#ஆண்டுவிழா
#குழந்தைகள்
#எட்டாம்வாரம்
பெயர் : ரியா ரோஷன்
வகுப்பு: ஏழாம் வகுப்பு
வயது :12
இடம்: சென்னை
புத்தகம் : சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி
விலை: Rs.70
RM ID 179
32/50
*நூலகம் பற்றி:📚📖
எனக்கு நூலகம் என்றால் மிகவும் பிடிக்கும். அங்கு விதவிதமான, அற்புதமான புத்தகங்கள் இருக்கும். அந்த புத்தகங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் நல்ல விஷயங்களுக்கு அளவே கிடையாது.நான் என் வீட்டிலும் ஒரு குட்டி நூலகம் வைத்து இருக்கேன். இந்த கதையும் ஒரு நூலகத்தைப் பற்றி தான்.💁🏻♀️
*சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - கதை :
இந்த கதையில் நந்து என்று ஒரு பையன் இருப்பான். 👦🏻அவன் தான் இந்த கதையின் Hero. அவனுக்கு புத்தகம் படிக்கவே பிடிக்காது. வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருப்பான்.👾 ஒரு நாள் அவன் அம்மா அவனை ஒரு நூலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு பெனி என்ற ஒரு பையனை சந்திக்கிறான். அவன் ஒரு மாய நூலகத்திற்கு நந்துவை அழைத்து செல்கிறான்.📚 அந்த மாய நூலகத்தில் ஆடு, ஒட்டகச்சிவிங்கி, கடல் ஆமை போன்ற விலங்குகளை சந்திக்கிறாங்க.🐐🐢🦒என்ன நடக்கிறது என்பதுதான் இந்த கதையே.நந்து books படிக்கிற பையனா மாறினானா?சாக்ரடீஸ் என்பவர் யார்?என்பது கதையின் suspense.
🤩😲
*கதையில் எனக்கு பிடித்த விஷயங்கள் :
•இந்த புத்தகத்தின் language, படிப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. நாம் பேசிக்கொள்ளும் தமிழிலேயே எழுதியுள்ளார் எஸ் ரா அவர்கள். அற்புதமான கதை!👍🏼
•இந்த கதையில் நிறைய குட்டி குட்டி கதைகள் வரும்.நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் கதைகள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.😇
•இந்த கதை புத்தகம் படிப்பது எவ்வளவு முக்கியம் என்று சொல்லிக் கொடுக்கிறது.படிக்க படிக்க கதை எழுத வரும் என்று புரிய வைக்கிறது.📖
•நந்து ஒரு ஆட்டினை சந்திக்கும் போது அது " புத்தகம் என்பது சொற்களால் நெய்யப்பட்ட மாயக்கம்பளம் அதில் ஏறி எங்கெங்கோ போகலாம்" என்று சொல்லும். இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.🛸
•சின்ன பிரச்சனைகளை உடனையே தீர்க்க வேண்டும். அப்படி தீர்க்கவில்லை என்றால் அது ஒரு பெரிய பிரச்சனையாக ஆகிவிடும் என்ற நல்ல விஷயத்தை எஸ்.ரா அவர்கள் மிகவும் அழகான ராஜா - மந்திரி கதை மூலம் புரியவைத்திருந்தார்.👑
ஆசிரியர் எஸ். ரா : எஸ். ரா அவர்கள் எழுதிய புத்தகங்கள் நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து, மீசையில்லாத ஆப்பிள், பறந்து திரியும் ஆடு, எலியின் பாஸ்வேர்ட் போன்றவற்றை படித்து இருக்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்த writer.
நன்றி
ரியா ரோஷன்
நன்றி :
Ms ரியா ரோஷன்,
திரு எஸ்ரா,
Ms ரம்யா ரோஷன்,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக