Reading Marathon
ID-RM329
17/25
#ஆண்டுவிழா
#சமூக நீதி
நூல் - சொல்லத் தோணுது
ஆசிரியர்- தங்கர் பச்சான்
திரு தங்கர்பச்சான் அவர்கள்
*சொல்லத் தோணுது* என்ற தலைப்பில் 'தி ஹிந்து நாளிதழில்' எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவர் அரசியலை கடுமையாக சாடியிருக்கிறார் . லஞ்சம் ஊழல் பற்றியும் பேசியிருக்கிறார் . தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் இவரது கட்டுரைகளில் தெரிகிறது.
* நாம எல்லோரும் உணவை எந்தளவுக்கு விரும்பி உண்ணுகிறோமோ அந்தளவுக்கு உணவுப் பொருளைத் தயாரிக்கும் விவசாயியை மதிப்பதில்லை. எந்த ஒரு மாணவனும் நான் விவசாயி ஆக மாற வேண்டும் என்று சொல்வதும் இல்லை. அப்படியே ஒரு சிலர் சொன்னாலும் அவர்களை கேலி செய்யும் இந்த
சமுதாயம் . படிக்காதவன் செய்யும் தொழில் விவசாயம் என்று மாயை நம் கண்களை மறைத்துள்ளதான் இன்று விவசாயம் நலிவடைந்து வருகிறது.
* படிக்காத மற்றும் ஏழை மக்களின் திருமணங்கள் தான் தன் சொந்தங்களோடும் இரத்த உறவுகளுடன் எளிமையான முறையில் சீரும் சிறப்புமாக நடக்கின்றன
பணக்கார திருமணங்களில் வீணடிக்கப்படும் உணவுகளை மிச்சப்படுத்தினால் பல மனித உயிர்கள் வாழ முடியும்.
* அந்தக் காலத்தில் சினிமாவில் பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அமையும் . இந்த காலத்து பாடல்கள் எல்லாம் திணிக்கப்பட்டதாகவே இருக்கின்றன.
மனதில் எந்த குழப்பங்கள் இருந்தாலும் நமக்கு உற்ற துணை இந்த பழைய பாடல்கள் தான் . அதை உருவாக்கிய இசை அமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் பாடகர்கள் தயாரிப்பாளர்கள் இவற்றை நம்ம தமிழனுக்காக விட்டுப்போன சொத்துக்கள்.
* கல்வி என்பது வெறும் விவரங்களை கொடுப்பதாக இருக்கக்கூடாது அறிவை கொடுப்பதாக இருக்க வேண்டும்.
இவரது இந்த கட்டுரைகள் படிப்பவர்கள் மனதில் நிச்சயம் எழுச்சி விதை விதைக்கும்.
நன்றி
நன்றி :
செல்வி ஜனனி குமார்,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக