அனைவருக்கும் வணக்கங்கள்.
நீண்ட நாட்களாக இந்த புத்தகம் என்னிடம் இருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஒரு சிறிய நூல். அதுவும் பழமொழி சம்பந்தப்பட்ட நூல் என்பதால் கொஞ்சம் பொறுமையாக படிக்கலாம் என்று இவ்வளவு நாள் தாமதமாகிவிட்டது.
நீதி நூல்கள் அடங்கிய பதினெட்டு நூல்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று குறித்தனர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு காதலையும் , வீரத்தையும் இவற்றினின்றும் அடிவரையில் குறைந்தும் வெண்பாயாப்பினால் அமைந்தும், அறத்தையும் நீதியையும் பாடுபொருளாக கொண்டது. இதில் அமைந்த அறம் பற்றிய நூல் ஒன்று தான் பழமொழி நானூறு.
பழமொழி நானூறு:
இந்நூல் தோன்றியமைக்கான கதை ஒன்று கூறப்படுகிறது. அது நாலடியாரோடு ஒட்டிய கதை, சமண முனிவர்களின் பாடல்களிலே சிறந்த நானூறு வெண்பாக்களைப் பழமொழியாகத் தொகுத்தனர். இவ்வரலாற்றை நாலடியாரைப் பற்றிக் கூறும் இடத்திலே காணலாம். சிறப்பிலே நாலடியாருக்கு அடுத்தபடிதான் பழமொழி என்பதைக் காட்டுவதற்கே இக்கதை வழங்குகிறது.
பழமொழிப் பாடல்கள் அனைத்தும் ஒருவரால் பாடப்பட்ட பாடல்கள் போலவே காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் பெயரும் முன்றுறையரையனார். இந்நூலின் வெண்பாக்கள் மிகவும் கடினமானவை. பல வெண்பாக்களுக்கு எளிதில் பொருள் தெரிந்து கொள்வது கடினம். அதை முயன்று தான் பொருள் கண்டுபிடிக்க வேண்டும். இந்நூலில் திருக்குறளில் கூறப்படுவது போலவே பல சிறந்த அறங்கள் கூறப்படுகின்றன.
தமிழ்ப் பழமொழியின் வகைப்பாடு:
1. அகரவரிசை அடிப்படை (Alphabetical basis)
(எ.கா) 'அ' என்னும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்கும் பழமொழி.
'அகத்தி ஆயிரம் காய்க்காய்த்தாலும் புறத்தி புறத்தியே'
2. அமைப்பு அடிப்படை ( Structural basis)
(அ) ஒரு வரிப் பழமொழி
'அடி நொச்சி நுனி ஆமணக்கா? '
(ஆ) இருவரிப் பழமொழி
'அன்றைக்கு திண்கிற பலாக்காயைவிட
இன்றைக்கு திண்கிற களாக்காய் பெரிது'
3. அளவு அடிப்படை (Size basis)
'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? '
இரண்டு மூன்று சொற்கள் கொண்ட பழமொழி.
4. கருத்து, பயன் அடிப்படை (Functional basis)
(அ) மாற்ற முடியாத இயற்கைத் தன்மைகளைக் கூறும் பழமொழி.
'கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சமும் போகாது'
(ஆ) பாசாங்கு செய்தலைக் குறிக்கும் பழமொழி.
'ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்'
5. பொருள் அடிப்படை (Subject basis)
இது கருத்து, பயன் அடிப்படையினுள் அடங்கும் .
இந்நூலில் பழமொழி - ஒரு கண்ணோட்டம், கல்வி, பொருள், அரசியல், இல்லறம் என்ற தலைப்பில் சங்ககாலத்தை தழுவி பழமொழி, திருக்குறள் இரண்டையும் ஒப்பிட்டு அருமையான அரிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன..
வாசிப்பதற்கு கொஞ்சம் பொறுமை வேண்டும்..நல்ல நூல்..நன்றி..
-------------------------------------------------------
Reading Marathon 2021
42/50
ID : RM 00211
நூல் : பழமொழி நானூறும் தமிழர் வாழ்க்கையும்
ஆசிரியர் : ப. சரவணன்
பக்கங்கள் : 88
பதிப்பகம் : சீதை பதிப்பகம்
----------------------------------------------------
~சரண்யா
நன்றி :
Ms Saranya M,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக