்சியர் குரவை:
ஆயர்பாடியில் பல்வகை தீய குறிகள் தோன்றின .ஏழு கன்னியர்களை நிறுத்தி ஏழிசையின் பெயற்களை அவர்களுக்கு பெயர்களாக தந்து குரவை ஆடினர்.
18) துன்ப மாலை:
ஒருத்தி கோவலன் கொலையுண்ட செய்தியைச் சொன்னாள்.
கண்ணகி எழுந்தாள்;
பூமியிலே விழுந்து புரண்டாள் .
"காய்கதிர்ச் செல்வனே !நீ உலகில் நடப்பவை அனைத்தையும் அறிவாயே! என் கணவன் கள்வனா ?சொல் ",என உரக்க கூவினாள் .
"உன் கணவன் கள்வன் அல்லன் .அவனைக் கொன்ற இவ்வுரை நெருப்பு எரிக்கும் ",என ஒரு குரல் எழுந்தது.
19) ஊர்சூழ் வரி:
கண்ணகி தன் மற்றொரு சிலம்பை எடுத்துக்கொண்டு ஊரின் உள்ளே சென்றாள் .மன்னனின் வளையாத செங்கோல் வளைந்தது ஏன் எனத் தெரியாது மக்கள் மயங்கினர் .
கோவலன் உடலைக் கண்ணகிக்கு காட்டினர். கண்ணகி கோவலன் உடலை பார்த்து ,"பொன்போன்ற உன் மேனி புழுதியில் புரள்வதோ ?தாரணிந்த உன் மார்பு தரையில் கிடப்ப தோ?
என பலவாறு புலம்பி ,"இந்நகரில் கற்புடைய பெண்கள் இருக்கிறார்களா ?சான்றோர்கள் இருக்கிறார்களா ?தெய்வமும் இருக்கிறதா ?இருந்தால் இப்படி நடக்குமா?" என புலம்பினாள் .
கண்ணகி கோவலனைத் தழுவ அவன் உயிர் பெற்று எழுந்து ,அவள் கண்ணீரை தன் கையால் துடைத்து "நீ இங்கேயே இரு " எனச்சொல்லி வானுலகம் சென்றான் .கண்ணகி என் சினம் தணிந்தாலன்றி என் கணவரிடம் செல்லேன் . தீமை செய்த அரசனிடம் சென்று நீதி கேட்பேன் ,"என முடிவு கொண்டாள்.தான் கண்ட கனவை நினைத்தாள் .வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மன்னனிடம் நீதி கேட்க அரண்மனையை நோக்கி சென்றாள்.
20) வழக்குரை காதை:
பாண்டியன் கோப்பெருந்தேவி தீங்கு வரப் போவதாகக் கனவு கண்டாள்.
கண்ணகி ,"அறிவற்ற மன்னனுடைய வாயிற் காவலனே !நான் வந்திருப்பதை உரைப்பாய் "என்றார் .மன்னரிடம் தெரிவிக்கிறான்.
கண்ணகியைப் பார்த்து அரசன் கேட்கிறான் "பெண்ணே நீ யார் "?
" ஆராயாது தீர்ப்பு வழங்கிய மன்னா !நான் காவிரிப்பூம்பட்டினத்தவள். அநியாயமாக உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி .என் பெயர் கண்ணகி ,"என்றாள்.
" கள்வனைக் கொள்வதுஅரச நீதி ", என்றான் மன்னன்.
" என் கால் சிலம்பின் பரல்கள் மாணிக்கம் "என்றாள் கண்ணகி.
" என் தேவியின் சிலம்பு முத்து பரல்கள் கொண்டது," என்று சொல்லி கோவலனிடம் இருந்து பறித்த சிலம்பைக் கொண்டு வரச் செய்தான். கண்ணகி சிலம்பை எடுத்து உடைத்தாள்.
மாணிக்கப் பரல்கள் சிதறி மன்னனின் வாயில் தெரித்தன.
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன் ?என அரியணை மீதிருந்து எழுந்து வீழ்ந்து பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இறந்தான்.
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என பாண்டிமா தேவியும் உடன் உயிர் நீத்தாள்.
21) வஞ்சினமாலை :
பாண்டியன் இறந்த பின்னரும் கண்ணகியின் சினம் அடங்க வில்லை விழுந்துகிடந்த கோப்பெருந்தேவியை விளித்து புகார் நகரில் வாழ்ந்த பத்தினியரின் வரலாற்றைக் கூறி இத்தகையவர் பிறந்த ஊரில் பிறந்த நானும் ஒரு பத்தினி என்றால் ,அரசனையும் நகரையும் அழிப்பேன் என சூளுரைத்தாள் .
தன் இட முலையை கையில் திருகிப் பறித்து மும்முறை சுற்றி எறிந்தாள்.
உடனே தீக்கடவுள் அவள் முன் தோன்றி பத்தினியே உனக்கு பிழை செய்த இவ்வுரை அழிக்க முன்னரே எனக்கு ஓர் ஏவல் இருக்கிறது. எரிக்கும்போது பிழைப்பதற்கு உரியவர் யார் ?"எனக் கேட்டது." நல்லோரை தீண்டாதே ;தீயவரை பற்றுக" என கண்ணகி தீ கடவுளிடம் கூறினாள். மதுரையை அழல் பற்றியது .
22) அழற்படு காதை:
மதுரை மக்கள் வருந்தினர் .பெண்ணுக்கு கொடுமை செய்த இந்த நகர் அழிவதே நல்லது என்றனர் மதுரை மகளிர்.
மதுரை நகர் பொலிவிழந்து காட்சி தந்தது .
அந்தி விழா ஆரண ஒதை முதலியவை இல்லாது ஒழிந்தன .
கண்ணகி வீதிகளில் அங்குமிங்குமாக மயங்கித் திரிந்தாள்.அப்போது மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி அவள் முன் தோன்றியது .
23)கட்டுரை காதை::
மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் நடந்தவற்றிற்காக வருத்தம் தெரிவித்தது .
" மதுரை அழியும் என முன்னரே ஒரு மொழியும் உண்டு. நீலி என்பவள் முற்பிறப்பில் இட்ட சாபத்தால் உனக்கு இந்த நிலை வந்துள்ளது ",என கண்ணகிக்கு எடுத்துக் கூறியது. நீ இன்றைக்கு பதினான்காவது நாள் கணவனை சேர்வாய் ",என்று கூறிச் சென்றது.
கீழ்த் திசையை வாயிலில் கணவனோடு புகுந்த கண்ணகி மேற்றிசை வாயில் துறை யாருமின்றி தனியே வெளியேறினாள் .இரவு பகல் பாராது வைகை கரை கடந்து நெடுவேள் குன்றம் என்னும் மலைமீது ஏறி ஒரு வேங்கை மரத்தின் நிழலில் நின்றாள்.
கணவனை இழந்த 14-ஆம் நாள் தேவர்கள் வானூர்தியில் அங்கு வந்தனர் .கண்ணகி மீது மலர் மாரி பொழிந்து வாழ்த்தினர். கணவனோடு கண்ணகியும் வான ஊர்தியில் ஏறி துறக்கம் சென்றனள்.
III வஞ்சிக் காண்டம்.
24. குன்றக்குரவை:
வானவர் கோவலனுடன் அங்கு தோன்றி கண்ணகியை துதித்து போற்றினர் .கோவலனுடன் அவளையும் வான ஊர்தியில் ஏற்றி விண்ணுலக
சென்றனர் .குறவர்கள் இதனை கண்டனர். கண்ணகி கோயில் எடுப்போம் கொண்டாடுவோம் என்று கொண்டாடினர்.
25) காட்சிக் காதை:
மலைவளம் காணச் சென்ற சேரன் செங்குட்டுவனிடம் குறவர்கள் விஷயமும் சொல்ல,
நம் நாடு அடைந்து மறைந்த தெய்வம் கண்ணகிக்கு சிலை வடிக்க முடிவு செய்தான்.
நாம் வழிபட வேண்டும் என்று அரசி கூறி இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டி கொண்டுவந்து சிலை வடிக்க சேரன் முடிவு செய்தான் . அவனுடைய வடநாட்டுப் பயணம் செய்தி
வஞ்சி நகரில் பறைஅறைந்து தெரிவிக்கப்பட்டது .
26)கால்கோட் காதை:
இமயமலையினின்று வந்த முனிவர்கள் சிலர் சேரன் செங்குட்டுவனைக் கண்டு வட நாட்டு மன்னர்கள் கனகனும் விசயனும் தமிழர் வீரத்தை இகழ்ந்ததைக் கூறினர் ..செங்குட்டுவன் படையோடு இமயமலை சென்று கனகர் விசயர் அவர்கள் தலையிலேயே கல்லைக் கொண்டு வந்து கண்ணகி சிலை செய்ய முடிவெடுத்தார் .அவ்வாறு செய்தான்.
27) நீர்ப்படைக் காதை:
இமயத்தில் இருந்து எடுத்து வந்த கல்லைக் கனக விசயர் தலையில் ஏற்றி சுமக்கச் செய்து கங்கையில் நீராட்டினான்.
அங்கு வந்த மாடல மறையவன்,"மாதவியின் கடல் சோலை பாட்டு ,கனகவிசயர் கலைகளை
நெரித்தது " என்றான்.
அவன் சொன்னதன் உட்பொருளை அறியாத சேரனுக்கு மாடல மறையவன் ,"மாதவி கோவலன் வரலாறு சொன்னான். மேலும் கோவலன் கொலை செய்தி கேட்டு கோவலன் கண்ணகி ஆகியோரின் தந்தையர் இருவரும் துறவு மேற்கொண்டதையும் தாயார் இருவரும் உயிர் துறந்ததையும் கவுந்தி அடிகளும் மாதரியும் உயிர் விட்டதையும் கூறினான் .நெடுஞ்செழியன் மறைவுக்குப் பிறகு சோழ நாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் கூறினான் .பிறகு வஞ்சி நகரில் நுழைந்தான் சேரன்.
28) நடுகற் காதை:
தோல்வியுற்று மாறுவேடத்தில் ஓடியவரை பிடித்து வருதல் வீரம் அன்று என்று சோழனும் பாண்டியனும் கூறியதைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் சினம் கொண்டான் .
சினம் அடங்கி ,வேள்வி ஆற்ற அந்தனர்களை அனுப்பினான் .
கனகவிசயர்களை விடுவித்தான். ஸ்ரீ பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் .
ஆன்றோர் பலருடன் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டத்துக்குச் சென்று அக்கோட்டத்தில் கண்ணகி சிலையை நிறுவினார்.
29) வாழ்த்துக் காதை:
செங்குட்டுவன் பத்தினிக் கோயில் அமைத்ததை மாடலன் வாயிலாக அறிந்த தேவேந்தி , அவள் கண்ணகியின் அடித்தோழி
ஓடி காவற்பெண்டு , ஐயை ஆகியோருடன் மதுரையை அடைந்து நால்வரும் வஞ்சி
நகர் வந்தனர் .சேரனை கண்டனர் .
அப்பொழுது ஒரு சிலம்பு மேகலை வளையல் தோடு பொன்னணி ஆகியவற்றுடன் மின்னல் கொடி ஒன்று வானிலே நிற்பதுபோல கண்ணகி தெய்வ வடிவில் சேரன் செங்குட்டுவனுக்கு காட்சி தந்தாள்.
" பாண்டியன் குற்றமற்றவன் .வானுலக விருந்தினன் .நான் அவன் மகள் .வெற்றி வேல் தாங்கிய முருகன் ஒன்றில் விளையாடுதல் நான் மறவேன் ,"என தெய்வம் கண்ணகி கூறினாள்.
மகளிர் ,மூவேந்தரையும் வாழ்த்திப் பாடினார்.
30)வரந்தரு காதை:
தேவந்தி மணிமேகலையின் துறவு வரலாற்றினைச் செங்குட்டுவனுக்கு சொன்னாள்.
சாத்தன் அவள் மீது ஆவேசித்து மாடலன் கையிலிருந்த கரக நீரை
அங்கிருந்த 3 சிறுமிகள் மீது தெளிக்க சொன்னான் .
கண்ணகியின் தாய் கோவலனின் தாய் மாதரி ஆகிய மூவருமே சிறுமிகளாக பிறந்த இருந்தனர்.
கரக நீர் தண்ணீர் பட்டதும் சிறுமியரும் பழம்பிறப்பு புணர்ச்சி பெற்று அரசினர் அரற்றினர். தேவந்தி பத்தினி கடவுளுக்கு நாள் பூஜை செய்ய அமர்த்தப்பட்டார் .விழாவிற்கு வந்திருந்த கனக விசயரும்,குடகக் கொங்கரும்
மாளுவ மன்னனும் இலங்கைக் கயவாகு மன்னனும் கண்ணகியை எங்கள் நாட்டுக்கும் எழுந்தருள்க என்று வேண்டினர் .
"தந்தேன் வரம் ",என்று ஒரு குரல் கேட்டது .
பிற மன்னர்கள் தம் தம் நாடு திரும்பினர். செங்குட்டுவன் வேள்விச் சாலைக்குச் சென்றான்.
இளங்கோவடிகள் பத்தினித் கோயிலுக்குச் சென்றார். கண்ணகி தெய்வம் தேவந்தியின் மேல் ஆவேசித்து ,அடிகளார் துறவு மேற்கொண்ட வரலாற்றை கூறியது .
இளங்கோவடிகள் உலகத்துக்கு அறிவுரைகள் கூறி கதையை முடிக்கிறார்.
########
படித்து முடித்தவுடன் வீட்டிலிருந்த ஸ்மார்ட் டிவியில் பூம்புகார் படத்தில் வருகின்ற கண்ணகி விஜயகுமாரியின் அனல் பறக்கும் வீரவசனம் கேட்டு கண்ணயர்ந்தேன். கண்ணகி சினிமா கண்ணாம்பாள் கண்ணகி போல கணீர் குரல் அல்ல என்றாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் வருகின்ற கண்ணகி விஜயகுமாரி சொற்கள் விற்கள் போல் துளைத்தன.
அதுபோலவே சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் எழுதிய சிலப்பதிகாரம் நெஞ்சில் களித்தன.;இனித்தன.
சிலப்பதிகாரம் என்னும் காவியத்தில் பல வகை நயங்களும் ஒருங்கே அமைந்து விளங்குகின்றன.
சிலப்பதிகார நூல் நயம் ,
ஆல் நயம் போல்
மால் நயம் போல்
கண்ணுக்குத் தெரியாத
படித்தால் அன்றி அறியமுடியாத
அமுதச்
சுவையாகும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக