RMID110
143/100+
புத்தகம்: கோடுகளும் கோலங்களும்
ஆசிரியர்: இராஜம் கிருஷ்ணன்.
பக்கம்: 240
விலை:180
இந்த நாவலை எழுதி முடிப்பதற்குள் கதாசிரியரே தேர்ந்த விவசாயியாக மாறி விடுகிறார். மண் பரிசோதனை, உரமிடுதல், என்னென்ன உரம் ,என்ன அளவு அத்தனையும் அத்துப் படி. படிப்பவர்களே கத்துக்கலாம் .அத்தனைக் கச்சிதமான செய்முறையை செவந்தி மூலம் விளக்குகிறார்.
இந்நாவலில் பெண்களின் முன்னேற்றம்
பெண்கல்வி , ஜாதி பாகுபாடு ஒழிப்பு என்ற மூன்று விசயத்தை கதையினூடே உணர்த்துகிறார்
மண்ணையே தெய்வமாக கருதும் விவசாயக் குடும்பத்தில் பிறந்த. செவந்தி தன் சகோதரன் படித்து வேலைக்குச் சென்று விட்டதால் தன் தகப்பனின் நிலத்தில் விவசாயம் செய்கிறாள்.
தான்வா அமைப்பின் மூலம் கற்றுக் கொண்டதை செயல் படுத்தி நல்ல விளைச்சலை எடுக்கிறாள்.
கணவனின் பொறுப்பில்லாத்தனம் அவளை வருத்துகிறது .ஆனாலும் கன்னியப்பன் என்ற இளைஞனின் உதவியோடு நிலத்தில் பயிர்வைக்கிறாள். தந்தையின் ஆதரவு இருப்பதால் அவளால் ஓரளவிற்கு சமாளிக்க முடிககறது.
வயதுக்கு வந்த வுடனே பெண்பிள்ளைகளை பள்ளியை விட்டு நிறுத்தும் அவ்வூரில்
செவந்தியின் மகள் பத்தாம் வகுப்பு வரை சென்றதே பெரிய விசயமாக நினைக்கும் செவந்தி அவளை கன்னியப்பனுக்கு கட்டிவைத்து விட்டால் தனக்கு ஒத்தாசையாக தன்னுடனே இருந்து விடுவான் என கணக்குப் போடுகிறாள்.
ஆனால் அவளின் தாயார் அவனை வேலைக்காரன் என சொல்லி தள்ளி நிறுத்துகிறார்.
தாய் எந்நேரமும் தன் தந்தையையும் வீட்டை விட்டு துரத்திவிட்ட சித்தியையும் இணைத்துப் பேசி அவரை கடுப்பாக்கி விடுவதே வேலை. .மற்ற பெண்களைப்போல் காட்டு வேலைக்குச் செல்வதில்லை. சாமியார்களை நம்புவதும் கணவனுக்கு மந்திரிப்பதுமாக தள்ளுகிறாள்.
சரோ படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கிறாள் தினமும் சைக்கிளில் பள்ளிக்கூடம் போய் வருவது செவந்திக்கு பயத்தை தருகிறது. மகளை கடிந்துக் கொண்டே இருக்கிறாள்.
சித்தியின் மீதான பாசம் அவளை அலைகழிக்கிறது அவளை எப்படியாவது பார்த்து விடத் துடிக்கும் தந்தைக்கு ஆதரவாக நிற்கிறாள்.
தாயும் கணவனும் எதையும் கண்டுக்கொள்வதில்லை
சித்தி தன் பங்கை கேட்க வருகிறாள். அவளுக்கு செவந்தயின் இரட்டை வடச் சங்கிலியை குடுத்து விட்டு அவளின் மேட்டு நிலத்தை செவந்தியின் கணவன் பெயரில் எழுதி விடுகிறார்கள்.
கற்றுக் கொண்ட முறைப்படி வேர்க்கடலை பயிரிட ஆசைப்படுகிறாள்.இதற்கு கணவன் லோன் வாங்கித்தர மறுக்கிறான்.
இதற்கிடையில் அண்ணன் அண்ணியும் வந்து நிலத்தை விற்கும் ஐடியாவைச் சொல்ல தந்தை மறுத்து விடுகிறார்.
மகள் வந்து வயலில் வேலை பழக வைண்டும் என நினைக்கிறாள். செவந்தி . கணவன் மகள் நன்கு படிக்க வேண்டும் என்று சொல்கிறான்.
மகளின் ஆற்றாமை எப்போழுதும் சோறு மட்டுமேவா? இருப்பதைத் தானே செய்ய முடியும்.
பக்கத்து நிலச்சொந்தக்காரரிடம் கடன் பெற்று நிலக்கடலை பயிரிடுகிறாள்.
கன்னியப்பன் லட்ச்சுமி என்ற விதவைப் பெண்ணை மணந்துக் கொள்கிறான்.
சரோ முதல் மதிப்பெண் எடுத்து தேறுகிறாள் மாமனை நம்பி மதுரைக்குச் செல்பவள் அவன் எதுவும் கண்டுக் கொளாளாமல் விடவும் திரும்பி வந்து பாலிடெக்னிக் காலேஜில் பயில்கிறாள்.
செவந்தியுடன் ரங்கனும் சரோவும் சேர்ந்து விவசாயத்தில் பாடு படுகிறார்கள்
இதில் சாந்தி என்ற பெண்ணை செவந்தியுடன் இணைப்பது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
சாந்தி என்றப் பெண் காலனியை சேர்ந்தவள் அவள் இவள் வீட்டிற்கு வருவதும் செவந்தி அவள் வீட்டிற்கு போவதும் என இருவரும் தங்களின் நட்பை வளர்ப்பது செவந்தியின் தாய்க்கு இது பிடிப்பதில்லை.
தான்வா அமைப்பினர் சேவந்தியை தேடி வந்தது இவளுக்கு பெருமையாக இருக்கிறது. கணவனுக்கோ எரிச்சலை தருகிறது.
செவந்தியைப் பார்த்து பல பெண்கள் விவசாயம் செய்ய முன்வருகிறார்கள்.
கோவில் கும்பாபிசேகத்திற்கு வந்த சித்தியை அப்பா பார்கக வேண்டும் என தேடிப்போகிறாள்.
அவரோ நான் தூர வரும்பொழுதே பார்த்து விட்டேன். அவள் பெண்ணுக்கு நீ ஏதாவது செய் என்கிறார்.
விவசாயத்தின் மகிமையை எளியையாக புரிய வைக்கிறார்.
நன்றி :
Ms சுகந்தி,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக